Monday, January 27, 2020

முதலாழ்வார்கள்...

முதலாழ்வார்கள் மூவருமே கிறிஸ்து பிறப்புக்கு முன் அதாவது 4302 கிமு வுக்கு முன் அவதரித்தவர்கள்.
பொய்கையாழ்வார் விஷ்ணு வின் பாஞ்சஜன்யம் என்ற சங்கின் அம்ஸமாக கருதப்படுபவர்.
பாஞ்சஜன்யம் என்ற சங்கு ஸ்ரீ விஷ்ணுவால் சம்ஹரிக்கப்பட்ட பஞ்சஜனன் என்ற அசுரனின் எலும்புகளை கொண்டு உருவாக்கப்பட்டது.
இதில் பஞ்சஜனன் - அசுரன் - ஐந்து பிறப்பு - என்பதில் ஏதோ ஆராய்ச்சி குறிப்பு இருக்கிறது -
முட்டையாக - முட்டையிலிருந்து உயிராக வெளி வருவது இரு பிறப்பு....
குழந்தையாக - உபநயனத்தின் போது - சந்யாசத்தை மேற்கொள்ளும் மனிதன் 3 பிறப்புக்களுடையவன்.
பஞ்ச ஜனன்?! ஆராய்வோம்...
பெரியாழ்வார் திருமாலின் ரதத்தின் அம்சமாக தோன்றியவர். ஆனி சுவாதி - கிமு 3056.
ஆண்டாள் எனும் கோதை ஆடிப் பூரம் கிமு 3005.
ஆக. விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின் 51 வது வயதில் கோதை நாச்சியார் குழந்தையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நந்தவனத்தில் கிடைக்கப் பெற்றுள்ளார்.
விஷ்ணு சித்தர் முன்குடுமியணிந்த அந்தணர் - இதே போல - கேரள நம்பூதிரிகள் / தில்லைவாழ் அந்தணர்களும் முன் குடுமி அந்தணர்களே என்பது நினைத்து இன்புற்று ஆராய வேண்டிய குறிப்பு.
அரங்கனுக்கே பெண் கொடுத்து திருமாலின் திருவாயால் மாமனாரே என அழைக்கப்பட்டவர் விஷ்ணு சித்தர்.
வைணவத்தில் மிகவும் விசேஷமான மூவர் முதலாழ்வார்கள் எனப்படும் - பொய்கையாழ்வார் - பூதத்தாழ்வார் - பேயாழ்வார்.
இவர்கள் மூவருமே கிமு 4302 க்கு முன்பாக (முன்பு) அதாவது இன்றைக்கு 6318 ஆண்டுகள் முன்பு அவதரித்தவர்கள்...
கலியுகம் துவங்கி தற்ப்போது 5116 வருடங்கள் ஆகிறது - ஆக முதலாழ்வார்கள் மூவரும் கிருஷ்ணன் வாழ்ந்த த்வாபரயுகத்தில் வாழ்ந்தவர்கள்.
த்வாபரயுகம் முடியும் முன் 1200 ஆண்டுகள் முன்பாகவே பிறந்து வாழ்ந்து ஓய்ந்தவர்கள்.
சரி...
இந்த மூன்று முதலாழ்வார்களின் பெயரிலேயே ஒரு வைணவ வாழ்வியல் குறிப்பு...
பொய் - பூதம் - பேய்...
பூதங்களால் ஆன இந்த சவம் அதை உள்ளிருந்து இயக்கும் உயிரெனும் பேய் ஆகிய இவை எல்லாம் பொய்...
மெய் ஒன்றே - ஸ்ரீ ஹரியின் திருப்பாதமே. 

