Wednesday, May 2, 2018

சிருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள்-1

அன்னை ஸ்ரீ சாரதாம்பாள்... 1
ஸ்ரீ குருவுக்கு நமஸ்காரம்...
எனது தகப்பனார் வழி பாட்டி பெயர் சாரதாம்பாள்... இன்று நான் சமூகத்தில் ஓரளவு அந்தஸ்து கவுரவம் கூடி வாழவும், இது நாள் வரை நான் எழுதியுள்ள சில ஆன்மீக/ தத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு முக்கிய காரணம்... எனது பாட்டி சாரதாம்பாள்! அந்த பாட்டியின் பெயர் சொன்னாலே நினைவுக்கு வரும் தெய்வம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா மாதா.
இன்று வரை தரிசிக்க வாய்ப்பு கிட்டாத சிருங்கேரி அன்னையை பற்றி எழுத மிகவும் காலம் தாழ்த்தி வந்தேன்.... சில மாதங்கள் முன்பு அன்பு நண்பர் ஸ்ரீ CA Ramesh Ramamurthy சிருங்கேரி சென்ற போது, அவரிடம் அருகே மலை மீது இருக்கும் கூட்லி சாரதா அன்னையை தரிசித்து வரும்படி சொல்லி இருந்தேன் (நான் செவி வழி கேள்விப்பட்ட தகவல்).
ஆனால், ரமேஷ் க்கு அந்த வாய்ப்பு கை கூடவில்லை... ஆனாலும் அவர் அடி மனதில் அன்று அடியேன் விதைத்து விட்ட அந்த விதை, ரமேஷிடம் ஒரு தேடுதலை உருவாக்க, இன்று திடீரென கூட்லி சாரதா மாதா படங்களை எனக்கு அனுப்பி வைத்தார்... இன்று அக்ஷய திருதியை சுபதினமாக இருப்பதால், Ramani Bairava Athreya Gothram அவர்கள் ஆணைப்படி இந்த தொடர் துவக்கப்படுகிறது....
இது ஒரு தகவல் பதிவே... ஆராய்ச்சி முடிவோ, பிரமானமோ கிடையாது. சிந்தனை பலம், சுவை இருக்கும். இந்த தொடர் சிறப்பாக அமைய ஸ்ரீ சிருங்கேரி மற்றும் என் இஷ்ட காஞ்சி குரு பரம்பரை திருவடி சிந்தித்து எழுத துவங்குகிறேன்.
Image may contain: one or more people and food

சிருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள்-2

சிருங்கேரி ஸ்ரீ சாரதா மாதா - 2
ஹ்ருஷ்ய ச்ருங்கர் ரோம பாதர் ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரர் உபய பாரதி வித்யாரண்யர் (வித்யா சங்கர தீர்த்தர்) ஹரிஹரர், புக்கர், விஜயநகர சாம்ராஜ்யம், ஹொய்சாளர்...துங்கபத்ரா நதி...
நிறைய பெயர்களை முதலிலேயே சொல்லி விட்டேன்... காரணம், எழுதும் போது ஆர்வக்கோளாறு காரணமாக யாரையாவது நினைவு கூர மறந்து விட்டால்?!
துங்கன்/ பத்ரன் என்ற இரண்டு புண்யாத்மாக்கள் பெயரில் புனித நதி... இதன் கரையில் அமைந்து இருப்பதே மந்த்ராலயமும் கூட... அங்கே நதியின் ஒரு பக்கம் கர்நாடகா ஒரு பக்கம் ஆந்திரா...
நதியில் நடந்து பயணித்தால் நதியின் ஆழம், அகலம், பழமை புரியும்... பாறை படிவுகள் எல்லாம் மணல் திட்டுக்களாக இருந்து கால போக்கில் நீரின் தொடர் அழுத்தத்தால் கடினம் பெற்று இருப்பதாக நான் உணர்ந்தேன்.
ரோம பாத மன்னன் ஆட்சிக்காலத்தில் மழை இல்லாமல் போக, அப்போது அறிஞர்கள் ஆலோசனைப் படி பெண் வாடை/ ஸ்பரிசம் இல்லாமல் வாழ்ந்து வந்த ஹ்ருஷ்ய ச்ருங்கர் - ரோம பாத மன்னன் உத்திரவுப்படி சில ஆண் வேடமிட்டு பெண்களால் நைச்சியமாக கவர்ந்து அழைத்து வந்து - ஹ்ருஷ்ய சிருங்கர் பாதம் பட்டு மழை பெற்ற பூமி...
அந்த ஹ்ருஷ்ய ச்ருங்கர் தவத்தால் இந்த புண்ய பூமி சிருங்கேரி என்று அறியப்பட்டு... இங்கே பாம்பின் நிழலில் தவளை இளைப்பாற கண்டு, ஆதி சங்கரர் இங்கே ஒரு ஸ்ரீ மடம் ஸ்தாபிக்க நினைத்து 12 ஆண்டுகள் இங்கே தங்கி சீடர்களுக்கு உபதேசித்த ஸ்ரீங்கேரிக்கு சாரதா மாதாவாக வந்து அருள் பாலித்தது அன்னை சரஸ்வதி தேவியே.
ஒவ்வொரு அவதாரத்திலும் மும்மூர்த்திகள் பங்களிப்பு கட்டாயம் உண்டு... ஸ்ரீ பரமேஸ்வரன் அம்சமான சங்கரருக்கு எப்படி கோவிந்த பாதர் (விஷ்ணு) குருவாக வந்து ஆட்கொண்டாரோ, அதுபோல நான்முகக் கடவுள் ப்ரம்மா மண்டன மிஸ்ரர் என்று வந்து சீடனாக ஆட்பட்டார்.
மண்டன மிஸ்ரர் - ஆதி சங்கரர் வாதம் நடந்த சமயத்தில் மண்டன மிஸ்ரர் (ப்ரம்மா அம்சம்) அவருடைய மனைவியாகிய உபய பாரதி யை (சரஸ்வதி தேவி அம்சம்) ஒரு கடத்தில் ஆவாகனம் செய்து அதை திரைக்கு பின் நிறுத்தி கேள்வி/ வாதம் தொடர.... இதை தனது ஞான திருஷ்டியில் உணர்ந்த சங்கரர் - வாதில் வென்று... பின் உபய பாரதியை தன்னோடு அழைத்து வந்து கர்ம பூமியில் ஞான தீபம் ஏற்றி வைக்க நினைக்க... சரஸ்வதி அன்னையிடம் அவ்வண்ணமே கோரிக்கை வைக்கிறார்!
(சங்கரர்- மண்டன மிஸ்ரர் _ உபய பாரதி வாதம் மிகவும் சுவையானது... அது குறித்து வித்யாரண்ய ஸ்வாமிகள் - ஹரிஹரர் புக்கர் - , பொருள் வேண்டி - மறு ஜென்மம் - துறவு மேற்கொள்ளல்- விஜயநகர சாம்ராஜ்யம் - 14 நூற்றாண்டு இவை குறித்து வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் - இங்கே சிருங்கேரி மடம், சாரதா மாதா, நகர்வு குறித்து மட்டுமே பேசலாம்)
உபய பாரதி - கேரளம் நோக்கிய மலை பயணம் - சலங்கை அடுத்த பதிவில் தொடரும்....
#எவர்கிங்_ஏகாம்பரம்
Image may contain: outdoorImage may contain: 1 personNo automatic alt text available.

சிருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள்-3

ஸ்ரீ சாரதா மாதா - 3
உபய பாரதி (சரசவாணி) ... குமாரில பட்டரை வாதத்தில் வென்ற சங்கரர், குமாரில பட்டர் கேட்டு கொண்டதற்கு இணங்கி, மகிஷ்மதி என்ற ஊருக்கு வந்து, மண்டன மிஸ்ரர் / உபய பாரதியோடு வாதம் செய்ய வருகிறார்.
அன்று, மண்டன மிஸ்ரர் வீட்டில் திவசம். மண்டன மிஸ்ரர் க்ருஹஸ்தர்... சந்யாசிகளை நோக்குவதும் இல்லை... வீட்டின் கதவு தாழிடப்பட்டு, வியாசர் ப்ரம்மணராக எழுந்தருளி இருந்த நேரம்... சங்கரர் அருகே இருந்த தென்னை மரத்திடம் வந்து சாணான் என்ற மந்திரம் ஓத, தென்னை மரம் வளைந்து கொடுக்க, சங்கரர் மரத்தின் மீது ஏறி மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு உள்ளே குதிக்க... அந்த நேரம், விஷ்ணு இலையில் சந்யாசிகளை அமர வைக்க சாஸ்திரத்தில் இடம் உண்டு என்று வியாசர் அறிவிக்க, சங்கரர் தத்துவ விசார பிக்ஷை கேட்க, பின் முதலில் சிரார்த்தம் முடியட்டும் என்று உணவருந்தி...
மறுநாள் போட்டி... பந்தயம்... மண்டன மிஸ்ரர் வென்றால், சங்கரர் க்ருஹஸ்தராக வேண்டும்... சங்கரர் வென்றால் மண்டன மிஸ்ரர் துறவு மேற்கொள்ள வேண்டும்...
இருவர் கழுத்திலும் மாலை அணிவிக்கப்படும்... யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவர் தோற்றவர்...
நடுவராக சரசவாணி... (உபய பாரதி) - மண்டன மிஸ்ரர் மனைவி... 21 நாட்கள் வாதம்... மண்டன மிஸ்ரர் மாலை வாடிவிட...
வாக்தேவி... இருவரும் பிக்ஷை க்கு வாருங்கள் என்று அழைத்து முடிவை அறிவித்தாள்... பிக்ஷை சந்யாசிகளுக்கு உரியது... இருவரும் பிக்ஷைக்கு வரலாம் என்றதன் மூலம் மண்டன மிஸ்ரர் மாலை வாடி தோற்று துறவு மேற்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தி...
சரசவாணி சத்ய லோகம் செல்வதாக கூற, சங்கரர் தடுத்து, வன துர்கா மந்திரம் ஜெபித்து அம்பிகையை தான் (சங்கரர்) விரும்பும் நேரமே சத்ய லோகம் செல்ல வேண்டும் என்று நிர்பந்தித்து பின் மகாராஷ்டிர தேசம் முழுவதும் சென்று அத்வைத சிந்தாதத்தை நிலை நாட்டினார் சங்கரர்...
சங்கரருக்கு ஒரு ஆசை துளிர் விட... அம்மா, சரஸ்வதி மாதா... நீ என்னோடு என் பூர்வ தேசம் வந்து என் பூமியில் ஞான தீபம் ஏற்றி, என் அன்னைக்கு (ஆர்யாம்பாள்) தரிசனம் கொடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று சரசவாணி யிடம் விண்ணப்பிக்க...
உபயபாரதி...
சங்கரா, நான் உன்னோடு வருவேன்... நீ திரும்பி பார்க்காமல் முன் செல்ல வேண்டும்... எங்கே நீ நான் வருகிறேனா என்று நின்று திரும்பி பார்க்கிறாயோ அங்கேயே நான் நின்று நிலை பெறுவேன்...
சங்கரர், அம்பிகை காலில் இருந்த சலங்கையை நம்பி ஒப்புக்கொண்டு நடக்க...
இங்கே சில ரசமான கற்பனைகள்...பதிவு 4...
#எவர்கிங்_ஏகாம்பரம் 

Image may contain: 1 personImage may contain: one or more people

சிருங்கேரி ஶ்ரீ சாரதாம்பாள்-4

சாரதா மாதா 4
கூட்லி சாரதா மாதா கதை என்று ஆரம்பித்தோம்... சில சுவையான கற்பனைகள் என்று முடித்தேன்... அதற்கும் முன்பாக சில தெரியாத உண்மை களை பதிவிட்டு விடுகிறேன்...
சௌந்தர்யலஹரி பாடல் 75 இல் குறிக்கப்பட்ட திராவிட சிசு யார்?!
பெரும்பாலும் நாம், அவரை திருஞான சம்பந்தர் என்றே அறிகிறோம்... ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கும் சங்கரர் காலம் கிபி 788... ஆனால் காஞ்சி மகா சுவாமி சங்கர பகவத் பாதாள் கி பி 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்று விரிவாக விளக்கி உள்ளார்....
அதாவது சம்பந்தருக்கு முன்பாக வாழ்ந்த ஒருவர் திருஞான சம்பந்தர் பற்றி பாடி இருக்க முடியுமா?!
ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்வோம்... சங்கரர் என்பது இரு நபர்களை குறிக்கும்... காலத்தால் மிகவும் பழமையானவர், சம்பந்தருக்கு முற்பட்டவர் #ஆதிசங்கரர்.... கிபி 788 வாக்கில் வசித்தவர் #அபிநவ_சங்கரர்...
சௌந்தர்யா லஹரி 75 ஸ்லோகம் திராவிட சிசு, ஞானப்பால் நடப்பு, ஆதி சங்கரர் தன்னை குறித்து எழுதிக் கொண்ட ஒரு தற்குறிப்பு ஏற்றம்... காலப்போக்கில் கிபி 788 அபி நவ சங்கரர் / ஆதி சங்கரர் ஆகியோரிடையே இருந்த பெயர் குழப்பம்/ இருண்ட கால வரலாற்று குழப்பம், ஆதி சங்கரர் - திராவிட சிசு திருஞான சம்பந்தர் (கிபி 788 க்கு முற்பட்ட) ஆகிப் போனார்...
மேல் விவரங்களை 5 இல் பேசுவோம்...
அதற்கு முன்பு, கும்பகோணத்தில் இருந்து கேரளா சென்ற சிவகுரு என்ற வைதீகர் மகன் கூட திராவிட சிசுதான்... கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கூட ப்ரம்மணர் தான்... திராவிடம் என்பது இனத்தை குறிப்பது அல்ல.... தென் திசையை குறிப்பது...
ஆர்யாம்பா மகன் ஆதி சங்கரர் #மலையாளி_அல்ல... #தமிழர்...
ஆதி சங்கரர் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்று திருத்தி வாசிக்கவும்.
Image may contain: flower, plant and foodImage may contain: one or more people and people standing

