Monday, December 30, 2019

எண்ணம் -3

எண்ணம் 3
இடியுடன் கூடிய கடும் மழை...
ஒரு பாழ் அடைந்த கட்டிடம்...
22 நபர்கள் ஒதுங்கி நிற்கின்றனர்...
ஆண்டவன் அசரீரியாக...
மரணம் சம்பவிக்க வேண்டிய - உயிர் பறிப்பு வேண்டிய கட்டாயம் இப்போது...!!!
எல்லோரும் ஆலோசித்து...
நாம் ஒவ்வொருவராக சில தப்படிகள் தள்ளி இருக்கும் மரத்தை தொட்டு விட்டு வருவோம்..
யாருடைய உயிர் பரிக்கப்பட வேண்டுமோ அவரை விதி எடுத்துக்கொள்ளும்...
எல்லோரும் பீதியுடன் ஒவ்வொருவராக செயலில்...
21 நபர்களும் பத்திரமாக மீண்டுவிட...
எல்லோரும் 22 ஆம் நபரை பரிதாபமாகப் பார்த்தனர்...
அந்த நபர் தனது நடையை துவக்கி அருகில் இருந்த மரத்தை தொட்டார்....
அடுத்த நொடி இடி தாக்கியது...
கட்டிடத்தின் மீது... 21 பேரும் இறந்தனர்...
இதுவும் ஆண்டவன் சந்நிதி
இதுதான்...
நல்லார் ஒருவர் உளரேல்.. என்பது...
அந்த ஒரு உயிர் 21 பேரை இதுவரை காபாற்றி வந்துள்ளது...
நள்ளிரவில் பேய்கள் உலாவும் நேரத்தில் ஆண்டவன் சந்நிதி இப்படியாகவும் அமையலாம்...
புரிந்தவர்களுக்கு 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...