சஞ்சித கர்மா...
மடி சஞ்சி என்று ஒரு வார்த்தை உண்டு.... அவன் சுத்த மடி சஞ்சி என்று ப்ரம்மணர்கள் வீட்டில் அடிக்கடி புழங்கும்...
சஞ்சி என்றால் கொண்டு வருதல்.... மடி என்றால், மடி, ஆச்சாரம், சுத்தம், பழைய சம்பிரதாயமான பழக்க வழக்கங்களை ஒரு பையில் உடன் கொண்டு சென்று, செல்லும் இடத்திலும் அந்த வழக்கங்களை கடை பிடிப்பது....
உதாரணம், நித்ய கர்ம அனுஷ்டானங்களுக்கு உரிய சாதனங்கள், சமிதா தான பொருட்கள் என....
சரி, நமக்குத் தேவை.... சஞ்சி.... சஞ்சித என்றால், நம் உயிர் பூர்வ ஜென்மாவில் இருந்து அனுபவிக்க வேண்டிய நல் அல்லது தீ வினையை /கர்மாவை புதிய பிறப்பில் கொண்டு வரும். இதற்கு பெயர் சஞ்சித கர்மா....
ஒரு ஆத்மாவின் ஒரு பிறப்பில் நல் மற்றும் தீவினை ஒப்பி / சமமாக இருந்து விட்டால் அந்த ஆன்மா, இரு வினை ஒப்பி மல பரிபாகம் அடைந்து மோக்ஷ நிலைக்கு சென்று விடும்.
ஆத்மா மட்டும் இருவினை ஒப்பி மல பரிபகத்தை எய்தி விட முடியாது....
சஞ்சித, ஆத்மா புதிய பிறவிக்கு சுமந்து வரும் கர்மாக்கள்.... இதற்கு வந்த வினை என்று பெயர்....
புதிய பிறவியில் அதே ஆத்மாவினை வந்து அடையும் வினைகள் வரு வினை.... மனைவி மக்களால் மற்றும் நாம் செய்த நித்திய செயல்களால்....
தொல் வினை என்று ஒன்று உண்டு.... அது நம் முன்னோர் செய்த வினைப் பயன் மிச்சம்.... இந்த தொல் வினைக்கு சரியான உதாரணம்... காங்கிரஸ் கட்சியின் முந்தைய (குறிப்பாக காந்தி, நேரு) போன்ற தலைகள் செய்த வினையை நாம் தானே இன்று அனுபவிக்கிறோம்...
வந்த வினையும் வரு வினையும் தொல்வினையும் தொடர் வினையும் என்று வினைகள் பகுக்கப்பட்டு உள்ளது...
வினைப்பயன் என்பது உண்மையா?!
ஒரு குறிப்பிட்ட கிரஹ சஞ்சார நிலையில் / நிமிடத்தில் இந்த உலகில் 100 க் கணக்கான குழந்தைகள் பிறக்கிறது.... ஆனால் அவற்றுள், ஆண் பெண் ஏழை பணக்காரன் பெற்றோர் இல்லாமை பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறம் அங்கஹீனம் என எத்தனை எத்தனையோ முரண்பாடுகளை காணும் நமக்கு, அப்போதுதான் பிறந்த குழந்தைக்கு எது கர்மா / வினை என்று யோசித்தால் புரியும் உண்மை.... சஞ்சித கர்மா....
சஞ்சித கர்மா - ஆன்மா சுமந்து வர முடியுமா?!
ஆன்மாவின் பரிணாமம், நெல்லின் முனையில் 1000 த்தில் ஒரு பகுதி.... அதாவது உயிர் உற்பத்திக்கான ஒரே ஒரு விந்து அணு அளவே.... இது எப்படி.... சஞ்சித கர்மா என்ற பாவ மூட்டையை உடன் கொண்டு வரும்?!
ஒரே வரி பதில்....
சர்க்கரை நோய் இன்று பரம்பரை வியாதி ! பெற்றவர்களுக்கு இருந்தால் அவர்களின் ஜீன் மூலம் வாரிசுகளுக்கும்!!!
குறைந்த பட்சம் ஒரு மில்லி விந்துவில் 45 முதல் 50 மில்லியன் விந்து அணுக்கள் இருந்தால் மட்டுமே உயிரின் உற்பத்தி நடைபெறும்.... ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்.... அப்படியானால் விந்தணுவின் பரிணாமம் என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.... அந்த ஒரு விந்தணு சர்க்கரை வியாதியை சுமந்து வருதே.... ஆத்மா, சஞ்சித கர்மாவை சுமந்து வருகிறது என்று சொன்னால் மட்டும் நாம் பகுத்தறிவு பேசுவது ஏன்?!