சாரதா மாதா 4
கூட்லி சாரதா மாதா கதை என்று ஆரம்பித்தோம்... சில சுவையான கற்பனைகள் என்று முடித்தேன்... அதற்கும் முன்பாக சில தெரியாத உண்மை களை பதிவிட்டு விடுகிறேன்...
சௌந்தர்யலஹரி பாடல் 75 இல் குறிக்கப்பட்ட திராவிட சிசு யார்?!
பெரும்பாலும் நாம், அவரை திருஞான சம்பந்தர் என்றே அறிகிறோம்... ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கும் சங்கரர் காலம் கிபி 788... ஆனால் காஞ்சி மகா சுவாமி சங்கர பகவத் பாதாள் கி பி 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்று விரிவாக விளக்கி உள்ளார்....
அதாவது சம்பந்தருக்கு முன்பாக வாழ்ந்த ஒருவர் திருஞான சம்பந்தர் பற்றி பாடி இருக்க முடியுமா?!
ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்வோம்... சங்கரர் என்பது இரு நபர்களை குறிக்கும்... காலத்தால் மிகவும் பழமையானவர், சம்பந்தருக்கு முற்பட்டவர் #ஆதிசங்கரர்.... கிபி 788 வாக்கில் வசித்தவர் #அபிநவ_சங்கரர்...
சௌந்தர்யா லஹரி 75 ஸ்லோகம் திராவிட சிசு, ஞானப்பால் நடப்பு, ஆதி சங்கரர் தன்னை குறித்து எழுதிக் கொண்ட ஒரு தற்குறிப்பு ஏற்றம்... காலப்போக்கில் கிபி 788 அபி நவ சங்கரர் / ஆதி சங்கரர் ஆகியோரிடையே இருந்த பெயர் குழப்பம்/ இருண்ட கால வரலாற்று குழப்பம், ஆதி சங்கரர் - திராவிட சிசு திருஞான சம்பந்தர் (கிபி 788 க்கு முற்பட்ட) ஆகிப் போனார்...
மேல் விவரங்களை 5 இல் பேசுவோம்...
அதற்கு முன்பு, கும்பகோணத்தில் இருந்து கேரளா சென்ற சிவகுரு என்ற வைதீகர் மகன் கூட திராவிட சிசுதான்... கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கூட ப்ரம்மணர் தான்... திராவிடம் என்பது இனத்தை குறிப்பது அல்ல.... தென் திசையை குறிப்பது...
ஆர்யாம்பா மகன் ஆதி சங்கரர் #மலையாளி_அல்ல... #தமிழர்...
ஆதி சங்கரர் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்று திருத்தி வாசிக்கவும்.


No comments:
Post a Comment