துலா... தராசு... -4
ஸ்ரார்த்த திதி யன்று... ஸ்ரீதர வெங்கடேஸ்வர ஐய்யாவாள்... பசியோடு இருந்த பஞ்சமன் குடும்பத்துக்கு உணவு கொடுத்தார்...
புரிதலுக்காக... காலை சுமார் 9 மணி இருக்கும்...
பவுர்ணமி திதி இரவிலும்... அம்மாவாசை, ஸ்ரார்த்த திதி உச்சி பகலிலும் அதிகமாக இருக்க வேண்டும்... உச்சி வேளை... ஆச்சார்ய புரோகிதர் வந்தார்... முன்னமேயே வந்து தைல ஸ்நானம் செய்து பிராமண போஜனத்துக்கு வந்த பிராமணர்கள்.... தலைமை புரோகிதரிடம்... ஸ்ரீதர ஐய்யாவாள்.... பஞ்சமர் க்கு உணவு தந்ததை போட்டு உடைக்க...
ஸ்ரீதர் ஐய்யாவாள்... புரோகிதரிடம்... மீண்டும் புதிய மளிகை வாங்கி... மறு குளியல் முடித்த பின் புது சமையல் செய்தாகிவிட்டது என்றும்... ஆகார நியமத்திலும் இது வரை பங்கம் இல்லை என்பதையும் பொறுமையோடு எடுத்துச் சொன்னார்...
திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி நித்ய தரிசனம் செய்பவருக்கு தெரியாத ஆச்சாரமா?! அனுஷ்டானமா?! பிரம்மஹத்தியா...
ஆனால்... புரோகிதர்.... பிடிவாதம் அதிகமாகி... கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு வந்தாலே... இனி ஆச்சாரியம் செய்து வைப்பேன் என்று கிளம்பி விட்டார்...
இங்கே... வெங்கடேஸ்வரர் கடமை தவறினாரா?!... புரோகிதர் கடமை தவறினாரா?!...
ஸ்ரார்த்த நியமம் தவறாமல்... அதே நேரம் பசித்தவருக்கு உணவு கொடுத்தது கூடுதல் புண்ணியம் ஆயிற்றே...
மகாலிங்கத்தின் அருளால்... கார்த்திகை அமாவாசை நாளில்... ஐய்யாவாள் வீட்டு கிணற்றில் இருந்து கங்கை உத்பவித்து திருவிசநல்லூர் வீதியெங்கும் பிரவாகித்து ஓட ...
புரோகிதர்... ஐய்யாவாளிடம்... மன்னிப்பு கோர....
கூடுதல் புண்ணியம் செய்த ஐய்யாவாள்... அந்த புண்ணிய பலனை அனுபவித்தாரா?!
கவனிக்க வேண்டியது...
பாவம் செய்யத்தான் கூடாது... புண்ணியம் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்...
இறந்து போன பித்ருக்களுக்கு... உணவு அளிப்பதை விட... பசித்தவர்களுக்கு உணவு தருவது அதை விட உசத்தி...
நாம் கொடுக்கும் பிண்டம் தான் பித்ரு க்களுக்கு மோக்ஷம்/ உணவு தரவில்லை... அது அவரவர் வினை வழி, அவரவர் வந்தனர்... தருமை ஆதீன குரு முதல்வர் ஞானசம்பந்தர் சொன்னது...
ஆனாலும்... நாம் கர்ம அனுஷ்டானங்களை விதிப்படி செய்ய வேண்டும்.... சாஸ்திரம் அப்படித்தான் சொல்லி இருக்கு... காரணம்... வேதியர் சம்ரக்ஷணமாகவும் கூட இருக்கலாம்...
ஐய்யாவாள் உணவு கொடுத்தது... நான்காம் வர்ண பஞ்சமருக்கு... அதுவும் 300/350 ஆண்டுகளுக்கு முன்னால்....
அதாவது... பிராமணர்கள் வர்ண பேதம் அப்போது இப்போது எப்போதும் பார்க்கவில்லை என்பது இங்கே கவனத்துக்கு உரியது...
புண்ணிய கர்மாக்கள் பலன் உயிரின் மீது ஒட்டிக் கொள்ளக் கூடாது... புண்ணிய கர்மாக்கள் கடமையாக செய்யப்பட வேண்டும்... அவ்வளவுதான்... அதற்க்கு என்ன வழி?!
பார்ப்போம்...
No comments:
Post a Comment