Tuesday, January 14, 2020

தெய்வ திருமணங்கள்

தெய்வ திருமணங்கள்...
கோவில் களில் ப்ரம்மஉற்சவம்... கடவுள் இதை கொன்டாடச் சொல்லி உங்களை கேட்டானா?!
மார்கழி கடவுளுளுக்கான விரத/வழிபாடு நாட்கள்... அப்போது, ராதா /ஆண்டாள் திருமண விழாக்கள் நாள் குறிக்கச் சொல்லி ராதை அல்லது கிருஷ்ணர் உங்களிடம் கேட்டனாரா?!
திருப்பதியில் ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் நித்ய கல்யாண உத்ஸ்வ பெருமாள் என்று ஒருவர்.... தினம்தோறும் திருக்கல்யாணம் அங்கே நடக்கும்!
இந்த ஸ்ரீனிவாசமங்காபுர திருமண உபயத்தை கூட புத்திசாலிகள் அசுப நாட்களில் தவிர்த்து விடுவதால் கோவில் கட்டளை ஏற்பாடு!!!
கட்டளை முறை இல்லை என்றால் கோவிலில் / அவர்கள் செலவில்...
நம் வீட்டு குழந்தைகளுக்கு செவ்வாய்/சனி/அஷ்டமி/அமாவாசை/ நவமி/ தேய்பிறை நாட்கள்/ கரிநாள்/ஒவ்வாத நக்ஷத்திர தினங்களில் திருமணம் செய்து கொடுப்போமா?!
சைவத்தில்....
சம்பந்தர் பெருமாள் சீர்காழியில் இருந்து புறப்பட்டு மதுரை செல்கிறார்... சைவம் தழைக்க...
உடன் இருந்த அப்பர் ஸ்வாமி அவரை இன்று நாளும்/கோளும் நலமில்லை என்று தடுக்க...
வேயுறு தோளி பங்கன், என்ற பதிகம் உருவானது...
அதில்...
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
பாம்பிரண்டு உடனே ... என்ற வரி வரும்...
திருமணம் செய்ய நாம் தவிர்க்கும் வார நாட்கள் செவ்வாய் சனி...
காரணம்... உப கிரகங்கள்.... (அமுதை உண்ட) ராகு/கேது ... இதில் ராகு சனி யோடும் கேது செவ்வாயோடும் இனைந்து உள்ளதாக சாஸ்திரம் /வரலாறு விஞ்ஞானம் சொல்கிறது!!!
பக்தி இல்லாமல்... தங்கள் வருமானத்துக்காக, புரோகிதர்கள், குருக்கள், பட்டர் உருவாக்கிய சம்ப்ரதாயங்களை தூக்கி எரியுங்கள்...
பௌர்ணமி குறிப்பிட்ட நக்ஷத்திரதில் வருவதை என்றாவது மாற்றி கண்டோமா ?!
திருக்கல்யாண/ வைபவம்/உற்சவம் போன்றவை... அந்நியர் தாக்கம்/ ஆட்சியில் தக்க வைத்துக் கொள்ள செய்யப்பட்டு இன்று தொடர்கிறது...
முறை தவறிய நாள்/ கோள்/ நக்ஷத்திர நாட்களில் செய்யப்படும் இது போன்ற வைபவங்களுக்கு உதவியோ/ ஆதரவோ தராதீர்கள்...
எண்ணிக்கை குறையலாம் ஆனால் உங்கள் புறக்கணிப்பால் வீரியம்/ சாநித்தியம் நிச்சயம் அதிகமாகும்...
கடவுள் யாரோ அல்ல... நம்மில் உங்களில் ஒருவரான உங்கள் வீட்டுப்பிள்ளை...
அவரை எதுவும் கட்டுப்படுத்தாது... ஆனால் அவருக்கான வைபவம் நடத்தும் நாம் மனிதர்களே...
சனி ஆதிக்கத்துக்கு பயந்து சிவனே கோமுகில்யில் பதுங்கி இருந்த வரலாறு,
ஜென்ம குரு எட்டிலே சீதையை வனத்திலே ராமர் தொலைத்ததும்
தீதிலா ஒரு பத்திலே ஈசனே தலை ஓட்டிலே இரந்து உண்டது...
என்று சொல்வது நம் ஜோதிடம்...
இன்று நாட்டில் மழை குறைவு பஞ்சம் பட்டினி அமைதி குறைவுக்கு, இது போல முரண்கள் தான் காரணம்.
இனி, இதுபோல வெளிப்படையாக யாரும் உங்களுக்கு கருத்துக்களை செல்ல வரமாட்டார்கள்

