Friday, February 7, 2020

காண்டீவம்...

காண்டீவம்...
காண்டீவம் என்பது அர்ஜூனன் கையில் இருந்த வில். இதற்கு ஒரு வரலாறு உண்டு...
கெளரவர்களுக்கும் / பாண்டவர்களுக்கும் ராஜ்ய பாகப் பிரிவினை செய்ய பெரியோர்கள் அறிவுரைப்படி வேறு வழியில்லாது துரியோதனன் ஒப்புக் கொள்கிறான்.
ஆனாலும், பேராசை காரணமாக துரியோதனன் வளமான பகுதிகளை தன்வசம் வைத்துக் கொண்டு - வெப்பமான - இடுகாடுகள் நிறைந்த - துஷ்டமிருகங்கள் வாழும் காண்டவ வணம் என்ற பகுதிகளை (குறிப்பாக தற்போதைய டெல்லி பகுதியை) பாண்டவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறான்.
(நினைவிருக்கட்டும் இன்றும் கூட டெல்லியில் எந்த இயற்கை வளமும் கிடையாது)
இந்த காண்டவ வனப்பகுதியை அர்ஜூனன் கண்ணன் ஆலோசனைப் பேரில் முழுவதுமாக அக்கினிக்கு இரையாக்கி - நிலத்தை சீர்படுத்தி இந்திரப்ரஸ்தம் எனும் தலைநகரை பாண்டவர்கள் உருவாக்கினார்கள்.
இந்த காண்டவ வனத்திலிருந்து தப்பிப் பிழைத்த கார்கோடகன் எனும் கொடிய சர்ப்பமே - காண்டவ வனத்தை அழித்த அர்ச்சுனனை பழிதீர்க்க நாகாஸ்திரமாகி பின் நாட்களில் கர்ணன் கைகளில் தஞ்சம் புகுந்தது - புராண இதிகாசங்களில் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று எத்தனை அழகாக தொடர்புடையவையாக கோர்க்கப்பட்டுள்ளது என்பது நினைத்து இன்புறத்தக்கது...
காண்டவ வனத்தை அர்ஜூனன் அக்னி தேவனுக்கு உணவாகப் படைத்ததால் - அக்னி தேவன் மனம்மகிழ்ந்து அர்ஜூனனுக்குப் பரிசளித்தது காண்டீபம் (காண்டவவனம் - காண்டீபம்)
காண்டீபம் - பனைமரத்தளவு உயரம் கொண்டது (மஹா. உத். பர்வம் 161)
காண்டீவத்துக்கு தங்கக் கவசம் உண்டு - லட்சம் ஆயுதங்களுக்கு சமமான சக்தி உடையது. (லட்சம் வில்களுக்கு அல்ல - லட்சம் ஆயுதங்கள் என்றால் - வாள், சக்ரம், ஈட்டி, கதாயுதம் என பல வகையை குறிக்கும்)
பல வர்ணம் கொண்டது - மிருதுவானது- தேவர்கள் - கந்தர்வர்கள் பூஜித்தது.
காண்டீவம் - 1000 வருடங்கள் பிரம்மதேவனிடமும் - பிரஜாபதியிடம் 503 வருடங்களும் - இந்திரன் வசம் 85 வருடங்களும், சந்திரன் 500 வருடங்களும் வருணனிடம் 100 வருடங்களும் வைத்து இருந்தனர்.
(ஆண்டுக் கணக்குள் கூட எத்தனை நேர்த்தியாக கோர்க்கப்பட்டு!!!)⁠⁠

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...