மனசு!?
நாம் பேசும் போது சில நேரங்களில் சில பெயர்கள் குறிப்புகள் மனசுல இருக்கு ஆனால் உடனடியாக ஞாபகத்துக்கு வரலை - எப்படி விளக்குவது என புரியலை என்று சொல்வோம்.
மனசு என்றவுடன் நாம் மார்பில் இதயத்தில் இருப்பதாக உணர்கிறோம். ஆனால் மனசு என்பது மூளையின் ஒரு பகுதியே.
மனசு என்ற மூளையின் ஒரு பகுதி இதயத்தோடு நேரடி தொடர்பு கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே பல சம்பவங்கள் காட்சிகள் நினைவுகள் இதயத்துக்கு உற்சாகத்தை அல்லது இருக்கத்தை துடிப்பை அதிகமாக்குகிறது.
இந்த இதயத்தின் துடிப்பையே நாம் மனசு மார்பில் இருப்பதாக நினைக்க காரணம்.
சரி... மனசு என்பது என்ன? கம்ப்யூட்டரின் storage 500 GB 1000 GB கிகா பைட் ட்ரில்லியன் பைட் என்கிறோமே அதுதான் மனசு.
சம்பவங்களை காட்சிகளை எண்ணங்களை கேட்டவைகளை தொகுத்து தனித்தனியாக ஆடியோ வீடியோ டேட்டா base file களாக கம்ப்யூட்டர் தொகுத்து வைப்பதை போல நமது மனசு எல்லாவற்றையும் சேமித்து வைக்கிறது.
கம்ப்யூட்டரில் காணொளி கேட்கும் அமைப்பு இருப்பதால் பதிவுகளை நாம் மீண்டும் பார்க்க / கேட்க முடிகிறது.
நமது முன்னோர்கள் தங்கள் தவ வலிமையால் ஞான திருஷ்டி பெற்று தங்கள் மனதில் இருந்த பதிவுகளை நிஜத்தில் காட்டினார்கள் - உதாரணமாக ஆசிரமத்தில் இருந்த படி ராமாயண காட்சிகளை ஞான திருஷ்டி மூலம் கண்டு பதிவு செய்தார் வால்மீகி. மஹாபாரதத்தில் வியாசர் அருளால் சஞ்சயன் அரண்மனை உபரிகையிலிருந்தபடியே போர்க்கள காட்சிகளை திருதராஷ்டிரனுக்கு விவரித்தான்.
நமது கம்யூட்டர் அல்லது அலைபேசி memory space இல்லை என்று சொல்லி பதிவுகளை சேமிக்க மறுக்கும்.
ஆனால் மனித மனம் பல நூறு ஆயிரம் கோடி நினைவுகளை ஏற்க்கும் தன்மையுடையது.
சாதாரண மனிதன் தன் மனதின் மெமரி செல்களில் அதிகபட்சம் 8% மட்டுமே உபயோகிக்கிறான். நல்ல எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் 10% விஞ்ஞானிகள் செஸ் விளையாட்டு வீரர்கள் 15% வரையும் மோனம் தியானம் தவம் ப்ராணாயாமத்தில் ஈடுபடும் ஞானிகள் ரிஷிகள் 25% வரையும் தங்கள் மனதின் சக்தியை உபயோகிக்கின்றனர்.
வியாசர் போன்ற காவிய கர்த்தர்கள் இன்னும் சற்று அதிகமாக உபயோகப் படுத்தி இருப்பார்கள்.
மனதின் சக்தியை (நினைவாற்றல் தகுதியை) 50% மேல் உபயோகிப்பவர்களே கடவுளாக கருதப்படுவதாக நாம் நிச்சயம் நம்பலாம்.
சாதாரண மனிதர்களாகிய நாம் 5% மட்டுமே மனதை பயன்படுத்துகிறோம் காரணம் நாம் நம் மனதில் இருந்த தேவையற்ற நினைவுகளை பதிவுகளை (குப்பைகளை) அவவ்போது அகற்றுவதில்லை. அதாவது clearing or deleting of junk files - நாம் செய்வதில்லை. ஆக நமக்கு mobile phone ல் insufficient memory என வருவது போல நிரம்பி வழியும் எண்ணங்கள் கனவுகளாக... சில வயோதிக காலத்தில் மெமரி லாஸ் அல்லது சம்பந்தமில்லாது பழைய சம்பவங்களை உளறுதல் அல்லது ஒரே தொடர்புடைய விஷயஙுகளை மீண்டும் மீண்டும் பேசுவது என...
புரியும் படியாக சொல்ல வேண்டுமானால் file corrupted - cannot be displayed - file not formatted. என்பன போல.
மனம் என்பது மனிதனின் தரத்துக்கு ஏற்றார் போல கடவுளால் அருளப்பட்ட நினைவேநதல் பாத்திரம் - அந்த பாத்திரத்தின் கொள்ளளவை அதிகரிக்க நாம் செய்ய வேண்டிய சில முக்கிய செயல்கள்
தேவையற்ற / கோபம் / கெட்ட மற்றும் உடல் - உணவு கேளிக்கை எண்ணங்களை junk file களை அவ்வப்போது நீக்குங்கள்.
ப்ராணாயாமம் பழகுங்கள்.
மெளனம் / தியானம் தினமும் செய்வது நம்மை படிப்படியாக தவ/ சமாதி நிலைக்கு உயர்த்திவிடுவது தெய்வ சத்தியம்!.
No comments:
Post a Comment