பூர்வ ஜென்ம வாசனை

பூர்வ ஜென்ம வாசனை
காங்கேயத்தில் பிறக்கும் ஒரு குழந்தை எங்கோ இருக்கும் கெய்ரோ வில் நடந்த/ இருப்பு களை சரியாக சொல்கிறது...
காரணம் பூர்வ ஜென்ம வாசனை...
இது மகாபாரதத்திலும் உண்டு...
பீஷ்மர் சாவுக்கு காரணம் ஆனவள்/ர் அம்பா/சிகண்டி... (மூன்றாம் பாலினம்).
ஆனால், இன்று நாம் பேசப்போவது பீஷ்மர் பற்றி.
நண்பர்கள் குடும்பத்துடன் picnic செல்வோம்... அதுபோல அஷ்டவசுக்கள் எனும் தேவர்கள் பூலோகம் வந்தார்கள்...
அதில் ஒருவர் பிரபாஸன் மற்றும் அவன் மனைவி.
பிரபாஸன் மனைவி அங்கே வசிஷ்டர் ஆசிரமத்தில் இருந்த பசு ஒன்றை பார்த்து ஆசைப் பட்டு அது தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்தாள்.
எல்லோரும் பிரபாஸன் மனைவிக்கு அறிவுரை சொன்னார்கள்....
நாம் தேவலோக வாசிகள்... அது பூலோக பசு... அதுவும் வஷிஷ்ட்ர் ஆசிரமத்தில்... அதை நாம் எடுத்துச் செல்லவும் முடியாது...
பிரபாசன் மனைவி சொன்னாள்... இல்லை... இங்கே பூலோகத்தில் வந்த இடத்தில் எனக்கு ஒரு தோழி கிடைத்தாள்... அவளுக்கு நான் இந்த பசுவை பரிசு தரவேண்டும் என்றாள்
பிடிவாதம் ஜெயித்தது... பசு அபகரிக்கப்பட்டது... (மனைவியே மனிதனுக்கு மரணம்)
வஷிஷ்டர் நடந்ததை அறிந்தார்... அஷ்டவசுக்களுக்கும் சாபம் கொடுத்தார்...
பூமியில் இருந்த பசுவை அபகரித்ததால், பூமியில் மனிதர்களாக பிறந்து பல ஆண்டுகள் வாழ்ந்து வேதனை பட்டு மாண்டு போவீர்கள்...
வஷிஷ்டர் சாபம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஷ்டவசுக்கள்... வஷிஷ்டரை அணுகி, வணங்கி, குற்றம் எங்கள் அனைவருடைய பொது அல்ல...
குற்றவாளிகள் பிரபாஸன் மற்றும் அவன் மனைவி என்றனர்...
வஷிஷ்டர் சாபம் பலித்தே தீரும்... நீங்கள் அனைவரும் அனுபவிக்கவே வேண்டும்...
ஆனால் பிரபாஸன் தவிர மற்ற 7 பேரும் பிறந்த உடனேயே மரணம் சம்பவித்து தேவலோகம் வந்து விடலாம்... ஆனால் பிரபாஸன் மட்டும் சாபத்தை அனுபவித்தே ஆக வேண்டும்... என்று சொல்லி விட...
சந்தனு/ கங்கா வுக்கு பிறந்த முதல் 7 குழந்தைகளும் பிறந்த உடனேயே கங்கா தேவியால் நதியில் மூழ்க அடித்து கொல்லப்பட்டன...
பிரபாஸன் மரணம் மட்டும் சந்தனு வால் தடுக்கப்பட்டு தவிர்க்கப்பட்டது.... தேவவிரதன்/கங்கேயன் என்றும் பின்னால், சந்தனு / மச்ச கந்தி என்ற சத்யவதி திருமணத்துக்காக, வாழ்வில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்ற சபதம் செய்து பீஷ்மர் ஆனார்...
இதில் பூர்வ ஜென்ம வாசனை எங்கே வந்தது?!
அஷ்டவசுக்களில் ஒருவராக இருந்த போது, தன் மனைவியின் பிடிவாதம்/ஆசையால் தன் பதவி இழந்து பூலோகம் வந்து துயரமே உருவாக வாழ்ந்து/ அதர்மத்தின் பக்கமே நின்று...
எனவேதான் இனி மனைவி /திருமணம் வேண்டாம் என்ற முடிவு எடுத்தார் பீஷ்மர்...
வரவு எட்டணா செலவு பத்தணா... என்ற பாமாவிஜயம் திரைப்படப் பாடலில்...
அடங்காமனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது என்றதும் இதுவே...
ஒவ்வொரு மனைவியும் படிக்க/உணர வேண்டிய பதிவு இது... 

