Sunday, December 22, 2019

புகழோங்கிய பாரதம்-3

புகழோங்கிய பாரதம்
வாரணாவதம் என்ற நகரில் மெழுகு வைக்கோல் மற்றும் அரக்கு போன்ற எளிதில் தீபற்றக் கூடிய பொருள்களால் உருவாக்கப்பட்ட மாளிகை ஒன்றை தயார் செய்து அங்கே புரோசனன் என்ற ஒரு வேவு பார்ப்பவன் மூலம் பாண்டவர்களை தீர்த்துக்கட்ட துரியோதனான் திட்டமிட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த விதுரர் தகுந்த சில குறிப்பு உபயங்கள் சொல்லிக் கொடுத்து தருமனை உஷார் படுத்தினார்.
சுரங்கம் அமைத்தல், இரவு நேரத்தில் விண் கோல்கள் /நகர்வு மூலம் திசை/ பாதை அறிவது போன்றவை அவை. இது தவிர அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டவர்கள் கங்கை கரையை அடைந்து அங்கே விதுரர் ஏற்பாட்டின் படி இருந்த படகில் ஏறி தப்பினார்கள்.
அந்த படகு குறித்து ஆதி பர்வம் அத் 13இல் இயந்திரம் பொருத்ப்பட்டது... பெரும் காற்றை எதிர்கொண்டு அலைகளால் பாதிக்காமல் அதி வேகமாக பயணிக்கும் என்று வர்ணிக்கப்பட்டு உள்ளது.
பின்னர், வியாசரை சந்தித்த பாண்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட துர்பாக்ய நிலை குறித்து புலம்பி துக்கித்த நேரத்தில்...
வியாசர் சொல்கிறார்...
பாண்டு குமாரர்களே, பூர்வ ஜென்மத்தில் நீங்கள் நல்ல நண்பர்களை பிரித்து அவர்களிடையே விரோதத்தை உருவாக்கிய பாவமே இன்று இப்படி அவதிப் படுகிறீர்கள்...
ஆகவே, இனி நீங்கள் உங்களோடு பயணிக்க ஹித வார்த்தைகளை சொல்லி வழி நடத்த ஒரு புரோஹிதன் உதவியோடு செல்லுங்கள் என்று சொல்லி தௌம்யர் என்ற சாஸ்திரம் அறிந்த புரோகிதரை பாண்டவர்களுக்கு துணையாக அனுப்பினார்.
அஸ்திரம்/ ஆன்ராய்டு/மந்திரம் 4இல் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...