பத்தினி ....
பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதேசங்களை வழங்கினார்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணனும் உடனிருந்தார். சில உபதேசங்களை முன்பே பகிர்ந்துள்ளேன். இது ஒரு பக்கம்!
இன்னுமொரு புறம்...
ஸ்ரீ கிருஷ்ணனுடன் வந்த சத்யபாமா, திரெளபதியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
திரெளபதியிடம் சத்யபாமா கேட்டாள்...
(ஒரு கிருஷ்ணனை, ருக்மிணியுடன் போட்டி போட்டு தக்க வைத்துக் கொள்ளவே படாத பாடு படும் சத்யபாமாவுக்கு - 5 கணவர்களை சமாளிக்கும் திரெளபதியின் சாதனை மிக மிகப் பெரியது)
கணவரிடம் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும்?! சத்யபாமா கேள்வி!
திரெளபதி சொன்ன பதில்கள் இந்த காலத்தில் 90% பெண்களுக்கான உபதேசம் என்றே கொள்ளலாம்.
மஹாபாரதம் - வன பர்வம் - அத் 5.
1. கணவனை வசீகரிக்க ஒரு பெண் தகாத வழிகளில் முயற்சித்தால், பாம்பிடம் நடுங்குவது போல அவளிடம் கணவன் நடுங்குவான்.
2. சில பெண்கள் நடந்து கொள்ளும் விதத்தினால் கணவனின் அமைதி கெடும். அதன் காரணமாக கணவனுக்கு தீராத வயிற்று வலி உண்டாகும் (naturally - husband avoid food on account of anger - acidity - ulcer - drinks / outside food)
இதனால் காலப் போக்கில் ஆண்மையை கூட இழந்துவிடுவார்கள் கணவன்மார்கள்.
3. என்னைப் பொறுத்தவரையில் நான் பாண்டவர்களின் மனம் அறிந்து நடந்து கொள்கிறேன்.
4. சோம்பலின்றி இருக்கிறேன்.
5. அடிக்கடி வாயிலில் போய் நிற்பதில்லை.
6. அளவுக்கு மீறி நான் பேசுவதுமில்லை.
7. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். (கானக / நாடிழந்த கவலைகள் வேறு - உள் மன தாம்பத்ய மகிழ்ச்சி வேறு)
8. கோபப்படுவதில்லை.
9. என் மாமியாரை நான் மிகவும் மதிக்கிறேன்.
10. பாண்டவர்கள் விழிப்பதற்கு முன் நான் விழிக்கிறேன் - அவர்கள் உறங்கியபின்னே நான் உறங்குவேன் (பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி)
11. ஒரு பெண் தன்னை அலங்கரித்துக் கொள்வது கணவனுக்காகவே இருக்க வேண்டும்.
12. மனைவியிடம் கணவன் கூறும் தகவல் ரகசியமில்லை என்றாலும் கூட அதைப் பற்றி மனைவி மற்றவர்களுடன் பேசக்கூடாது.
13. கணவனுடைய நண்பர்களிடத்திலும்/ கணவனிடம் அன்பு செலுத்துபவர்களிடத்திலும் மனைவியானவள் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும்.
14. கணவனை யார் யார் பகைக்கிறார்களோ, அவர்களை மனைவி ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது.
15. ஒரு பெண் கணவன் மூலமாகவே குழந்தை பெறுகிறாள் எனும்போது, கணவன் தெய்வத்துக்கு சமமானவன்.
16. சத்தியத்தில் பற்றுள்ளவளாக, பாவத்தை விலக்கியவளாக, கணவனுக்கு ப்ரியமில்லாத காரியத்தை செய்யாதவளாக எந்த மனைவி இருக்கிறாளோ, அவளுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது.
...
இனி, என் கருத்து...
அநேகமாக சுதந்திரத்துக்குப் பின் - அந்த கால கட்ட தலைமுறை முடிந்தபின் - இன்றைய பெண்களுக்கு, திரெளபதி சொன்ன எதுவும் பொருந்தாது... ஆயிரம் அல்லது லட்சத்தில் இருக்கும் ஓரிருவரால் மட்டுமே, இன்றும் ஹிந்து தர்மம் ஜீவிக்கிறது.
உபதேசம் 15... பாரத மண்ணின்/ பெண்ணின் மகிமை இந்த கருத்து... காரணம், பாண்டவர்களும் கணவனுக்கு பிறந்தவர்கள் அல்ல - திரெளபதியும் துருபுதன் மகளாக ஹோமத் தீயில் உதித்தவள்.
ஆனாலும், திரெளபதி பிறந்த மண்ணின் தர்மத்தை பேசியிருக்கிறாள்.
இந்த் தொகுப்பை என் மனைவியிடம், பல நாட்கள் முன்பே படித்துக் காட்டிவிட்டே பதிவிடுகிறேன் - உபன்யாசத்திலும் நாங்கள் கேட்டோம்.
நண்பர்களும் அவரவர் இல்லங்களில் இருந்தே துவங்குவோம்.
copy paste முறையில் அவரவர் பதிவாக பகிர்வோம்... tag, thanks வேண்டாம்...
பதிவை பார்த்து ஒரு பெண் குறைந்த பட்சம் சில அம்சங்களையாவது கடைபிடிக்க முயற்சித்தால் அதுவே பாரத தர்மத்தின் வெற்றிக்கு வேர் விழுதாகும்!

No comments:
Post a Comment