Monday, January 27, 2020

முதலாழ்வார்கள்...

முதலாழ்வார்கள் மூவருமே கிறிஸ்து பிறப்புக்கு முன் அதாவது 4302 கிமு வுக்கு முன் அவதரித்தவர்கள்.
பொய்கையாழ்வார் விஷ்ணு வின் பாஞ்சஜன்யம் என்ற சங்கின் அம்ஸமாக கருதப்படுபவர்.
பாஞ்சஜன்யம் என்ற சங்கு ஸ்ரீ விஷ்ணுவால் சம்ஹரிக்கப்பட்ட பஞ்சஜனன் என்ற அசுரனின் எலும்புகளை கொண்டு உருவாக்கப்பட்டது.
இதில் பஞ்சஜனன் - அசுரன் - ஐந்து பிறப்பு - என்பதில் ஏதோ ஆராய்ச்சி குறிப்பு இருக்கிறது -
முட்டையாக - முட்டையிலிருந்து உயிராக வெளி வருவது இரு பிறப்பு....
குழந்தையாக - உபநயனத்தின் போது - சந்யாசத்தை மேற்கொள்ளும் மனிதன் 3 பிறப்புக்களுடையவன்.
பஞ்ச ஜனன்?! ஆராய்வோம்...
பெரியாழ்வார் திருமாலின் ரதத்தின் அம்சமாக தோன்றியவர். ஆனி சுவாதி - கிமு 3056.
ஆண்டாள் எனும் கோதை ஆடிப் பூரம் கிமு 3005.
ஆக. விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின் 51 வது வயதில் கோதை நாச்சியார் குழந்தையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நந்தவனத்தில் கிடைக்கப் பெற்றுள்ளார்.
விஷ்ணு சித்தர் முன்குடுமியணிந்த அந்தணர் - இதே போல - கேரள நம்பூதிரிகள் / தில்லைவாழ் அந்தணர்களும் முன் குடுமி அந்தணர்களே என்பது நினைத்து இன்புற்று ஆராய வேண்டிய குறிப்பு.
அரங்கனுக்கே பெண் கொடுத்து திருமாலின் திருவாயால் மாமனாரே என அழைக்கப்பட்டவர் விஷ்ணு சித்தர்.
வைணவத்தில் மிகவும் விசேஷமான மூவர் முதலாழ்வார்கள் எனப்படும் - பொய்கையாழ்வார் - பூதத்தாழ்வார் - பேயாழ்வார்.
இவர்கள் மூவருமே கிமு 4302 க்கு முன்பாக (முன்பு) அதாவது இன்றைக்கு 6318 ஆண்டுகள் முன்பு அவதரித்தவர்கள்...
கலியுகம் துவங்கி தற்ப்போது 5116 வருடங்கள் ஆகிறது - ஆக முதலாழ்வார்கள் மூவரும் கிருஷ்ணன் வாழ்ந்த த்வாபரயுகத்தில் வாழ்ந்தவர்கள்.
த்வாபரயுகம் முடியும் முன் 1200 ஆண்டுகள் முன்பாகவே பிறந்து வாழ்ந்து ஓய்ந்தவர்கள்.
சரி...
இந்த மூன்று முதலாழ்வார்களின் பெயரிலேயே ஒரு வைணவ வாழ்வியல் குறிப்பு...
பொய் - பூதம் - பேய்...
பூதங்களால் ஆன இந்த சவம் அதை உள்ளிருந்து இயக்கும் உயிரெனும் பேய் ஆகிய இவை எல்லாம் பொய்...
மெய் ஒன்றே - ஸ்ரீ ஹரியின் திருப்பாதமே. 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...