கர்ப்பம் பகுதி 4
மூலிகை பசுநெய் - இங்கும் விஞ்ஞானம்...
எண்ணெயும் தண்ணீரும் கலக்குமா?! கலக்கும்.... எப்போது சோப்புத் தூள் கலந்தால்... an absolute chemical reaction... அதுபோல மூலிகை கலந்த பசுநெய் கர்ப்பப் பையில் உள்ள பனிக்குட நீராக பிண்டத்தை சுற்றியிருந்து காக்கிறது...
நீரின்றியமையாது உலகு / நீரால் சூழப்பட்ட உலகம்... நாமும் பிண்டத்தில் அப்படியே....
பசு நெய்....
ஆம்.... விந்தணு குறைபாடுடையவர்களுக்கு merck pharma தயாரித்த evion என்ற மருந்து உட்கொள்ள அறிவுறுத்துவார்கள்.... முட்டையின் வெள்ளைக்கரு பசு நெய்யில் வைட்டமீன் ஈ அதிகம் உள்ளது....
அதனாலேயே மஹாபாரதத்திலும் பசு நெய்க்ககுடத்தில் பிண்டம்.... இப்போது திரு-கரு-காவூர் கர்ப்ப ரக்க்ஷ அம்பிகை ஆலயத்திலும் பசு நெய்ப் பிரசாதம்...
இந்த பதிவை (ஆராய்ச்சித் தொடரை) முடிக்கவே முடியாத அளவுக்கு விஞ்ஞானத் தகவல்கள் மனதில் தொடர்கின்றன...
இருப்பினும்.... நேரமின்மை கருதி கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் வைட்டமீன் ஈ அது குறித்த ஒரு விஞ்ஞானத் தகவலோடு முடிக்கலாம்....
மாட்டாஸ்பத்திரி... ஆம் எழுபதுகளின் முடிவில் என்பதுகளின் ஆரம்பத்தில் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி சாலையில் பெரிய நிலப்பரப்பில் இருந்த வெட்னெரி அதாவது கால்நடைகளுக்கான மருத்துவ மனை மாடுகளுக்கான ஆஸ்பத்திரி (hospital) மாட்டாஸ்பத்திரி உண்டு.
அங்கு வெளிநாட்டு பெரிய காளைகள் (ஜெர்ஸி மட்டுமே நினைவில் இருக்கிறது) 4 அல்லது 5 வகைகள் உண்டு.
அந்த காளைகளை நேரடியாக மாடுகளோடு இணையவிடாமல் எதாவது ஒரு பெரிய பசுமாட்டை வளையத்துக்குள் நிறுத்தி காளைகளை பாயவிட்டு காளைகளின் பிளய்புறுப்பில் ப்ளாஸ்க் வடிவில் ரப்பர் குழாயின் முடிவில் பாட்டில் ஒன்றுடன் கூடிய ஒரு sperm collection vessal மூலம் காளையின் விந்தணுக்கள் சேகரிக்கப்படும்...
இந்த விந்தணுக்களை சில கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு அதனுடன் சில ஆரோக்யமான பரிக்க்ஷிக்கட்பட்ட உயிர்த் துடிப்போடு கூடிய புதிய நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பிப்பெட் (ஒரு வகை இருபுறம் துவாரமுடைய மெல்லிய கண்ணாடி குழாய் மூலம்) நன்கு கலக்குவார்கள்...
அதாவது காளையின் சில நூறு மில்லியன் உயிர்ப்புள்ள விந்தணுக்களோடு கோழியின் விந்தணுவும் கலக்கப்பட்டு செயற்கையாக அதிக பாயும் தன்மை உருவாக்கப்பட்டு அந்த கலவை பகுதி பகுதியாக freezer குடுவையில் இடப்பட்டு மீண்டும் சினைப்பிடிக்க அன்றயதினம் கொண்டுவரப்பட்ட பசுக்கள் இருக்குமிடத்துக்கு கொண்டு வரப்படும்.
மேற்படி பசுக்கள் கன்று ஈன்று குறைந்தபட்சம் 9 மாதங்கள் ஆகி இருக்கும்... சினை வலு என்ற திரவம் போன்ற நீண்ட கொழகொழப்பான கம்பி போல பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பசு விரகக் குரல் எழுப்பும் பக்குவ காலம் (இது நம்மாளு / முந்தானை முடிச்சு போன்ற பாக்யராஜ் படங்களில் மேற்படி பசு குரல் எழுப்பும் / மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிச் செல்லப்படும் காட்சி அமைப்புகள் உள்ளது) மட்டுமே கொண்டு வரப்பட்ட மேற்படி பசுக்களின் பிறப்புறுப்பு வழியாக அதன் சினை பைக்குள் நீண்ட கண்ணாடி குழாய் வழியாக காளையின் விந்தணுக்கள் வைக்கப்படும்....
கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் விந்தணுக்களை பலப்படுத்தும் வைட்டமீன் ஈ இருப்பது என்பதற்காக இத்தனை நேரம் பேசினோம்...
இங்கு பசுக்களின் பிரசவம் / பாரத சர்க்கரை நோய்க்கான காரணம் குறித்து சில விஞ்ஞானத் தகவல்கள் இருக்கிறது... விருப்பமிருந்தால் பார்க்கலாம்....