Wednesday, April 29, 2020

கீதைதியானஸ்லோகம்


பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தார நீலோத்பலா

சல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ கர்ணேன வேலாகுலா

அச்வத்தாமவிகர்ண கோரமகரா துர்யோ தனாவர்தினீ

ஸோத்தீர்ணா, கலு பாண்டவை ரணநதீ கைவர்தக: கேசவ:

பொருள் :-

(மஹா)பாரத (குருக்ஷேத்ர) போராம்
ரணநதி தனிலே

பீஷ்மர், துரோணர் இருகரையாம் (tank bund)

நதியின் நீரோ ஜயத்ரதனாம் (கெளரவ சகோதரி துச்சலை கணவன் - அபிமன்யு வதம் செய்யப்பட்ட நாளில் - சிவ பெருமான் வரத்தால் ஒரே ஒரு நாள் பாண்டவர்களை போரில் கட்டியவன் - முன்னேறாமல் தடுத்தவன்)

காந்தார மன்னன் நீலோத்பலம்

சல்லிய வீரன் கொடிய சுறா

கிருபன் அந்நதிப் பிரவாகம் (வேகம்)

அஸ்வத்தாமனுமா விகர்ணனும் துயர்தரும் மகர மீன்களாம் (மகரம் என்பது முதலை - மீன் என்பது முதலையை போல கொடூர குணம் கொண்ட கூரிய பற்கள் கொண்ட மீன்)

துரியோதனனோ நீர்சுழலாம்

கர்ணனோ நதியின் பேரலையாம்;

இத்துணை இடுக்கண் நிறை நதியைப்

போர்க்களமாம் குருக்ஷேத்திரத்தில்

பாண்டவர் தாண்டியே கரைசேரத்

தெப்பமாம் கேசவா! வாழியவே!!

இந்த உலக வாழ்கை என்பது சம்சார கடல் - ஆனால் கடல் ஆழம் / அமைதியாக இருக்கும் - மாறாக ஒரு நதியோ, அதன் நீரோட்டத்தால் முதலைகள், சுறா, மகரங்கள் என ஆபத்துக்கள் நிறைந்தது - நதியின் வேகம், சுழல், பிரவாகம், உயர்ந்து நிற்க்கும் கரைகள் காரணமாக மனிதனால் நீந்திக் கடப்பது என்பது இயலாத காரியம்.

எனவே பாண்டவர்கள், இந்த குருக்ஷேத்ர போர் என்ற நதியை கிருஷ்ணன் எனும் தெப்பத்தின் உதவியோடு கடக்கின்றனர்.

உடலை விட்டுப் பிரியும் உயிர் (ஆத்மாவானது) சொர்க்க பாதையில் ஓராண்டு பயணிக்கும் - வழியில் அந்த ஆத்மாவானது நரகக் காட்சி/ சித்ரவதைகளை கண்டுகொண்டே கடக்குமாம் (கருட புராணம்).

ஊடே, இரண்டு நதிகள்... விரஜா/ வைதவி.

ஒன்று புண்யதீர்த்தம்/ இன்னொன்றும் ரத்தப் பெருக்கு மனிதச் சதை வெள்ளம் ஓடும் நதி.

இதில், ஆத்மா விரஜா நதியை கடக்க - ஒரு பசுவின் வாலை பிடித்தபடி கடக்குமாம் - காரணம் பசுக்களை தீயவை/ அசுத்தங்கள் அண்டாது (மேய்ப்பவன் கண்ணன் ஆயிற்றே).

விபரமறிந்த ப்ராமணர்கள் தசமநாள் காரியங்களில் கோதானம் செய்யும்போது அதன் வால்வரை தொட்டு உருவிவிட்ட பின்னரே தானமாக கொடுப்பர் - இதையெல்லாம் வைதீகர்களும் இப்போது நிச்சயமாக செய்ய வேண்டிய முறையாக கட்டாயப் படுத்துவதுமில்லை!!

#மேல்_குறிப்பு_1

ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் சொர்க்க வாசல் புகும் முன்பாக ஒரு மண்டபத்தில் எழுந்தருளுவார் - அங்கே அவருக்கு விஷேஷ பூஜைகள் உண்டு - அந்த மண்டபத்தின் கீழே விரஜா/ வைதவி நதிகள் ஓடுவதாக ஐதீகம்.

விவரமறிந்த வைணவர்கள்/ நபர்கள் மேற்படி இந்த மண்டபத்தை மிதித்து/ குறுக்கே கடப்பது இன்றளவும் கிடையாது - மாறாக அங்கே விழுந்து வணங்கி நமஸ்கரித்துச் செல்வர்.

இந்த விரஜா நதி மண்டப சேவைக்குப் பின்னரே நம்பெருமாள் சொர்க்க வாசலுக்குள் ப்ரவேசிப்பார்!!

#மேல்_குறிப்பு_2

சபரி மலையிலும் அழுதா நதியில், ஐய்யப்பனால் வீழ்த்தப்பட்ட  மஹிஷியின் இரத்தமும் சதையும் ஓடுகிறது -

ஐய்யப்பன் - மஹிஷி போரை காண வந்த சிவன் தன் ரிஷபத்தை கட்டிய இடமே காளை கட்டி.

போரை காண வந்ததாலேயே, இங்கே சிவனின் பாணம் வெறும் பாண குறியீடாக இல்லாது - நிலக்கலில் தலையுடன் காணப்படுகிறது (முக வடிவில்).

இந்த அழுதா நதியில் பக்தர்களாகிய நாம் கல்லெடுத்து - (எலும்புச்சாம்பல் - சஞ்சயனம்) அதை கல்லிடும் குன்றிலிட்டு மஹிஷிக்கு மோஷத்துக்கு வழி வகுகுக்கிறோம்.

பம்பையின் இக்கரை சாலகாயம் - இது ஸ்தூல காயம் என்பதின் மலையாள மருவு - நாம் பூவுலக அசுத்த மேனியோடு சென்று பம்பா எனும் புண்ணிய நதியில் நீராடி பின் ஜோதிசொரூபமான ஐய்யப்பனோடு நமது ஸ்தூல காயத்தை (உடலை) விட்டுவிட்டு நமது ஆத்மஜோதி (கடைந்தெடுத்த வெண்ணெயில் காய்ச்சிய நெய்யுருவில்) பரமாத்மாவுடன் கலக்கிறது.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...