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்-5

சாரதா மாதா சிருங்கேரி _ 5
கடந்த தொடரில் நான் சொல்லி இருந்த ஒரு விஷயத்தை இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன்!
ஒரு தலைப்பை குறித்து எழுத நினைப்பது மட்டுமே நம்மால் முடியும். தன்னலம் இல்லாமல் பொது நலம் கருதி நாம் நம் பணியை தொடங்கினால், நம்மை ஊக்குவித்து நமக்குள் நல்ல உணர்வை ஊட்டி கைபிடித்து அழைத்துச் செல்வது பெரியவர்களின் ஆசியும், ஆண்டவன் கருணையும் மட்டுமே!
சிருங்கேரி குறித்த இந்த தொடரில் கூட்லி - நின்ற கோல சாரதா தேவி குறித்து மட்டும் எழுத நினைத்து அதிக பட்சம் 4 பக்கங்கள் மட்டுமே எழுத நினைத்தேன். ஆனால் ஸ்ரீ சாரதாம்பிகையின் கருணை வேறாக... புதிய புதிய சிந்தனைகள் நமக்கு உள்ளே உதிக்க, இங்கே வரி வடிவில்...
ஹ்ருஷ்ய ச்ருங்கர் தவம் செய்த இடம் என்றும் உரோம பாத மன்னன் காலம் குறித்து சொல்லி இருந்தேன்... இப்போது சிருங்கேரி தலம் / பழமை / பெருமை குறித்த ஒரு செய்தி....
தசரத சக்கரவர்த்திக்கு பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ ராமன் ஜனன காரண அஸ்வமேத/ புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டி, இதே ஹ்ருஷ்ய ச்ருங்கர் / ரோமபாத மன்னன் / மழைவளம் விவாதிக்கப்பட்டு புரோகிதர் அழைக்கப்பட்டார்.... சிருங்கேரி ராமாயண காலத்துக்கு - திரேதா யுகத்துக்கு முந்தைய காலம் தொட்டே பெருமை பழமை உள்ள தலம்...
இங்கேயே, கலைவாணி வசிக்க நினைத்த வரலாற்று தொகுப்பே இந்த தொடர்....
ஆதி சங்கரர் ஸ்தாபித்த 4 ஸ்ரீ மடங்கள் ஜ்யோதிர், த்வாரகா, பூரி, சிருங்கேரி பின், ஆதி சங்கரர் கடைசியாக நிறுவிய சர்வ் ஞான பீடம் காஞ்சி காம கோடி பீடம்.
ஆனால் இந்த காஞ்சி மடம் அங்கீகரிக்கப்படுவதில் நிறைய பிணக்குகள், சட்ட போராட்டங்கள் இருந்தன... இப்போதும் கொஞ்சம் ஆங்காங்கே ego இருக்கவே இருக்கு!
மற்ற மடங்கள் செல்வம் ஞானம் வைராக்கியம் திடசித்தம் கொடுக்கலாம்... ஆனால் ஆதி சங்கரருக்கே ஞானம் ஏணி அதன் காரணமான மோக்ஷம் காமத்தின் (ஆசையின்) கடை கோடியில் இங்கேயே கைவர, பகவத் பாதாள் கேதாரம் சென்று ஐக்கிய நிலை பெறுகிறார்...
காபாலிகம்/ இந்த பரந்த பாரத தேசத்தின் ஒருமைப்பாடு குறித்த ஒரு செய்தியும் on the pass பதிவாக 6இல்...
No automatic alt text available.Image may contain: Sree Prabhu NaganathanNo automatic alt text available.

