மஹாபாரத போர் (1)
குருக்ஷேத்திரப் போர் துவங்கிய அன்றே பாண்டவர்களின் வெற்றியை துரியோதனனே அறிவித்துவிட்டான்.
ஏன், வியாசரும் கூட....
பாண்டவர்கள் யுத்த ஆரம்பத்தை அறிவிக்க தத்தமது சங்குகளை ஊதி ஒலிக்கச் செய்தனர் - இந்த ஆரவார ஒலி துரியோதனாதியருடைய இருதயங்களை பிளந்தது. அத் 1. ஸ் 19.
உடல் என்பது கருவி அனால் மனம் புத்தி சித்தம் ஞானம் ஆனந்தமே நம்மை உள்ளிருந்து இயக்கும் கர்த்தா. பாண்டவ சேனையில் தருமம் வீரியம் பலம் ஞானம் வைராக்கியம் போன்ற அந்த கரணங்கள் குறிக்கப்பட்டு அதை பரமாத்மாவின் இயக்கத்தில் இருப்பனவாக குறிக்கப்பட்டது - ஆனால் கெளரவ சேனை முதல்வர்கள் யாராலும் வெல்ல முடியாத பலசாலிகளாக அதாவது உடல் என்ற கருவியின் பிரதாபத்தினால் சிறப்பிக்கப்பட்டவர்களாகவே போர்களத்தில் குறிக்கப்பட்டார்கள்.
பாண்டவர்களின் போர்த்திட்டம் - கடைசி நேர ஆலோசனைகள் எல்லாம் பாசறைக்குள்ளேயே முடிந்தது - ஆனால் 11 அக்க்ஷொரவ்னி படைகள் கொண்ட துரியோதனன், போர்க்களத்துக்கே வந்து - போர் துவங்கும் முன்பாக 7 அக்க்ஷொரவ்னி படைகள் கொண்ட பாண்டவர்கள் படை த்ருஷ்ட்டத்யும்ணனால் அழகாக சிறப்பாக அணிவகுக்கப் பட்டு நிறுத்தப்பட்டதாக துரோணரிடம் சொல்கிறான்.
சேனை நாயகராக பீஷ்மர் நிற்க்கும் போது சக்ரவர்த்தி துரோணரிடம் வந்து strategy குறித்து விவாதிக்கிறான் - மேலும் கடைசியாக எல்லோரையும் நோக்கி - படை தனது அதனால் எல்லோரும் எனக்குரியதை போலவே முக்யத்துவத்தை பீஷ்மருக்கு தந்து பிதாமகரை ஏற்றிக் காக்க வேண்டும் என்கிறான்.
பரசுராமருக்கு இணையாக போர்புரிய வல்ல பீஷ்மரை பற்றிய எதிர்மறை அபிப்பிராயங்களை இது கெளரவ சேனையிடம் ஊக்குவித்துவிட்டது.
துரோணரை கோபப்படுத்தி வைப்பதாக எண்ணி துரியோதனன் உமது சீடர்கள் பாண்டவர்கள் த்ருட்டத்யும்ணன் என பேசி சுற்றி இருந்த சேனையிடத்தே, அரசரே போற்றும் எதிரணி வீரர்கள் நம் ஆசாரியரின் சீடர்கள் என ஒரு பச்சாதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம்.
கடைசியாக, பாண்டவர் அணியில் அர்ச்சுனன் தவிர வேறு பிறப்புக் காரண பராக்ரமசாலிகள் இல்லை. மற்ற நால்வரும் வெல்ல முடியாத சக்தி படைத்தவர்களும் அல்ல என்பது கர்ணனிடம் குந்தி வாங்கிய சத்தியத்தால் உறுதியாகிறது.
மாறாக, கெளரவ சேனையில் பீஷ்மர், துரோணர், கர்ணன், க்ருபாச்சாரியார், அஸ்வத்தாமன், பூர்சிரவசு, சல்லியன், ஏகலைவன் என பெரிய பெரிய பராக்ரமசாலிகள் நிறைந்திருந்தனர். இது கூட ஒருவேளை too many cooks spoils the dish ஆக இருக்கலாம்....
No comments:
Post a Comment