போகி பண்டிகை

போகி
போகி என்பது இந்திரனை குறிக்கும் சொல். வருணன் வாயு நிருதி குபேரன் எமன் அக்னி முதலான அஷ்டவஸூ தேவர்களை தனது கட்டுட்பாட்டில் வைத்து உலக தேவைக்கு தகுந்தாற் போல இந்த தேவர்களுக்கான இந்திரன் பிரபஞ்சத்துக்கு அருள்கிறார்.
இந்திரனை தொடர்ந்து தேவர்களில் மூத்தவரான சூரிய வழிபாடு - அதைத் தொடந்ந்து உழவுக்கும் தொழிலுக்கும் உதவும் மாடுகள் உபகரணங்களுக்கான பண்டிகை.
மஞ்சு விரட்டு என்பது கூட உழவுத் தொழிலுக்கு ஆதாரமாக இருந்த மாடுகளுக்கு விருந்துக்குப் பிறகான கேளிக்கையாக.
பொங்கலின் போது சம்பா பயிர்கள் அறுவடை செய்து போதிய பொருளாதாரமிருப்பதால் திருமணத்துக்கு தயாராக இருக்கும் கன்னி / சிறு பெண்கள் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டு கும்மி விளையாடி... (நினைவிருக்கட்டும் - திருமணம் என்பது பருவமடையும் முன்பே - பின் ருது ஜாதகப்படியே குடும்ப பந்த உறவுகள்)
சம்பாவுக்குப் பிறகு உளுந்து பயறு எள் என அதிக நீர் / பிரயத்தனம் தேவைப்படாத வெய்யில் தாங்கும் பயிர்களே.
இந்த நேரத்தில் மாடுகளுக்கும் ஓய்வு - உபகரணங்களை சீர் படுத்துதல் என. மீண்டும் ஆடிப்பட்டம் வரும் வரை உத்தராயண புண்யகாலம் முழுவதும் நம்மை தயார் படுத்திக் கொள்ள வெப்பம் அதிகமான காலங்களில் நாம் ஓய்வெடுக்க.
மீண்டும் ஆடி துவங்கி உழைப்பு இடையிடையே பணியிடை கேளிக்கையாக தெய்வப் பண்டிகைகள்.
ஹிந்து தர்மம் என்பது இயற்கையோடு கூடி வாழும் நெறி. 

Sunday, January 12, 2020

போகி பண்டிகை...

