துலா
தராசு...
தராசு...
சித்திரை துவங்கி பங்குனி வரை 12 மாதங்கள் மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளால் அழைக்கப் படுகிறது...
துலா... ஐப்பசி மாதத்தை (மத்திய) குறிக்கும்...
ஆத்மா வின் நல்/ தீ வினைகள்ஒப்பி...அதாவது....
இருவினை ஒப்பு... மல பரிபாகம் அடைந்து ஜீவ பிரம்ம ஐக்கிய நிலை அடைய வேண்டும்...
இருவினை ஒப்பு... மல பரிபாகம் அடைந்து ஜீவ பிரம்ம ஐக்கிய நிலை அடைய வேண்டும்...
இரு வினைகள் ஒப்பு என்பது... 50% புண்ணியம் 50% பாவம் அல்ல...
அப்படி இருந்தால்... தலா 50% புண்ணிய/பாவ கர்மாக்களுக்கு உரிய சுக அவஸ்தைகளை தனித்தனியே அனுபவித்தே ஆக வேண்டும்...
ஒரு பசுவை கொன்று விட்டு 100 பசுக்கள் வைத்து பராமரிக்கிறேன் என்பது இரு வினை ஒப்பு ஆகாது...
ஒரு பசுவை கொன்ற பாவத்தையும், 100 பசுக்கள் பராமறிப்பு புண்ணியத்தையும் தனித் தனியே அனுபவித்தே ஆக வேண்டும்...
புண்ணிய / பாவங்களுக்கு உரிய தண்டனையை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும்... பாவமன்னிப்பு பரிகாரம் என்பதெல்லாம் பித்தலாட்டம்!
நம்முடைய நோய்க்கு நாம்தான் மருந்து சாப்பிட வேண்டும். அதை வேறு யாரும் தன் ரத்தம் கொண்டு கழுவவோ, சுமக்கவோ முடியாது...
சரி... துலா...
துலாக் கோலில் இரண்டு தட்டுக்களுமே காலியாக இருக்கும் போதே சமன் பார்க்கப்படும்...
அது எப்படி முடியும்?! கர்மா என்று ஒன்று இருந்தால் அதன் பலனாக புண்ணியம்/பாவம் எதாவது ஒன்று கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டுமே!!
ஆத்மா வை புண்ணியம்/பாவம் பீடிக்காமல் இருக்க முடியுமா?!
அதுதான் ஹிந்து தர்மத்தின் speciality...
கர்மாக்கள்... செய்வதால் புண்ணிய/பாவங்கள் ஆத்மாவோடு ஒட்டாமல் இருப்பது சாத்தியம்... அதற்கான வழி...
அவரவர்க்கு விதிக்கப்பட்ட கர்மங்களை மட்டுமே நாம் செய்ய வேண்டும்...
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்வது என்ன?!
க்ஷத்ரியன் தொழில் போர் புரிவது... அங்கே அவன் செய்யும் கொலைக்கான பாவங்கள் அவனை /ஆத்மாவை சேராது...
இதை இன்னும் கொஞ்சம் புரியும் படியாக... ராணுவ வீரன் எதிரிகளை சுடுவது அவனுக்கு விதிக்கப்பட்ட கர்மா... அதற்காக நாம் எல்லோரும் ஆயுதங்களை கொண்டு அவரவர் எதிரிகளை கொல்ல முடியுமா?!
நகருக்குள் புகுந்து மக்களுக்கு கேடு விளைவிக்கும் துஷ்ட மிருகங்களை வேட்டையாடி கொல்வது அரசன் கடமை...
duty யை செய்ய reward கிடையாது... அது புண்ணிய கணக்கில் சேராது... அதே ராஜா... ஜீவகாருண்யம்....human rights என்றெல்லாம் பேசிக்கொண்டு... ஜன சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் மிருகங்களை/ பிரிவினை பேசித் திரியும் ஓநாய் மனிதர்களை தண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பானேயானால்... கடமை தவறினால் அது மகா பாவம்...
புரிதல் என்ன.... பாவம் செய்யாதே.... விதிக்கப்பட்ட கடமையை செய்...
துலா 2இல் தொடரும்...
No comments:
Post a Comment