Wednesday, October 30, 2019

தீபாவளி -4

தீபாவளி - 4

கங்கா ஸ்நானம் எப்படி எதற்காக...???

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று கிழக்கு அடிவானத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக தேய் பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும் என்பது ஐதீகம். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதனால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறார்கள்.

அத்துடன் அன்று நீராடும் போது அணியும், எண்ணெயில்-லட்சுமியும், அரப்பில்-சரஸ்வதியும், குங்குமத்தில்-கௌரியும், சந்தனத்தில்-பூமாதேவியும், புத்தாடைகளில்-மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

இப் பண்டிகை அடிப்படையில் இந்துப் பண்டிகையாக இருந்த போதிலும்; சாதி, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் ஒரு பண்டிகையாக விளங்குகின்றது. இப் பண்டிகையை இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தீபாவளியன்று நீராடுவதை "புனித நீராடல்" என்று அழைப்பார்கள். அதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் “சந்திர தரிசனம்” காலத்தில் எல்லா இடங்களிலும், கிடைக்கும் தண்ணீரில் (நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், நீர்நிலைகள்) "கங்கா தேவி" (கங்கை நீர்) வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 5மணிவரை உள்ள காலம் (இலங்கை, இந்தியாவில்) எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காலம் என கணிக்கப் பெற்றுள்ளது.

தீப ஒளி யில் மகாலட்சுமி !
திருமகள் திருநாள் இது !! எப்படி...

நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி! தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம்.

தீபாவளி ஐந்தில் தொடரும்...⁠⁠⁠⁠

#எவர்கிங்_ஏகாம்பரம்

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...