மனு ஸ்மிருதி 4
ஒரு விஷயம் - நபர் குறித்து நாம் பேசும் போது, பேசப்படும் விஷயத்துக்கு நிஜமாகவே அங்கு வாய்ப்புகள் உண்டா என நாம் யோசிப்பது கிடையாது.... அது போலத்தான் மனுஸ்மிருதி குறித்தும் நாம் யோசிக்காமல் பேசுகிறோம்.
துளசி தாசர் ஹிந்தியில் ஒரு பாடல் எழுதியதாக ஒரு புரட்டு... அந்தப் பாடலில்
டோல் கம்வார் சூத்திர பஹூநாரி ஏ சப்ஜாடன் தாடன்கே அதிகாரி
மேளம் பண்பில்லாதவர் சூத்திரன் பெண்கள் அடிபடவே இருக்கிறார்கள் ...
துளசிதாசர் போன்ற பரம பாகவதர் இப்படி எழுதியிருக்க வாய்ப்பு உண்டா என நாம் யோசிப்பதில்லை...
இன்று எழுத்துக்களுக்கு காப்பி ரைட் உண்டு.... அந்தக்காலத்தில்? ஓலைச் சுவடிகளை - எளிதில் அழியக் கூடியவை... ஆக விட்டுப் போன பக்கங்களுக்கு இடைச் சொருகள் ஏற்படுத்தப் பட வாய்ப்புகள் அதிகம்....
முதலில் எழுதியவருக்கும் இடைச் செருகள் எழுதியவருக்கும் காலம் சிந்தனை வித்யாசம் இருக்குமா இல்லையா?
காப்புரிமைகள் இல்லாத காலத்தில் இடைச்செருகள் தவிந்க்கப்பட என்ன பாதுகாப்பு இருந்தது
.....
.....
வள்ளலார் சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றில் உள்ள சம்பவம் ஒன்று...
ஒருவர் தானே எழுதிய பாடல் ஒன்றை சித்தர் பாடல் ஓலைச்சுவடி என கொண்டு வந்து இராமலிங்க ஸ்வாமிகளிடம் தருவார்... அதை படித்துவிட்டு வள்ளலார் இது குப்பை - யாரோ இலக்கணம் தெரியாது கத்துக்குட்டியின் பிதற்றல் என்று சொல்லி தூர எறிய .... வந்தவர் தனது கபடத்தை ஒப்புக் கொண்டு மன்னிக்கக் கோருவார்...
கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று எண்ணிரெண்டு பதினாறு வயது என்ற பாடல் ஒன்று...
இதை மேலோட்டமாக பார்த்தால் 8 (எண்) இரண்டு அதாவது 16 வயது பெண் என பொருள்படும்....
ஆனால் அவர் இந்தப் பாடல் எழுதிய காலகட்டத்தில் சாவித்திரி பத்மினி தேவிகா என்ற எல்லா முன்னணி நடிகைகளுக்கும் வயது 30க்கு மேல்... இதை மனதில் கொண்டே அவர் எண் இரண்டு பதினாறு வயது அதாவது 2×16=32 வயது என்று பாடல் எழுதினாராம்...
கட்டுப்பாடில்லாத வாழ்வு/ பல மனைவியர் / குடிப் பழக்கம் உடைய நம் காலத்தில் வாழ்ந்த கண்ணதாசனுக்கே இப்படிப்பட்ட வார்த்தை /அர்த்த ஜாலம் இருந்ததே. பல ஆயிரம் வருடத்துக்கு முன்பு ஆன்மீக அருளாளர்களின் மன நுட்பம் எத்தனை உயர்ந்ததாக இருந்திருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டாமா?
5ல் தொடரும்...
No comments:
Post a Comment