Monday, December 23, 2019

ஆனந்தம் ஆனந்தமே-1

ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் நமக்குள் இருக்கிறது - இது எப்போது வெளிப்படும்?
மனிதன் ஆசாரமாக இருந்தால் ஆனந்தம் அடையலாம்.
ஆசாரம் என்பது என்ன? ஏதோ ப்ராம்மண பாஷை என்று நினைக்க வேண்டாம் - தனி மனித ஒழுக்கமே ஆசாரம்.
கோபுரத்தின் உச்சி அந்தம் - அந்த உச்சிக்கு நாம் சென்றடைய சாரம் தேவை - ஆக ஆனந்தத்தை அடைய ஆசாரம் தேவை.
வர்ணாஸ்ரம தர்மம் - ஏதோ ஒரு இனவெறிச் சொல் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. ஜாதி என்பது பிறப்பால் வருவதல்ல - குணத்தால் என்பதை விரிவாக வேறு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
ஜாதி எதுவாக இருந்தாலும் ஆசாரம் முக்கியம். அதாவது ஸ்நாநம் - ஆசமனம் - ஆகாரநியமம் - ப்ரம்மச்சர்யம் ஆகிய நான்கும் எல்லா தர்மத்துக்கும் ப்ரதானம்.
அது என்ன எல்லா தர்மம்....
ப்ரம்மச்சர்யம்
க்ரகஸ்தாஸ்ரமம்
வானப்ரஸ்தம்
சந்யாசம்
அறம் - பொருள் - இன்பம் - வீடு
பூ பிஞ்சு காய் கனி
Spring - summer - autumn- winter
மேலே சொன்ன நாலு தர்மங்களை முறையாக அனுஷ்டிக்க மாட்டதவர்களே / மீறுபவர்கள் / முடியாதவர்களே வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி துர்போதனைகள் செய்பவர்கள்.
அறவழியில் வாழ்ந்து பொருள் ஈட்டி அதை இன்பமாக அனுபவித்து பின் வீடு பேரடைதலே ஆசிரம தர்மம்.
ஆனால் நாம் முதலும் போட மாட்டோம் (அறம்) கடையும் வேண்டாம் (வீடு) ஆனால் இடைப்பட்ட பொருளும் இன்பமும் மட்டுமே நமக்கு எப்போதும் வேண்டும்.
ஜாதி பிறப்பால் அல்ல குணத்தால் என்று சொன்னேனே - ஆசாரம் + தர்மம் = ஆஸ்ரமதர்மம் - எவனொருவன் இந்த 4 தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்கிறானே அவன் ப்ராம்மணன்.
அறத்தை விட்டு விட்டு பொருள் இன்பம் வீடு என மூன்று விஷயங்களை ஏற்கிறானே அவன் க்ஷத்ரியன்.
அறமும் செய்ய மாட்டேன் பொருளும் தேடமாட்டேன் ஆனால் இன்பமாக வாழ்ந்து வீடுபேரடைய ஆசை கொண்டவன் வைசியன் - எதுவுமே செய்யமாட்டேன் ஆனால் வீடு பேரடைவது மட்டும் அவஸ்யம் என நினைப்பவன் சூத்திரன்.
General - OBC - MBC -SC/ST நன்றாகப் படித்து (அறம்) தேர்விலும் நல்ல மார்க் வாங்கி (பொருள்) நுழைவுத்தேர்விலும் முதலில் (இன்பம்) வந்து உயர் கல்வி படிப்பதை (வீடு) வர்ணாஸ்ரம தர்மம் என புரிந்து கெள்ளலாமா?
ஆசாரம் பற்றி அடுத்த பதிவில் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...