Monday, December 23, 2019

வயசு இலக்கணம் கூட வகையாகத்தான்

வயசு இலக்கணம் கூட வகையாகத்தான்!
சந்யாசிகள் ஒரு நாளைக்கு எட்டு கவளம் மட்டுமே சாப்பிடலாம்
வானப்ரஸ்திகள் 16 கவளமும்
க்ருகஸ்தர்கள் 32 கவளமும்
பிரம்மச்சாரிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஒரு கவளமென்பது சாதாரண கையளவு உணவு.
உடனே நம்மாளு ஒருத்தர் கேட்டார்....
வயசான சுகர் வருது - அதனால வயிறு காலியாக இருக்கக் கூடாதே என்று -
ஆசாரியர் சொன்னார்... க்ருகத்திலே இருக்கிற வரை குடும்பத்துக்காக உழைக்கனும் அதனால கொழுப்பு சேராது - வானப்ரஸ்தி ஆகிட்டா வீட்டை விட்டு வெளியேறி க்ஷேத்ராடணம் பண்ணி அலையனும் அப்போ நடந்தா சுகர் குறையுமே என.
கடவுளின் சிருஷ்டியில் மனிதன் கழுதை நாய் குரங்கு என 4 உயிர்களையும் தலா 40 வயதுகளோடு அவரவர்க்கு உரிய கர்மாக்களை விளக்கி படைத்தான்.
கழுதை - சதா பொதி சுமப்பது புண்யகாரியமா என்ன - அதனால 20 வயசு போதும் என்றது - அதே போல நாயும் கல்லடி தவிர்க்க - குரங்கு சேஷ்டை - இடம் மாறி தாவுதலை தவிர்க்க தங்களுக்கும் தலா 20 வயசுகள் போதும் என்றனர்.
மனிதன் பேராசையின் மொத்த உருவமாயிற்றே அதனால் மற்ற மூன்று விலங்குகளின் தலா 20 ஆக 60 ஆண்டுகளை தனக்கே தந்து தனது ஆயுளை 100 ஆண்டுகள் ஆக்க கோரினான்.
கடவுளும் சம்மதிக்க - மனிதன் 40 வயது வரை மனிதனாக பின் 41 முதல் 60 வரை குடும்பத்துக்காக சுமை சுமக்கும் கழுதையாக பின் ஓய்வு பெற்று 61-80 ல் வீட்டுத் திண்ணையில் நாயைப் போல காவலும் 81-100 வரை குரங்கைப் போல குச்சியை பற்றி - உடல் சேஷ்டை - வீடு ஆஸ்பத்திரி எனத் தாவித் தாவி....

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...