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்-6

சிருங்கேரி சாரதா மாதா _ 6
5... ஞானேந்திரியம், 5 கர்மேந்திரியம், 5 பூதம்... அது போலவே குருமார்களும் 5...
1. குரு -
ஒரு சீடனுக்கு தற்போது கல்வி கற்றுத் தரும் குரு.
2.பரம குரு -
ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்ட குரு - சீட மரபை நிலைநாட்டிய குரு. (எ. கா., ஆதி சங்கரர், அத்வைத தத்துவத்தைநிலைநாட்டிய பரம குரு).
3பராபர குரு (Parātpara-Guru) –
பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு – சீட மரபுகளை தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்தவர் மகாகுரு (எ.கா., வேத வியாசர்).
4.பரமேஷ்டி குரு’’’–
மோட்சத்தைவழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. (எ. கா., தட்சிணாமூர்த்தி அல்லது சிவன்)
மேலே சொன்ன 4 குருமார்களும் நிலம், நீர், நெருப்பு, காற்று போல உணர முடிந்த சகுண ப்ரம்மங்கள் அல்லது குரு என்று கூட சொல்லலாம்... முன்னே சொன்ன 4 ஸ்ரீ மடங்கள் என்றும் உருவகம் செய்யலாம்.
காணவோ, உணரவோ, கண்டு உரைக்க முடியாமல் அதிலேயே ஒன்றி ஆகாசமாக நிர்குணப்ரம்மமாக பர வெளியாக உள்ள குரு... அதுவே காமகோடி பீடம்.
திருச்சி திரு ஆனைக்கா வில் வைதீக பூஜை தான்... இங்கே வடக்கு விபூதி அக்ராஹாரத்தில் ஒரு காஞ்சி சங்கர மடம் ஒன்று உண்டு... இந்த ஸ்ரீ காரியாலயம்... அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு தாடங்க பிரதிஷ்டை செய்ய காஞ்சி/ சிருங்கேரி மடங்கள் இடையே நடந்த தலைமுறை வழக்குக்காக ஆசார்யாள் தங்கி இருக்கவே உருவாக்கப்பட்டது...
இங்கே அகிலாண்டேஸ்வரி உக்ரஹத்தை மட்டுப்படுத்த, அன்னையின் கண் பார்வையில் உயர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட முக்குருணி விநாயகர் பீடத்தை உற்று நோக்கிப் பாருங்கள்... அதில் ஆதி சங்கரருக்கு முன் 5 சீடர்கள் அமர்ந்து பாடம் கேட்கும் விதமாக சிற்ப அமைப்பு உண்டு...
சில உருவாக்கப்பட்ட ஆவணங்கள்... ஆதி சங்கரர் தமிழ்நாட்டுக்கு உள்ளே வந்ததே கிடையாது என்று சாட்சி சொல்கின்றன... ஆனால், காபாலிகர்களை ஒடுக்க சங்கரர் சென்னை திருவேற்காடுக்கும் வந்ததாக சான்றுகள் உள்ளன.
இந்த காபாலிகம் என்கிற வழிபாடு வட இந்தியாவில் பிரசித்தம்... 2500 ஆண்டுகள் முன்பே தென்னிந்தியாவில் அதுவும் இப்போதைய ராஜ்தானி எல்லைக்குள் இருந்தது என்றால், இந்த தேசம் ஒரே தேசம் தானே?!
இதை சுலபமாக புரிந்து கொள்ள... ஏசு கிறிஸ்து வின் தேச வாரி படங்களை ஒருமுறை கூகிள் உள்ளே சென்று பதிவு இறக்கி பாருங்கள்... சீன ஏசு, மங்கோலிய அல்லது கொரிய ஏசு வுடன் கூட ஒத்துப் போகமாட்டார்...
7 இல் மீண்டும் சிருங்கேரி க்கே போய்விடுவோம்...

