Wednesday, May 2, 2018

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்-7

சரஸ்வதிக்கு எப்போதுமே அமர்ந்த கோலம்தான். கல்வி கற்க குரு சிஷ்ய நிலைகள் இருக்கை தானே?!
மனது எப்போது சமநிலை படுகிறது?! மனதை ஒருமுகப் படுத்த பத்மாசனத்தில் தானே அமர்கிறோம்... கலைக்கே தாய் சரஸ்வதி.... நிர்மயமான வெள்ளை தாமரை பூவில் அமர்ந்தவள் - பத்மத்திலேயே ஆசனம்.
வேதங்களை உள்ளே அடக்கிய ஞான வீணையை, ஒரு மகனை தாய் தன் மடியில் அமர்த்தி ஜாக்கிரதையாக, பிரியமாக குழந்தைக்கு இதமாக இருக்க கூடிய ஒரு நிலையில் கட்டி அணைத்து ...
தினமும் சரஸ்வதி என்ற உடன் திரு உருவம் கண்ணில் வந்து போகும்... ஆனால், இந்த கோலத்தை மேலே சொன்னது போல, வேதம் வீணா, மகன், அன்னை, கட்டியணைத்து அமர்ந்த நிலை... கற்பனை செய்துதான் பாருங்களேன்! ஒரு வாரம், இப்படிப்பட்ட பயிற்சி - நிச்சியமாக எந்த தெய்வத்தின் முன்னும் நீங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் வெற்றி பெறலாம்.
On the pass... கடவுள் உருவம்/ பிம்பம்/ பிரதிமை எல்லாமே நமக்கு கந்தறி போன்ற ஒரு கைத்தடி, ஊன்றுகோல், நம் மனதை மந்தை மாடு, ஆடுகள் போல இங்கும் அங்கும் செல்லாமல் கட்டி வைக்க ஒரு தறி தான்... கட்டுத்தறி (கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்) தான் மனித வர்க்கத்தின் மானம் காக்கும் ஆடையை தருகிறது... சரியான வழி யில் கட்டுப்படாமல்/ கட்டப்படாமல் இருக்கி அல்லது தளர்த்தி மாற்றி தறி கட்டப்பட்டால் உற்பத்தியாகும் ஆடைகள் கதி?!
மனம் ஒரு முகப்பட நமக்கு ஒரு பிடிப்பு / பற்றுக்கோல் தேவை... அனைத்து தியான வழிகளிலும் முதலில் ஒரு தீபம்/ புள்ளி யில் / பிரணவம், ஸ்வஸ்திகம் என்று துவக்கி முடிவில் எங்கே செல்கிறோம்... உருவமே இல்லாத - ஆகாசம் - பரவெளி - என்றுதான் பயணிக்கிறோம்...
பர காசம்/ பர வெளி யில் ஸ்வயம் ப்ரகாசத்தோடு கலந்து சென்று நாமும் அங்கே ஐக்கியப்பட்டு விட்டால்?!
அதுவே மரணம் இல்லாத ஜீவ ப்ரம்மா ஐக்கிய நிலை. இதை கண்டவர்கள் விண்டிலர் (சொல்வதில்லை) விண்டவர்கள் கண்டிலர் (கண்டதில்லை).
இந்த பற்றுக்கோல் ஒரு காது அறுந்து போன பழைய செருப்பாக கூட இருக்கலாம். இதைத்தான் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறோம். எனவேதான், ஹிந்து தர்மத்தில் பாதுகைக்கு ஏற்றம்!
தியானத்தின் மேன்மை/ சரஸ்வதி ரூப தியானம் என்று சொல்லி சிருங்கேரி யை விட்டு நகர்ந்து செல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.... அன்னை சாரதாம்பாள் நின்ற/ அமர்ந்த கோலத்தின் ஆராய்ச்சி ஒன்று, பின்னே வரும்.
அந்த ஆராய்ச்சிக்கு முன், கந்தறி/ பற்றுக்கோல் ஒரு செருப்பாகவும் இருக்கலாம் என்று சொன்னேன்.... அங்கு இங்கு என்று எண்ண முடியாதபடி எங்கும் பரிபூரணமாக நிறைந்து இருக்கும் இறைவன் நம் பார்வையில் தான் இருக்கிறான். அது தான் நம் புற அக ஒளி... இது குறித்து ஒரு சின்ன கதை யுடன் 8 இல் பேசுவோம்!
Image may contain: Sree Prabhu Naganathan

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...