ஸ்ரார்தம்...
வீட்டில் இருக்கும் மூத்த கர்த்தா வே செய்ய வேண்டும்... மற்ற உப கர்த்தா க்கள் உடன் இருக்க வேண்டும்.
மூத்த கர்த்தா உடல் நலம் குன்றியவர் அல்லது மனைவி இல்லாதவர் என்றால் அதிகாரம் இரண்டாமவருக்கு.
கர்மாக்கள் கொடுக்க வேண்டியவர் தவறினால் உப கர்த்தா செய்யலாம்.
இப்போது எல்லாம் புரோகிதர்களின் அதீத பேராசை, இழுத்தடிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒப்புக் கொள்வது மந்திர பிரயோகங்களில் சிரத்தை இல்லாமை ஆகியவற்றால், கர்த்தாக்கள் ஸ்மரண தினத்தன்று கோசாலை விருதாஸ்ரமங்களில் சிரார்தத்துக்கு ஆகும் சிலவை விட அதிக பொருள் செலவிட்டு உணவு கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள்.
இங்கேயும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், பல இடங்களில் பணம் கட்டுவதை தவிர்த்து ஒரு இடமாக செய்தால் அந்த பித்ரு அன்னம் தண்ணீருக்கு அலையாமல் இருக்க வேண்டும்... கர்த்தா பணம் கட்டிய இடத்தில் சிரத்தையுடன் ஒரு தர்ப்பணம் கொடுப்பதும் நல்லது.
இப்போதெல்லாம் சம்பாதிக்க ஒரு நல்ல வழி...
மகா பெரியவர் ஆராதனை... ராகவேந்திரர் ஆராதனை, சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆராதனை என்று ஊருக்கு ஊர் கிளம்பி உள்ளனர்.
குரு வின் சமாதி/ பிருந்தாவனம் உள்ள இடத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபரால் மட்டுமே ஆராதனை நடத்த வேண்டும்...
ஆளாளுக்கு தங்கள் தங்கள் ஊரில் ஆராதனை என்று துவங்கினால், சமாதி/பிருந்தாவனத்துக்கு என்ன முக்கியத்துவம்!
ஜெயந்தி விழா ஊர் ஊருக்கு கொண்டாடிவிட்டு போய் சேருங்கள்... அதை விட்டுவிட்டு ஆராதனை என்ற பெயரில் மக்களின் பக்தி நம்பிக்கையை பணத்தை மோசம் செய்ய வேண்டாமே.
No comments:
Post a Comment