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்-7

சரஸ்வதிக்கு எப்போதுமே அமர்ந்த கோலம்தான். கல்வி கற்க குரு சிஷ்ய நிலைகள் இருக்கை தானே?!
மனது எப்போது சமநிலை படுகிறது?! மனதை ஒருமுகப் படுத்த பத்மாசனத்தில் தானே அமர்கிறோம்... கலைக்கே தாய் சரஸ்வதி.... நிர்மயமான வெள்ளை தாமரை பூவில் அமர்ந்தவள் - பத்மத்திலேயே ஆசனம்.
வேதங்களை உள்ளே அடக்கிய ஞான வீணையை, ஒரு மகனை தாய் தன் மடியில் அமர்த்தி ஜாக்கிரதையாக, பிரியமாக குழந்தைக்கு இதமாக இருக்க கூடிய ஒரு நிலையில் கட்டி அணைத்து ...
தினமும் சரஸ்வதி என்ற உடன் திரு உருவம் கண்ணில் வந்து போகும்... ஆனால், இந்த கோலத்தை மேலே சொன்னது போல, வேதம் வீணா, மகன், அன்னை, கட்டியணைத்து அமர்ந்த நிலை... கற்பனை செய்துதான் பாருங்களேன்! ஒரு வாரம், இப்படிப்பட்ட பயிற்சி - நிச்சியமாக எந்த தெய்வத்தின் முன்னும் நீங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் வெற்றி பெறலாம்.
On the pass... கடவுள் உருவம்/ பிம்பம்/ பிரதிமை எல்லாமே நமக்கு கந்தறி போன்ற ஒரு கைத்தடி, ஊன்றுகோல், நம் மனதை மந்தை மாடு, ஆடுகள் போல இங்கும் அங்கும் செல்லாமல் கட்டி வைக்க ஒரு தறி தான்... கட்டுத்தறி (கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்) தான் மனித வர்க்கத்தின் மானம் காக்கும் ஆடையை தருகிறது... சரியான வழி யில் கட்டுப்படாமல்/ கட்டப்படாமல் இருக்கி அல்லது தளர்த்தி மாற்றி தறி கட்டப்பட்டால் உற்பத்தியாகும் ஆடைகள் கதி?!
மனம் ஒரு முகப்பட நமக்கு ஒரு பிடிப்பு / பற்றுக்கோல் தேவை... அனைத்து தியான வழிகளிலும் முதலில் ஒரு தீபம்/ புள்ளி யில் / பிரணவம், ஸ்வஸ்திகம் என்று துவக்கி முடிவில் எங்கே செல்கிறோம்... உருவமே இல்லாத - ஆகாசம் - பரவெளி - என்றுதான் பயணிக்கிறோம்...
பர காசம்/ பர வெளி யில் ஸ்வயம் ப்ரகாசத்தோடு கலந்து சென்று நாமும் அங்கே ஐக்கியப்பட்டு விட்டால்?!
அதுவே மரணம் இல்லாத ஜீவ ப்ரம்மா ஐக்கிய நிலை. இதை கண்டவர்கள் விண்டிலர் (சொல்வதில்லை) விண்டவர்கள் கண்டிலர் (கண்டதில்லை).
இந்த பற்றுக்கோல் ஒரு காது அறுந்து போன பழைய செருப்பாக கூட இருக்கலாம். இதைத்தான் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறோம். எனவேதான், ஹிந்து தர்மத்தில் பாதுகைக்கு ஏற்றம்!
தியானத்தின் மேன்மை/ சரஸ்வதி ரூப தியானம் என்று சொல்லி சிருங்கேரி யை விட்டு நகர்ந்து செல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.... அன்னை சாரதாம்பாள் நின்ற/ அமர்ந்த கோலத்தின் ஆராய்ச்சி ஒன்று, பின்னே வரும்.
அந்த ஆராய்ச்சிக்கு முன், கந்தறி/ பற்றுக்கோல் ஒரு செருப்பாகவும் இருக்கலாம் என்று சொன்னேன்.... அங்கு இங்கு என்று எண்ண முடியாதபடி எங்கும் பரிபூரணமாக நிறைந்து இருக்கும் இறைவன் நம் பார்வையில் தான் இருக்கிறான். அது தான் நம் புற அக ஒளி... இது குறித்து ஒரு சின்ன கதை யுடன் 8 இல் பேசுவோம்!
Image may contain: Sree Prabhu Naganathan

