Monday, December 23, 2019

ஆனந்தம் ஆனந்தமே -2

ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் என்பது இன்பம் துன்பம் உயர்வு தாழ்வுகளை சமமாக நோக்குவது.
இந்த சமநோக்கு நமக்கு உள்ளே இருக்கிறது - அதை நாம் வெளியே தேடி அலைகிறோம்.
புதிய புதிய இடங்களில் புதிய புதிய குருமார்களிடம் புதிய புதிய உபதேசங்களை கேட்டுக் கேட்டு தேடித் தேடி வாழ்க்கை முடிவதும் ஓடிக்கொண்டே -
ஒரு கணவன் மனைவி - மனைவியின் ஆதிக்கம் நிறைந்த குடும்பம். ஒரு நாள் மனைவி கணவனிடம் 100 ரூபாய் கொடுத்து கோழிக்கறி வாங்கிவரச் சொல்லி அனுப்ப - கணவரிடமிருந்த பணம் களவு போனது - மனைவி நாள் முழுவதும் திட்டித் தீர்த்தார். கணவன் வருத்தமடைந்தான்.
மீண்டும் ஒருநாள் இது போலவே - இந்தமுறை கணவன் தன்னிடமிருந்த பணத்தை ஒரு ஏழை குடும்பத்தின் உணவுக்காக செலவழித்துவிட்டு - மனைவியிடம் பணம் களவு போனதாக சொல்ல - மீண்டும் அர்ச்சனை.
அன்று மனைவி திட்டியபோது வருந்திய மனம் இன்று திட்டியபோது மகிழ்ச்சியாகவே இருந்தது -
முதல் முறை பணம் தொலைந்த போது யாரோ இல்லாத குறையை போக்கிக் கொள்ள திருவிட்டார்கள் என எண்ணத் துவங்க - கணவனின் ஆனந்தம் இன்னும் அதிகமானது
இந்த சம திருஷ்டி குறித்து சாது ஒருவர் ஒரு முட்டாளுக்கு விளக்கிக் கொண்டு இருந்தார்.
சாதுவை அவமானப் படுத்த அந்த முட்டாள் சாதுவுக்கு உணவுக்கு பதிலாக மாமிசத்தை இலையில் படைத்தான் - சம திருஷ்டி என்றீர்களே ஆக இதையே உணவாக எண்ணி சாப்பிடுங்கள் என்று சொல்ல, சாது உடனே ஒரு புலியாக மாறி அந்த மாமிசத்தை திண்ணத் தொடங்கினார்.
ஆக ஆனந்தம் நம் மனோபாவத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும் சமநிலை. 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...