போகி...
நண்பர்கள் அனைவருக்கும் இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
போகி என்றால் இந்திரன்
இந்த போகி அன்று நாம் விவசாய காரியங்களுக்கும் பசுக்களுக்கும் போதிய மழை வெயில் இயற்கைச் சூழல் ஆகியவற்றை பெற்றதால், அவற்றை அருளிய இந்திரனை கொண்டாடுவதற்காக, தேவேந்திரனை வண்ங்கக் கூடிய ஒரு திருநாள்
எனவேதான் இந்த பண்டிகைக்கு போகிப் பண்டிகை என்று பெயர்
ஆதியில் ஸ்ரீ கிருஷ்ணரும் ஆயர்பாடியில் இருக்கக்கூடிய இடை கூட்டமும் இந்த போகிப் பண்டிகை கொண்டாட சென்றுகொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எதற்காக நாம் இந்த விழாவை இந்திரனுக்கு கொண்டாட வேண்டும்? இதோ இருக்கிறதே இந்த கோவர்த்தனகிரிதான் வழி செல்லக் கூடிய மேகங்களையும் காற்றை தடுத்து நமக்கு ஜீவிதங்களை குறைவின்றி தருகிறது.
எனவே நாம் அனைவரும் இந்த கோவர்த்தன மலைக்கு நம்முடைய மரியாதைகளை தெரிவிப்போம் என்று சொல்லுகிறார்
கிருஷ்ணனுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை
ஆயர்பாடி கூட்டம் கோவர்த்தனகிரி தன்னுடைய மரியாதைகளை செய்யத் துவங்குகிறது
இதனால் கோபம் கொண்ட இந்திரன் இந்த ஆயர்பாடி கூட்டத்தை அழித்து விட வேண்டும் என்று சொல்லி மழை மற்றும் பலத்த காற்று வருணன் வாயு ஆகியோரை ஏவி விட, ஆயர் கூட்டமெல்லாம் பயந்து நடுங்கி கொண்டிருக்க, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, சிறு குழந்தை எப்படி ஒரு நாய் குடையை பிடுங்கி எடுக்குமோ அதுபோல கோவர்த்தனகிரியை தன்னுடைய கை விரல்களால் தூக்கி தலைக்கு மேலே உயர்த்தி நிற்கிறான்
அவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணன் கோவர்த்தனகிரியை தலைக்குமேல் உயர்த்தி பிடித்து நிற்கும் போது அந்த ஆயர்பாடி கூட்டம் எல்லாம் அந்த கோவர்த்தனகிரி க்கு கீழ் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கிறார்கள்
ஒருவாரம் புயலும் மழையும் கொட்டித்தீர்க்கிறது
இந்திரனுக்கு புரிகிறது ஆயர்குடி காத்துக்கொண்டிருப்பது சாட்சாத் ஸ்ரீ மகாவிஷ்ணு என்று!!
ஏழு நாட்கள் கழித்து இந்திரன் காற்றையும் மழையையும் விலக்கி கிருஷ்ண பரமாத்மா விழுந்து வணங்கி துதித்து செல்கிறான்
ஆக இன்றிலிருந்து ஏழாம் நாள் கோவிந்த பட்டாபிஷேகம்
ஆனால் ஆண்டாள் பாடிய இன்றைய திருப்பாவை பாடலில் குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வரி ஒலிப்பதால் எல்லோருமே இன்றைக்குத்தான் கோவிந்த பட்டாபிஷேகம் என்று கொண்டாடி வருகிறார்கள்
ஆனால் போகிப் பண்டிகைக்கு பிறகு ஏழு நாட்கள் கோபமாக இருந்த இந்திரன் வந்துதித்த அந்த ஏழாம் நாளே கோவிந்த பட்டாபிஷேகம்!

காவேரி பிரச்சனை...

காவேரி பிரச்சனை!
இப்பொழுது மாகாணங்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சனை நதிநீர் பங்கீடு
குறிப்பாக தேசங்களுக்கு இடையே கூட இந்தப் பிரச்சனை இருக்கிறது
சீன அரசு பிரம்மபுத்திராவின் மீது அணை கட்டுகிறது
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலே சிந்து நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினை இன்னும் சூடு பிடிக்கிறது
இந்த நிலையில் ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூற ஆசைப்படுகிறேன்
கங்காதேவி தேவலோகத்து பெண்மணி இந்திர/ பிரம்ம சபையிலும் இருந்தவள்
இந்த கங்காதேவி ஒருமுறை சபையிலே இருக்கும் போது அவளுடைய ஆடை நழுவுகிறது
அப்போது மகாபிஷக் என்ற மன்னன் (சந்தனு மகாராஜாவின் பூர்வ ஜென்மம்) கங்காதேவியின் மேலாடை சரிந்ததை பார்த்து காமம் கொள்ள, மற்றவர்கள் தலையை குனிந்துகொள்ள, மகாபிஷக் மட்டும் அவளை காமத்தோடு பார்க்கிறான் இதனால் மகாபிஷக் மற்றும் கங்கா தேவிக்கு கொடுக்கப்படுகிற சாபம்,
பூலோகத்தில் பிறந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது
எனவே கங்காதேவி மகாபிஷக் என்ற பூர்வ ஜென்மத்தில் பிரம்ம சபையிலிருந்த அவனுடைய, மறுபிறப்பாக பிறந்த சந்தனுவுக்கு வாழ்க்கைப்பட்டு 8 குழந்தைகளை பெறுகிறாள்
அவற்றில் ஒருவர் தான் பீஷ்மர்
ஆனால் இதே கங்காதேவியை, கங்கா கௌரி என்று சிவனுடைய மனைவியாகவும் நாம் பார்க்கிறோம்
ஆனால் கங்கை ஒரு தேவலோக நதி
தேவசபையிலும் இருக்கிறாள்
மகாபிஷக் ஆசைப்படுகிறான்
சந்தனுவின் மனைவி யாக இருக்கிறாள்
சிவனுடைய தலையிலும் இருக்கிறார்
எனவேதான் நதிநீரை யாரும் தனக்கென்று சொந்தம் கொண்டாட கூடாது என்ற விதி இருக்கிறது!

