Tuesday, January 14, 2020

பூர்வ ஜென்ம வாசனை

பூர்வ ஜென்ம வாசனை
காங்கேயத்தில் பிறக்கும் ஒரு குழந்தை எங்கோ இருக்கும் கெய்ரோ வில் நடந்த/ இருப்பு களை சரியாக சொல்கிறது...
காரணம் பூர்வ ஜென்ம வாசனை...
இது மகாபாரதத்திலும் உண்டு...
பீஷ்மர் சாவுக்கு காரணம் ஆனவள்/ர் அம்பா/சிகண்டி... (மூன்றாம் பாலினம்).
ஆனால், இன்று நாம் பேசப்போவது பீஷ்மர் பற்றி.
நண்பர்கள் குடும்பத்துடன் picnic செல்வோம்... அதுபோல அஷ்டவசுக்கள் எனும் தேவர்கள் பூலோகம் வந்தார்கள்...
அதில் ஒருவர் பிரபாஸன் மற்றும் அவன் மனைவி.
பிரபாஸன் மனைவி அங்கே வசிஷ்டர் ஆசிரமத்தில் இருந்த பசு ஒன்றை பார்த்து ஆசைப் பட்டு அது தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்தாள்.
எல்லோரும் பிரபாஸன் மனைவிக்கு அறிவுரை சொன்னார்கள்....
நாம் தேவலோக வாசிகள்... அது பூலோக பசு... அதுவும் வஷிஷ்ட்ர் ஆசிரமத்தில்... அதை நாம் எடுத்துச் செல்லவும் முடியாது...
பிரபாசன் மனைவி சொன்னாள்... இல்லை... இங்கே பூலோகத்தில் வந்த இடத்தில் எனக்கு ஒரு தோழி கிடைத்தாள்... அவளுக்கு நான் இந்த பசுவை பரிசு தரவேண்டும் என்றாள்
பிடிவாதம் ஜெயித்தது... பசு அபகரிக்கப்பட்டது... (மனைவியே மனிதனுக்கு மரணம்)
வஷிஷ்டர் நடந்ததை அறிந்தார்... அஷ்டவசுக்களுக்கும் சாபம் கொடுத்தார்...
பூமியில் இருந்த பசுவை அபகரித்ததால், பூமியில் மனிதர்களாக பிறந்து பல ஆண்டுகள் வாழ்ந்து வேதனை பட்டு மாண்டு போவீர்கள்...
வஷிஷ்டர் சாபம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஷ்டவசுக்கள்... வஷிஷ்டரை அணுகி, வணங்கி, குற்றம் எங்கள் அனைவருடைய பொது அல்ல...
குற்றவாளிகள் பிரபாஸன் மற்றும் அவன் மனைவி என்றனர்...
வஷிஷ்டர் சாபம் பலித்தே தீரும்... நீங்கள் அனைவரும் அனுபவிக்கவே வேண்டும்...
ஆனால் பிரபாஸன் தவிர மற்ற 7 பேரும் பிறந்த உடனேயே மரணம் சம்பவித்து தேவலோகம் வந்து விடலாம்... ஆனால் பிரபாஸன் மட்டும் சாபத்தை அனுபவித்தே ஆக வேண்டும்... என்று சொல்லி விட...
சந்தனு/ கங்கா வுக்கு பிறந்த முதல் 7 குழந்தைகளும் பிறந்த உடனேயே கங்கா தேவியால் நதியில் மூழ்க அடித்து கொல்லப்பட்டன...
பிரபாஸன் மரணம் மட்டும் சந்தனு வால் தடுக்கப்பட்டு தவிர்க்கப்பட்டது.... தேவவிரதன்/கங்கேயன் என்றும் பின்னால், சந்தனு / மச்ச கந்தி என்ற சத்யவதி திருமணத்துக்காக, வாழ்வில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்ற சபதம் செய்து பீஷ்மர் ஆனார்...
இதில் பூர்வ ஜென்ம வாசனை எங்கே வந்தது?!
அஷ்டவசுக்களில் ஒருவராக இருந்த போது, தன் மனைவியின் பிடிவாதம்/ஆசையால் தன் பதவி இழந்து பூலோகம் வந்து துயரமே உருவாக வாழ்ந்து/ அதர்மத்தின் பக்கமே நின்று...
எனவேதான் இனி மனைவி /திருமணம் வேண்டாம் என்ற முடிவு எடுத்தார் பீஷ்மர்...
வரவு எட்டணா செலவு பத்தணா... என்ற பாமாவிஜயம் திரைப்படப் பாடலில்...
அடங்காமனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது என்றதும் இதுவே...
ஒவ்வொரு மனைவியும் படிக்க/உணர வேண்டிய பதிவு இது... 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...