Tuesday, January 14, 2020

போகி பண்டிகை

போகி
போகி என்பது இந்திரனை குறிக்கும் சொல். வருணன் வாயு நிருதி குபேரன் எமன் அக்னி முதலான அஷ்டவஸூ தேவர்களை தனது கட்டுட்பாட்டில் வைத்து உலக தேவைக்கு தகுந்தாற் போல இந்த தேவர்களுக்கான இந்திரன் பிரபஞ்சத்துக்கு அருள்கிறார்.
இந்திரனை தொடர்ந்து தேவர்களில் மூத்தவரான சூரிய வழிபாடு - அதைத் தொடந்ந்து உழவுக்கும் தொழிலுக்கும் உதவும் மாடுகள் உபகரணங்களுக்கான பண்டிகை.
மஞ்சு விரட்டு என்பது கூட உழவுத் தொழிலுக்கு ஆதாரமாக இருந்த மாடுகளுக்கு விருந்துக்குப் பிறகான கேளிக்கையாக.
பொங்கலின் போது சம்பா பயிர்கள் அறுவடை செய்து போதிய பொருளாதாரமிருப்பதால் திருமணத்துக்கு தயாராக இருக்கும் கன்னி / சிறு பெண்கள் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டு கும்மி விளையாடி... (நினைவிருக்கட்டும் - திருமணம் என்பது பருவமடையும் முன்பே - பின் ருது ஜாதகப்படியே குடும்ப பந்த உறவுகள்)
சம்பாவுக்குப் பிறகு உளுந்து பயறு எள் என அதிக நீர் / பிரயத்தனம் தேவைப்படாத வெய்யில் தாங்கும் பயிர்களே.
இந்த நேரத்தில் மாடுகளுக்கும் ஓய்வு - உபகரணங்களை சீர் படுத்துதல் என. மீண்டும் ஆடிப்பட்டம் வரும் வரை உத்தராயண புண்யகாலம் முழுவதும் நம்மை தயார் படுத்திக் கொள்ள வெப்பம் அதிகமான காலங்களில் நாம் ஓய்வெடுக்க.
மீண்டும் ஆடி துவங்கி உழைப்பு இடையிடையே பணியிடை கேளிக்கையாக தெய்வப் பண்டிகைகள்.
ஹிந்து தர்மம் என்பது இயற்கையோடு கூடி வாழும் நெறி. 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...