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்-8



அன்னை சாரதாம்பாள் -8
ஞானி ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார்... வழியில் அவரை சோதிக்க எண்ணி, சில இளைஞர்கள், அய்யா, அங்கே இறந்து அழுகிய நிலையில் உள்ள நாயின் சடலத்தை பாருங்கள்... அதிலும் உங்கள் கடவுள் இருக்கிறாரா என்று வினா எழுப்பினர்!
ஞானி, பொறுமையாக ஆம், என்று பதில் சொன்னார்... அந்த இளைஞர்கள் அதை கொஞ்சம் விளக்கமாக சொல்லும்படி கேட்க...
அந்த நாயின் சடலத்தின் வாய் பகுதி பற்கள், அவை அமைக்க பட்டுள்ள நேர்த்தியை பார்த்தாலே புரியும்...
மேல் இரண்டு, கீழ் இரண்டாக 4 கூரான சிங்கப் பற்கள்... இரையை குத்தி வாகாக இழுக்க .. பின்பு, பின் வரிசையில் ரம்பத்தின் அமைப்பில் அந்த உணவை அரைத்து சிறு துகள்கள் ஆக்கி உள்ளே செலுத்த நாக்குக்கு எதுவாக... அந்த படைப்பின் நேர்த்தி இறைவன்...
கடவுள் நம் பார்வையில் தான் இருக்கிறார்...
வீட்டில் குருநாதர் திருவடிகளை ஆசையோடு வாங்கி வைக்கிறோம்... அதை காணும் போது அவர் முகத்தை ஒரு கணம் நினைத்து விட்டுபோகாமல், நாம் அவரோடு செலவிட்டு இனிமையான தருணங்கள்... குருவின் உபதேசத்தில் நமக்குப் பிடித்த சில சத்தான விஷயங்கள் என்று மனதின் திசையை ஒரு குறிப்பிட்ட வழியில் தொடர்ந்து கட்டுப்பாடாக செலுத்துங்கள். மனமும் ஒருமுகமாகும்... மனதுக்கு நல்ல விஷயங்கள் அசை போடும் பயிற்சி கிடைக்கும். கீழான சிந்தனை நேரம் படிப்படியாக குறையும்...
சரஸ்வதி அமர்வில் இப்படித்தான் நாம் சிந்தித்து பழக வேண்டும்... சரஸ்வதி வெள்ளை தாமரையில் அக்ஷ மாலை வேத புத்தகம் கையில் ஏந்தி அமர்ந்து இருக்கிறாள்... இவர் ஞான குரு தென்முக கடவுள் தங்கை... அவரும் ஸ்படிக ரஜத வர்ணம் (ஸ்படிகம்/ வெள்ளி) சரஸ்வதியும் அண்ணன் போல... வெள்ளை நிற பிரியை... புடவை, தாமரை.. தக்ஷிணாமூர்த்தியும் வீணை கையில் உடையவர்... தங்கையிடமும்.... இருவர் கைகளிலும் அக்ஷர மாலை, வேத புத்தகம்...
இப்படி மனதை ஒன்றை தொடர்ந்து இன்னொரு சத் விஷயத்தால் உருவம் பற்றி சிந்தித்தால் - அதுவே சிறந்த மனப் பயிற்சி வழி...
சிருங்கேரி மடம் வித்யாரண்யர், ஹரிஹரர், புக்கர் காலங்களில் கிபி 14ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப் பட்டது... ஏற்கனவே ஆதி சங்கரர், சங்கரர் அவர்களின் வெவ்வேறு காலங்கள் குறித்து பேசினோம்...
இனி, ஸ்ரீ மடங்கள் root/ ஸ்தாபனம் குறித்து பேசுவோம் 9இல் 
#எவர்கிங்_ஏகாம்பரம் 

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் - 9

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் - 9
சில இணைப்பு படங்கள்... கூகிள் உபயம் தான்...
ஏற்கனவேயே சொன்னேன்... கிறிஸ்துவுக்கு முன் கி மு 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் தான் சௌந்தர்யலகரியில் குறிப்பிடப்பட்ட திராவிட சிசு.
கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றுமொரு சங்கரர் ஏதோ திருஞான சம்பந்தர் குறித்த பதிவு செய்தார் என்று நாம் புரிந்து கொண்டோம்... போகட்டும்...
3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பௌத்தர், இந்த நாட்டில் historical figure... புத்தருக்கு பின் வாழ்ந்த 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆதி சங்கரர் mythological figure... இதுதான் கிறித்தவம் (ஆங்கிலேயன்) செய்த வரலாற்று பிழையோடு கூடிய சதி...
ஆதி (பூர்வ) சங்கரர் காலத்தில் புத்தரால் கொஞ்சம் நலிவடைய செய்யப்பட்ட சனாதன தர்மத்தை ஆதி சங்கரர் தூக்கி நிறுத்தினார்...
பின்னால், திருஞான சம்பந்தர்/ அப்பர் காலத்தில் மீண்டும் சமணம் தழைக்க, மாசில் வீணை, வேயுறு தோளி பங்கன் எல்லாம் கேட்டோம் பார்த்தோம்... அதன் பின் 7/8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரரும் ஒருவர்... இப்போது நாம் அவரைத்தான் ஆதி சங்கரர் என்றே நம்பி திராவிட சிசு திருஞான சம்பந்தர் கதையை நம்பி விட்டோம்... இது விவரம் முந்தைய பதிவுகளில் லிங்க் கொடுத்து உள்ளேன்...
இனி, இங்கே screen shot கள் மட்டுமே.
மீதி விவாதம் பதிவு 10 இல்...  

