Monday, December 23, 2019

பூதத்தில் கரைதல் -1

பூதத்தில் கரைதல்....
படைப்பில் பாதியை இயற்க்கைக்கு மறு சுழற்ச்சிக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்.
கட்ட பொம்மன் என்ற திரைப்படத்தில் கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்று வரும். ஒரு நபர் 1000 மூட்டை நெல் அறைத்தால் எவுவளவு அரிசி வரும் என கேட்பார். அதற்கு கவுண்டர் 1000 அறைத்தால் 500 - ஐநூறு அறைத்தால் 250 - என அடுக்கி இது உலக வழக்கம்தானே என பதில் சொல்வார்.
அதாவது தவிடு / உமி மீண்டும் இயற்க்கைக்கு - பசுவுக்கு...
படத்தில் அந்த நபர் - இரண்டு நெல்லை எடுத்து கவுண்டர் கையில் கொடுத்து இந்த ரெண்டு நெல்லை அறைத்தால் எத்தனை அரிசி வரும் என கேட்க - கவுண்டர் இரண்டு அரிசி வரும் எனச் சொல்ல - வந்த நபர் - கவுண்டரைப் பார்த்து மோசக்காரா யாரை ஏமாற்றுகிறாய் - இரண்டு நெல்லை அறைத்தால் இரண்டு அரிசி வருவது போல ஆயிரம் மூடை நெல் அறைத்தால் 1000 மூடை அரிசி வரவேண்டும் என்பார்.
மனிதன் இன்று இதே மனோபாவத்தில்தான் இருக்கிறான் - எண்ணிக்கை / எடை என எதையும் மிச்சம் வைக்காமல் உண்டு கொழிக்கிறான். இயற்கைக்கு மறு சுழற்சிக்காக இவன் எதையுமே கொடுப்பதில்லை.
நெல் லில் இருந்து கிடைக்கும் உமியை எரிக்கவும் தவிட்டில் இருந்து என்ணெய் எடுக்கவும் கற்ற களவானி மனிதன்.
க்ரூட் ஆயில் எடுத்தான் - 200 லிட்டர் - அதில் பாதியை - குறைந்தபட்சம் கழிவாக 100 லிட்டராவது மண்ணுக்குத் தரவேண்டும் -
மனிதன் செய்தது என்ன?
க்ரூட் ஆயிலை - பெட்ரோல் - டீஸல் - மண்ணெண்ணெய் - பாலிமர் - நாப்தா - தார் என 200 லிட்டரையும் விஞ்ஞானப் பேராசையால் அனுபவித்து, கடைசியாக - மறுசுழற்ச்சிக்கு வழியில்லாத மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் கழிவுகளை மட்டும் இயற்கையிடம் திருப்பிக் கொடுத்தான்.
விளைவு - எதிர்கால இயற்கை கொடை கேள்விக் குறியாக!
பூதத்தில் கரைவோம்....⁠⁠⁠⁠

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...