கர்ப்பம் பகுதி 2
திருமணத்துக்குப் பின் கணவன் மனைவி ஒன்று கூட சாந்தி முகூர்த்த நேரம் குறிக்கப்படும்
சுபயோக சுபதினத்தில் சுபஹோரையில் கணவன் மனைவி நக்ஷத்திரங்களை அனுசரித்து / பெண்ணின் ருது ஜாதகம் மற்றும் மாதவிடாய் நாட்களை அனுசரித்து இந்த முகூர்த்தம் குறிக்கப்படும்...
தற்போது சினிமாக்களில் காட்டப்படும் கற்பழிப்புக்காட்சி ஒன்றுக்கு பிறகே அந்தப் பெண் கர்ப்பம் அடைவதாக காட்டுவார்கள்... அது முற்றிலும் இன்று பொய் அன்று மெய்.
மாதவிடாய் முடிந்து அதாவது 5 வது நாளில் இருந்து (இரத்தப் போக்கு முற்றிலுமாக நின்ற பின்) 16 வது நாள் வரையே பெண்ணின் கருமுட்டைகள் ஆண் விந்தனுவோடு சேர்ந்து குழந்தையை உருவாக்கும்...
மேலும் ஆணின் விந்தனு 15 நாட்களுக்கு ஒரு முறையே வீரியத்துடனிருக்கும்.... மாதமிருமுறையே உடலுறவு அனுமதிக்கப்பட்டது.....
வேளைக்கு இருமுறை தண்ணீர் குடிக்கனும்
நாளைக்கு இருமுறை மலம் கழிக்கனும்
வாரமிருமுறை எண்ணெய் குளியல்
மாதமிருமுறை உடலுறவு
வருடமிருமுறை பேதிக்கு சாப்பிட வேண்டும்
இந்த மாதமிருமுறை உடலுறவு அங்கீகரிக்கப்பட்ட தினங்களும் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?!
அமாவாசை பெளர்ணமி பிரதோஷ ச்ரார்த ஜென்ம நக்ஷத்திர நாட்களாக இருக்கக் கூடாது... மேலும் அந்த குறிப்பிட்ட நாட்கள் விரத நாட்களாக / அசுப காரிய காரணங்களில் கலந்து கொண்ட / சாப்பிட்ட / உள்ளூர் ஆலய காப்பு கட்டிய உற்சவ நாட்களாக இருக்கக் கூடாது...
இந்தனை கட்டுப்பாடுகளுடன் பெண்ணின் மாதவிடாய்க்குப் பிறகான 5 முதல் 16 நாட்களுக்குள்ளான நாட்களாக இருந்து - ஆணுக்கு ஸ்வப்பனஸ்கலிதம் / விந்து நாசம் இல்லாமல் இருந்து முறையாக உடலுறவு நல்ல சூழலில் நல்ல எண்ணங்களுடன் நல்ல ஹோரையில் கூடினால் மட்டுமே சுப புத்திர அதே நேரம் ஒரே உறவில் நல்ல ஆரோக்யமான குழந்தை பிறக்கும்...
அடிக்கடி உடலுறவு காலம் தவறி செய்வதால் விந்தணுக்கள் பாய்ந்து சென்று பெண்ணின் கருமுட்டையோடு இணையும் வாய்ப்பு குறைவு... அதாவது ஒரு மில்லி விந்தணுவில் 10 மில்லியன் அணுக்கள் இருந்தாலே விந்தணு பாயும் தன்மை பெறும்...
அப்படி இல்லாத இன்று தவறான நேரம் அடிக்கடி உடலுறவு செயற்க்கை கருத்தரித்தலால் தான் சமூக சீர்கேட்டுக்கான பிரஜைகளை உற்பத்தி செய்யப்படுகிறது
அவற்றுக்கு ஆரோக்யமும் இல்லை... பிறப்பில் போலியோ - மரபணு குறைபாடு - வியாதிகள் - அங்கஹீணம் - மனநிலை பாதிப்பு - மறுஉற்பத்தி இயலாமை ஏற்படுகிறது...
No comments:
Post a Comment