Tuesday, April 28, 2020

முக தரிசன பாபம் போக்க

மயிலாடுதுறை மஹாதானத்தெரு, எங்கள் வீட்டு கூடம் (அநேகமாக எல்லா பழையகால வீடுகளிலும்) சுவர் முழுவதும் மரப்பட்டி அடித்து அதில் சிறு ஆணிகள் அடித்து வரிசையாக சுவாமி  படங்கள் தொங்கவிடப்பட்டு இருக்கும்.

வருட கேலண்டர்கள் கூட சுவாமி படங்களோடுதான் அச்சிடப்படும்.

வயது கூட கூட... படங்களின் பின்பு தூசு/ ஒட்டடை படிகிறது பல்லி பூச்சிகள் ஒளிகிறது என நான் அருவருப்பு அடைந்ததும் உண்டு.

பட்டணம் நகர்ந்தால் பெரும்பாலும் வாடகை வீடுகள்/ flat ... முதல் condition னே... ஆணி அடிக்கக் கூடாது...

சரி சொந்த விருப்பில் தனி வீடு கட்டிக் கொண்டாலும் interior design என்ற கணக்கில் சில லட்சங்கள்... ஆணி அடித்து சுவாமி படங்கள் ... மூச்... பூஜா அலமாரியோடு முடிந்து விடும் சுவாமி - படங்கள் எல்லை!

இன்னொரு காரணம் பகிஷ்டைகள் நடமாட்டத் தொல்லை!!

கேலண்டர்கள் எல்லாம் இப்போ - அரசியல் தலைகள் - நடிகர் நடிகைகள்....

அநேகமாக லிவிங் ரூம் ஒரு சலூன்தான் இன்று... மார்டன் art - கவர்ச்சிப் (கா விரிச்ச) படங்கள்... செய்தித்தாள்கள்... show case எல்லாம் நமது பந்தா/பவிசு காட்டவே...

ஊரடங்கு

நிறைய நேரம் கிடைத்தது - புத்தகம் படிக்க... வியாச பாரதம் - நெட்டுருவே பண்ணிக்கிட்டு இருக்கேன்...

15வத நாள் யுத்தம் - துரோணர் முடிகிறார்... 

குருக்ஷேத்திர யுத்த களத்தில் பாண்டவர் தரப்பில் முதல் சலசலப்பு - ஒற்றுமை குறைதல் இன்றுதான்....

அர்சுனன் - த்ருடத்யும்னன் வாக்குவாதம்

- கொன்ற விதம் தவறு என...

த்ருஷ்டத்யும்னன் - எதிர் பதில் -

நீ மட்டும் யோக்யமா... சிகண்டியை முன்னால் வைத்துதானே பீஷ்மரை முடித்தாய்....

சாத்யகிக்கு (அர்சுனன் சீடன்)  வந்ததே கோபம் - 

ஏய் த்ருடத்யும்னா,

அர்சுனன் என் குரு, துரோணர் என் குருவின் குரு - ஆதலின் பரம குரு - அர்ச்சுனன் துரோணர் இருவரையும் நீ அவமதித்துவிட்டாய் - உன்னை இப்போதே கொன்று போடுகிறேன் என்கிறான், சாத்யகி...

மீதி படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க!!

நான் சொல்ல வந்தது

சாத்யகி த்ருடத்யும்னனை பார்த்து சொல்லும் சொற்கள்தான் இங்கு highlight....

ஏய் த்ருடத்யும்னா உன் குல வழக்கமே துரோகம்தான் - உன் உடன் பிறப்பு சிகண்டி அலியாக இருந்து பீஷ்மரை முடித்தான் - நீயோ, ஆயுதமில்லாது நிஷ்டையிலிருந்த துரோணரை முடித்தாய்!!

த்ருடத்யும்னா,

உன் (உன் குலத்தோர்)  முகத்தை பார்த்தாலே, பாவம் நம்மை பீடிக்கும், என நம் வரிசையில் உள்ள அரசர்களும்  வீரர்களுமே (சாஸ்திரம் படித்த பண்டிதர்களைப் போல) சூரியனை பார்த்து உன் முக தரிசன பாவத்தை போக்கிக் கொள்கிறார்கள்! என்கிறான்.

வெளியில் / பகலில் நாம் யாராவது பாவியை பார்த்து விட்டால் உடனே சூரியனை பார்த்து பாவத்தை போக்கிக் கொள்ளலாம்!!

இரவில் / மேக மூட்டத்தில் / பாவி வீட்டேக்குள்ளேயே வந்து விட்டால் - பாவியின் முக தரிசனம் செய்த  பாவத்தை எப்படி போக்கிக் கொள்வது?

சிறு வயதில் எங்கள் வீட்டு கூடத்தில் / நிலை வாசலில் படங்கள் மாட்டி வைத்திருந்ததன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது.

நண்பர்களே,

வெளியில் எங்கு சென்றாலும் நம்மைப் பெற்ற

தாய் (அல்லது)
குல ஆச்சாரியன் (அல்லது)
இஷ்ட தெய்வங்களின்

லேமினேட்டட் படத்தை பாக்கெட்டிலேயே வைத்திருங்கள் - நண்பர்களோ - உறவினர்களோ - எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ!!

இஷ்டமான,

தாய் / குரு/ தெய்வத் திரு முகத்தை அடிக்கடி தரிசிப்பது, பிறர் முக தரிசன  பாவம் சேர்ந்ததை  போக்கிக் கொள்ள உதவுமோ இல்லையோ,

புண்ணியத்தையாவது நம் கணக்கில் சேர்த்து வைக்குமே!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...