நதி மூலம்... ரிஷி மூலம் பார்க்ககூடாது...

நதி மூலம்
ரிஷி மூலம் பார்க்கக் கூடாது!
நண்பர்களுக்கு வணக்கம்
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது
இதற்கு ஒரு காரணம் இருக்கு அப்படின்னு எனக்கு தோன்றியது
சந்தனு மகாராஜா கங்கைக் கரையோரமாக நடந்து செல்லும்போது அழகான ஒரு பெண்ணை சந்திக்கிறான்
அந்தப் பெண்ணின் மீது அவளுக்கு காதல் வருகிறது
அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்
தன்னுடைய விருப்பத்தையும் சந்தனு கங்கையின் இடத்திலே சொல்லுகிறான்
கங்காதேவியும் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மறுநாள் வந்து தனது முடிவை அறிவிப்பதாக சொல்கிறாள்
மறுநாள் சந்தனு ஆவலோடு கங்கா நதி தீரத்திலே காத்திருக்கும் போது, கங்காதேவி அதே நேரத்தில் அங்கே வருகிறார். வந்தபோது கங்காதேவி சந்தனுவை திருமணம் செய்துகொள்ள தனது சம்மதத்தை தெரிவித்து கூடவே இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறார்
கங்காதேவியின் நிபந்தனை 1, நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள ஆசைப் படக்கூடாது
நிபந்தனை 2 என்னுடைய செயல் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏன் எதற்கு என்ற விளக்கத்தை என்னிடம் கேட்கக் கூடாது
இந்த இரு நிபந்தனைகளுக்கு நீ கட்டுப்பட்டால் உன்னை நான் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று சொல்ல சந்தனுவும் சம்மதித்து அந்தப் பெண் கங்கை என்று அறியாமலேயே திருமணம் செய்துகொண்டு ஆட்சி நடத்துகிறார்
இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது கங்காதேவி விதித்த முதல் நிபந்தனை தன்னை யாரென்று சந்தனு தெரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது என்பதே!
அதனால்தான் என்னவோ நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்ற ஒரு வழக்கு தோன்றியது என்று என்னுடைய அபிப்பிராயம்!!

