நதி மூலம்
ரிஷி மூலம் பார்க்கக் கூடாது!
ரிஷி மூலம் பார்க்கக் கூடாது!
நண்பர்களுக்கு வணக்கம்
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது
இதற்கு ஒரு காரணம் இருக்கு அப்படின்னு எனக்கு தோன்றியது
சந்தனு மகாராஜா கங்கைக் கரையோரமாக நடந்து செல்லும்போது அழகான ஒரு பெண்ணை சந்திக்கிறான்
அந்தப் பெண்ணின் மீது அவளுக்கு காதல் வருகிறது
அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்
தன்னுடைய விருப்பத்தையும் சந்தனு கங்கையின் இடத்திலே சொல்லுகிறான்
கங்காதேவியும் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மறுநாள் வந்து தனது முடிவை அறிவிப்பதாக சொல்கிறாள்
மறுநாள் சந்தனு ஆவலோடு கங்கா நதி தீரத்திலே காத்திருக்கும் போது, கங்காதேவி அதே நேரத்தில் அங்கே வருகிறார். வந்தபோது கங்காதேவி சந்தனுவை திருமணம் செய்துகொள்ள தனது சம்மதத்தை தெரிவித்து கூடவே இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறார்
கங்காதேவியின் நிபந்தனை 1, நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள ஆசைப் படக்கூடாது
நிபந்தனை 2 என்னுடைய செயல் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏன் எதற்கு என்ற விளக்கத்தை என்னிடம் கேட்கக் கூடாது
இந்த இரு நிபந்தனைகளுக்கு நீ கட்டுப்பட்டால் உன்னை நான் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று சொல்ல சந்தனுவும் சம்மதித்து அந்தப் பெண் கங்கை என்று அறியாமலேயே திருமணம் செய்துகொண்டு ஆட்சி நடத்துகிறார்
இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது கங்காதேவி விதித்த முதல் நிபந்தனை தன்னை யாரென்று சந்தனு தெரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது என்பதே!
அதனால்தான் என்னவோ நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்ற ஒரு வழக்கு தோன்றியது என்று என்னுடைய அபிப்பிராயம்!!
No comments:
Post a Comment