துலா
தராசு... 2
தராசு... 2
நண்பர் ஒருவர் துலா ஸ்நானம் செய்ய வருவதாக சொன்னார்... அப்போது... அம்மா மண்டபத்தில் தான் செய்யனுமா?! எதாவது விதி உள்ளதா என்று கேட்டார்...
துலா ஸ்நானம் என்பது என்ன?!
அதை சொல்லத்தான் ஆரம்பித்தேன்...
பகவத் கீதையின் மைய கருத்துக்குப் போய்விட்டேன்... சரி... இன்னும் கொஞ்ச தூரம் போய்விட்டு... U turn செய்துடலாம்...
ப்ரம்மச்சாரியின் கர்மா... கல்வியை நாடுதல்...
கிருஹஸ்தன் கர்மா... இல்லறம் பேணுதல்...
வானபிரஸ்தி கர்மா ஞானத்தை தேடுதல்...
சன்யாசியின் கர்மா தர்மத்தை ரக்ஷிப்பது...
இதன் படி வர்ணாஸ்ரம தர்மமத்தை பாருங்கள்...
நான்கு வர்ணத்தின் கர்மா... முறையே நாடுவது... பேணுவது... தேடுவது...காப்பது...
தர்ம அர்த்த காம மோக்ஷ...
அறம் பொருள் இன்பம் வீடு...
அறம் பொருள் இன்பம் வீடு...
அற வழியில் பொருள் ஈட்டி இன்பமாக வாழ்ந்து வீடு பேற்றை அடைவது...
கர்மா... கடமை... duty... இதுதான்... duty க்கு reward கிடையாது... misconduct க்கு punishment உண்டு...
ஹிந்து தர்மம் சொல்வது கடமையை செய்... பலனை எதிர் பார்க்காதே...
படிக்கும்போதே மாணவன் part time job தேடுகிறான்...
கிருஹஸ்தன்... பிள்ளையை hostelலிலும் பெற்றோர்களை old age home களிலும் விட்டு விட்டு மனைவியையும் வேலைக்கு அனுப்பி விட்டு சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக அலைகிறான்...
வானபிரஸ்தி.... இப்போ முழுக்க முழுக்க TV serial/ ஊர் வம்பு... இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!
சன்யாசி... politics/ பணம்/ பெண்கள்... கேட்டால்.... corporate சன்யாசி...
யாருமே அவரவர் தர்மத்தை அனுஷ்டிப்பது இல்லை...
கோவில் பூஜை / வைதீகம்/ வாத்யார்/ அன்னதாதா என்று இருந்த பிராமணன் நிலை இன்று?!
தர்மத்தின் படி அவரவர் வாழ வேண்டியதை கண்காணிக்க, அதற்க்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய governance க்ஷத்ரியர் / வைசியம் செய்பவர்/ சமூக நல் இயக்கத்துக்கு அடிப்படை சூத்திரமாக இருக்க வேண்டிய அனைவரும் இன்று quota/ reservation/ political / human rights என்றெல்லாம் அறிவு/ வலிமை க்கு ஒவ்வாத வேலைகளில்...
தர்மம் எங்கே இருக்கிறது இன்று...
Quota/ reservation/rights ... இதெல்லாம் இங்கே மறுக்கப் படுவது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே...
எனவே துலா/ தராசு க்கு / நல்/தீ வினை எனப்படும் இருவினை ஒப்புக்கு இங்கே இனி வழியுமில்லை/ வகையுமில்லை...
ஐப்பசி மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் சங்கல்பித்துக் கொண்டு நீராடி ஆண்டவன் வழிபாடுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது துலா ஸ்நானம் என்று பெயர்...
சங்கல்பம் ... இது பற்றி தனி topic ...பின்னர்...
கடந்த ஆண்டு 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மஹா புஷ்கரம் மாயூரம்/ மயிலாடுதுறை யில் நடந்ததே...
ஐப்பசி மாதம்... துலா கட்டம் எனப்படும் காவிரி நதியில்...
அங்கே, மாதம் 30 நாட்களும் தீர்த்தவாரி... ஐப்பசி எனப்படும் துலா மாதத்தின் கடைசி 10 நாட்களும் பஞ்ச மூர்த்தி சகிதம் தீர்த்தவாரி...
ஐப்பசி அமாவாசை தினத்தில்... கங்கையே தன் பாவங்களை போக்கிக் கொள்ள முதலை வாகனத்தில் எழுந்தருளி காவிரியில் புண்ணிய ஸ்நானம்...
துலா ஸ்நானம் என்பது...
துலா மாதத்தில்...
துலா கட்டத்தில்...
துலா கட்டத்தில்...
இதன் பலன் என்ன?! 3இல்...
No comments:
Post a Comment