Wednesday, October 30, 2019

தீபாவளி -5

தீபாவளி - 5

தீயன அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து, பரவி பிரகாசித்து, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும். தீபாவளி ஒரு சம்ஸ்கிருத பதம். இதைப் பிரித்துப் பார்த்தால் (தீப + ஆவளி-வரிசை) விளக்குகளின் வரிசை எனப் பொருள்பெறும். தீபாவளி தினம் நாம் வீட்டில் தீபங்கள் ஏற்றி வீட்டிற்கு வெளிச்சம் கொண்டு வருவது போல் அகத்து இருள் நீங்க அகத்திலும் ஒளி விளக்கு ஏற்றி உள் ஒளி பெருக்கிடல் வேண்டும்.

கிருஷ்ண அவதாரத்துக்கு முன்பு உள்ள ராமாவதாரத்தில் தீபாவளி உண்டா?

வாமன அவதார காலத்தில் கூட தீப ஆவளி கொண்டாடப்பட்டது... அதாவது திராவிட தேசமான கேரளாவில் கூட...(திராவிட கபோதிகள் கவனத்துக்கு)

ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள் தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் “எம தீபம்” எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உளர்.

மஹாராஷ்ட்ராவில் இதை "பலிபாத்யாமா" என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. (பலி பாட்டிமை - என்று இப்போது மருவிவிட்டது....)

தீபாவளி - 6 தொடரும்....

#எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...