சிவ பாத ஹ்ருதயர்...
சிவனுடய பாதத்தை ஹ்ருதயத்தில் உடையவர்... பெயர் சூட்டப்பட்டது ... இவர் பிறந்தபோது... ஆனால்... இவர் சிவ பாதத்தை ஹ்ருதயத்தில் சுமந்தது... இவருக்கு மகன் பிறந்தபோது!!!
ஆம்... சீர்காழியை சேர்ந்த சிவ பாத ஹ்ருதயர் மகன்... திரு ஞான சம்பந்தர்...
அம்பிகை கொடுத்த ஞானப்பால் பருகி... சிவஞானம் பெற்றது 4அல்லது 5 வயதில்...
அன்று ... தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி என்று அம்மையப்பர் குறித்து தேவாரம் பாடத் துவங்கி...
ஆச்சாள்புரம் திரு வெண்னீற்று உமையம்மை உடனுறை சிவலோக தியாகேசர் கோவிலில் சம்பந்தர் தன் வாழ்க்கை துணை ஸ்தோத்திர பூர்ணாம்பிகை சமேதாராக, கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம் என்று முடித்தார்...
சிறு குழந்தையாக இருந்த சம்பந்தரை அவருடைய தந்தை ஊர் ஊராக தன் தோல்களில் சுமந்து செல்வது வாடிக்கை.
அப்போது சம்பந்தருடைய மலர்த் திருவடி அவருடைய தகப்பனார் மார்பிலே புரளும்... இது பின்னால் நடக்கும் என்று கணித்தே சிவ பாத ஹ்ருதயர் என்று பெயரிட்டனர் போல தெரிகிறது!!
சிவாம்சம் பொருந்திய சம்பந்தரையே, தன் மகனாக பெற்றவரே... ஆனாலும் தன் குலத்துக்கே உரிய வேள்வியை செய்து முடிக்க ஆர்வம் கொண்ட சிவ பாத ஹ்ருதயர், திரு ஞான சம்பந்தரிடம், அதற்க்காக பொருள் (நிதி) கேட்டு போனார்....
பரம குணாநிதி/கருணாநிதி/ தயாநிதி/ அருள்நிதி ஈசன் மட்டுமே சம்பந்தரின் உடைமை...
தந்தை கேட்கிறார்... மகன் கொடுக்க வேண்டியது கடமை...
திரு ஆவடு துறையில், பொருள் வேண்டி,
இடரினும் தளறினும் எனதுறு நோய் தொடரினும் என்ற பதிகம் பாட... சிவ பாத ஹ்ருதயர் வேள்விக்கு தேவையான நிதி பொற்கிழியாக ஈசனால் அருளப்பட்டது.
இடரினும் தளறினும் எனதுறு நோய் தொடரினும் என்ற பதிகம் பாட... சிவ பாத ஹ்ருதயர் வேள்விக்கு தேவையான நிதி பொற்கிழியாக ஈசனால் அருளப்பட்டது.
இந்த பதிகத்தை பக்தியோடு பாராயணம் செய்து வந்தால், நமது ஞாயமான தேவைக்கு தடங்கல் இல்லாமல் நமக்கு போதுமான பொருள்/பணம் எப்போதும் கிடைக்கும்.
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 1
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 1
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 2
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 2
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 3
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 3
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 4
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 4
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 5
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 5
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 6
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 6
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 7
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 7
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 8
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 8
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 9
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 9
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 10
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 10
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே 11
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே 11
No comments:
Post a Comment