No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: Rathina Kumar, textImage may contain: Rathina Kumar, text

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்-10

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் - 10
ஆதி சங்கரர் காலம், காஞ்சி காமகோடி பீடம், குருமார்கள் பிரவரம் (தொடர்ச்சியான பெயர்/ பிறந்த ஊர், பீடத்தில் இருந்த ஆண்டுகள், சமாதியான இடம்) இன்று நடப்பில் இருக்கும் 70வது பீடாதிபதி, காஞ்சி பீடம் சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக உள்ளது...
அதே போல சிருங்கேரி மடம், ஸ்தாபகர் 14ஆம் நூற்றாண்டு வித்யாரண்ய ஸ்வாமிகள், ஹரிஹரர், புக்கர் காலக்கணக்கு, ஹொய்சால மன்னர்கள் நிர்மாணித்த கோவில், இன்று உள்ள 36வது பீடாதிபதி சிருங்கேரி மடத்தின் வரலாற்றை நமக்கு உணர்த்தும் என்று நம்புவோம்...
நான் ஏதோ காஞ்சி மட பக்தன், அதனால் சிருங்கேரி மடத்தின் பிரவரத்தை குறைத்து மதிப்பிடுவதாக தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம்...
எனக்கு இஷ்ட ஆச்சாரியர் காஞ்சியாக இருந்தாலும், என் பூர்வீகம் தேடி பார்க்கும்போது நெல்லை, சிருங்கேரி மடம், தெலுங்கு என் தகப்பனார் வழி பாட்டி பெயர் என்று சிருங்கேரி மடம் தான் எங்கள் ஆச்சார்யாராகவும் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன்.
சிருங்கேரி இடமே ராமாயணத்துக்கு முற்பட்ட ஹருஷ்ய ஸ்ருங்கரால் புனிதம் அடைந்தது, ஆதி சங்கரரின் 12 ஆண்டு கால தவத்தால் புனிதம் அடைந்தது...
அந்த மேன்மையின் மாண்புதான் அந்தர்முகமான பின்னால் தோன்றிய இந்த மடம் என்று நான் நம்புகிறேன்.
இனி, சங்கரர் உடன் நடந்து வந்த உபய பாரதி/ சரசவாணி பற்றி பேசலாமா?!
சங்கரர் பிரம்மாவின் அம்சமான, மண்டன மிஸ்ரரை வாதில் வென்று, அவரை சந்நியாசம் ஏற்க செய்து விட்டதால், அவர் மனைவியாக வாழ்ந்த சரசவாணி அதனால் மீண்டும் சத்ய லோகம் சென்று விட எண்ணிய சரஸ்வதி தேவியை தன் தாய்க்கு அருளிட வேண்டி தன் பின் காலடிக்கு வர வேண்டினார்...
இந்த நிலையில் மலை பாதையில் வந்து கொண்டு இருந்த அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம்...
சங்கரர் முன் செல்ல வேண்டும்... அன்னை சரஸ்வதி பின்னே நடந்து வருவார்... எங்கே சங்கரர் திரும்பிப் பார்கிறாரோ அங்கே அம்பாள் நின்று விடுவதாக...
சிருங்கேரி வந்த உடன் ஹ்ருஷ்ய ஸ்ருங்கர் தவம் செய்த இடம், மலை சாரல் ரம்யம், மாலையாக ஓடும் துங்க பத்ரா நதி கூட்லி... (இப்போது உள்ள சிருங்கேரி மடம் அருகே மலையில்) அம்பாள் நின்ற கோலத்தில்....
படம் இணைப்பு...
கடைசி இரண்டு பதிவுகளில் controversy என்று தோன்றினாலும், மனதில் பட்டதை அப்படியே எழுதிவிட்டேன் என்பதால் மேலும் தொடராமல் நிறைவு செய்கிறேன்!
Image may contain: 1 person
Image may contain: 1 personImage may contain: 1 person

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...