துலா 3
தராசு...
தராசு...
துலா மாதத்தில் துலா கட்டத்தில் புண்ணிய தீர்த்தமாடுவது பலன் தருமா?!
நெல்லை புஷ்கரம்... 14ஸ்நான கட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்ததே...
12ஆண்டுக்கு ஒரு முறை மகா மகம்... கும்பகோணத்தில்... அந்த குறிப்பிட்ட குளத்தில் நீராடினால் தான் புண்ணியமா?!
வீட்டு பாத்ரூமில் கூட அதே முகூர்த்தத்தில் குளிக்கலாமே!!
இடம் பொருள் ஏவல்...
சினிமாவில் முதல்வர் வேஷம் போட்டவன் எல்லாம்... நாட்டின் முதல்வருக்கு உள்ள அதிகாரத்தை பெற்று விட முடியுமா?!
மெர்சல் டாக்டர்... piles ஆபரேஷன் செஞ்சா உபாதை தீருமா?!
மாசி மாதம் பௌர்ணமி திதியில் சூரியன் சந்திரன் கும்ப ராசியில் குரு பார்வையில் ப்ரவேசிக்கும் அந்த குறிப்பிட்ட புள்ளி...
மகா மக தீர்த்த குளம் தான்...
சூரிய கண்ணாடியில் (லென்ஸ்) சூரிய ஒளி கற்றையை செலுத்தி அது குவியும் இடத்தில் காகிதம் பஞ்சு வைத்தால் பற்றி எரியும் same logic...
கண் கண்ணாடி short/long... +/- sight... logic...
துலா மாசத்தில் துலா கட்டத்தில் அமாவாசை அன்று கங்கா தேவியே முதலை வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தமாடும் போது... நமக்கு மட்டும் விதி விலக்கா?!
துலா கட்டத்தில்... அநேக தீர்த்த கிணறுகளும் உண்டு... அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கங்கை முதலாம் புண்ணிய நதியின் அம்சங்கள். கடந்த ஆண்டு புஷ்கரணி நடக்க... தூர் வாரிய போதும் சில புதிய கிணற்று ஆதாரம் கண்டு பிடிக்கப்பட்டது...
ஐப்பசிக்கு அடுத்த விருச்சிக மாதத்தில் (கார்த்திகை) அமாவாசை அன்று திருவிசை நல்லூர் ஸ்ரீதர வெங்கடேஸ்வர ஐய்யாவாள் வீட்டு கிணற்றில் கங்கை உத்பவம் கொள்வது போலவே ...
ஸ்ரீதர வெங்கடேச ஐய்யாவாள்...கோவிந்த புரம் போதேந்திர ஸ்வமிகளின் சம காலம்... இருவரும் சேர்ந்து பக்தி/ ஆராதனம் செய்து... மழை (அமிர்த வர்ஷிணி) பெற்றுவித்த உண்மைகளும் உண்டு...
ஐப்பசி அமாவாசை யன்று மயிலாடுதுறையில் சென்று தீர்த்தவாரி முகூர்த்தத்தில் துலா கட்டத்தில் ஸ்நானம் செய்வதே துலாஸ்நானம்...
மற்ற அனைத்தும் அவரவர் சவுகர்யம் கருதி மட்டும்!
(இன்று அந்த பகுதிக்கு தீராவிடம் (விஷம்) சூட்டிய பெயர் லாகடம்.... ஏதோ... மாட்டுக்கு லாடம் கட்டும் பகுதி போல...)
இப்படி புண்ணிய தீர்த்தமாடினால் பலன் உண்டா / இல்லையா என்பதை ஒரே வரியில் சொல்லி முடித்து விடவே நினைத்தேன்...
ஆனால்... சேனை க்கிழங்கும்... புண்ணிய சேர்க்கை பலச்ருதி கணக்கும்.... ஸ்ரீதர வெங்கடேஸ்வர ஐய்யாவாள் ஸ்ரார்த்த கர்மா தவறியதும் தொடரை நீட்டுவிக்கிறது... மன்னிக்கவும்...
4இல் பேசலாம்..
No comments:
Post a Comment