Saturday, January 4, 2020

சிவ பக்தி

சிவ பக்தி.
அர்ஜூனன் தன்னையே உலகில் சிறந்த சிவ பக்தனாக எண்ணி கர்வம் கொண்டு இருந்தான். காரணம் சிவன் தனக்கே பாசுபதாஸ்திரம் வழங்கி இருக்கிறார் என்பதே - இதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு பாடம் புகட்ட - அவனை சற்று உலாவிவிட்டு வருவோம் எனச் சொல்லி அங்கே நகரில் இருந்த சிவாலயம் பக்கம் அழைத்து சென்றார். அப்போது ஆலயத்துக்குள்ளே இருந்து ஊழியர்கள் கூடை கூடையாக நிர்மால்ய புஷ்பங்களை சுமந்து வந்து வெளியே இருந்த புஷ்ப கிணற்றில் கொட்டிக் கொண்டு இருந்தார்கள்.
ஸ்ரீ கினுஷ்ணன் அவர்களை நோக்கி ஆலயத்தில் விசேஷ புஷ்பாஞ்சலி நடக்கிறதா எனக் கேட்டார். அதற்கு ஊழியர், இல்லை தினசரி இப்படித்தான் என்று சொல்லிக் கொண்டே நின்று நிதானமாக சொல்லி முடிக்கக் கூட நேரமில்லாது ஓடினார்கள்.
இப்போது அர்ஜூனன் ஆர்வம் அதிகரிக்க கோவில் உள்ளே சென்று இப்படி புஷ்பாஞ்சலி செய்யும் உபயதாரர் யார் என்று விசாரித்தான். அதற்கு அர்ச்சகர் சொன்னார்...
அர்ஜூனரே உங்கள் பீம சேன மஹாராஜாதான் இத்தனை புஷ்பத்தை அனுப்புகிறார் என்று சொல்ல - அர்ஜூனன் கண்ணனை நோக்கி, பரந்தாமா பீமண்ணா ஒரு முறை கூட சிவபூஜை செய்து நான் பார்த்ததே இல்லையே - இது என்ன விந்தை என்று குழம்பினான்.
உடனே கண்ணனும் காண்டீபனும் பீமசேனன் மாளிகைக்கு சென்று அவனுடைய சிவபூஜை பற்றி கேட்டனர்.
அதற்கு பீமன் சொன்னான் - கிருஷ்ணா, நான் எங்கெல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்களை கடந்து செல்கிறேனே அப்போதெல்லாம் இவை எல்லாம் எம் ஈசன் கைலாச நாதனுக்கு சமர்ப்பணமாகட்டும் என எண்ணிக் கொள்வேன். உடனே என் தந்தை வாயுபகவான் அந்த பூக்களை எல்லாம் கொய்து அப்படி சுமந்து சென்று நமது சிவாலயத்தில் கொண்டு சேர்த்து விடுவார் - அப்படி நான் மானசீகமாக அனுப்பிய புஷ்பங்களே இன்று நீங்கள் பார்த்த புஷ்பாஞ்சலி எனச் சொன்னான்.
---'
மனதின் சக்தி இதுதான் - திடசித்தமாக நமது சிந்தனையில் ஒன்றைக் குறித்த பற்று இருக்குமானால் - மனதில் உதிக்கும் எண்ணம் மந்திரச் சொல்லாய் மனதின் திரமாய் நிறைவேறும்.
ஆக,
நாமும் நல்லதையே நினைத்து மனம்போல் வாழ்வோம். 

மனசு...

மனசு!?
நாம் பேசும் போது சில நேரங்களில் சில பெயர்கள் குறிப்புகள் மனசுல இருக்கு ஆனால் உடனடியாக ஞாபகத்துக்கு வரலை - எப்படி விளக்குவது என புரியலை என்று சொல்வோம்.
மனசு என்றவுடன் நாம் மார்பில் இதயத்தில் இருப்பதாக உணர்கிறோம். ஆனால் மனசு என்பது மூளையின் ஒரு பகுதியே.
மனசு என்ற மூளையின் ஒரு பகுதி இதயத்தோடு நேரடி தொடர்பு கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே பல சம்பவங்கள் காட்சிகள் நினைவுகள் இதயத்துக்கு உற்சாகத்தை அல்லது இருக்கத்தை துடிப்பை அதிகமாக்குகிறது.
இந்த இதயத்தின் துடிப்பையே நாம் மனசு மார்பில் இருப்பதாக நினைக்க காரணம்.
சரி... மனசு என்பது என்ன? கம்ப்யூட்டரின் storage 500 GB 1000 GB கிகா பைட் ட்ரில்லியன் பைட் என்கிறோமே அதுதான் மனசு.
சம்பவங்களை காட்சிகளை எண்ணங்களை கேட்டவைகளை தொகுத்து தனித்தனியாக ஆடியோ வீடியோ டேட்டா base file களாக கம்ப்யூட்டர் தொகுத்து வைப்பதை போல நமது மனசு எல்லாவற்றையும் சேமித்து வைக்கிறது.
கம்ப்யூட்டரில் காணொளி கேட்கும் அமைப்பு இருப்பதால் பதிவுகளை நாம் மீண்டும் பார்க்க / கேட்க முடிகிறது.
நமது முன்னோர்கள் தங்கள் தவ வலிமையால் ஞான திருஷ்டி பெற்று தங்கள் மனதில் இருந்த பதிவுகளை நிஜத்தில் காட்டினார்கள் - உதாரணமாக ஆசிரமத்தில் இருந்த படி ராமாயண காட்சிகளை ஞான திருஷ்டி மூலம் கண்டு பதிவு செய்தார் வால்மீகி. மஹாபாரதத்தில் வியாசர் அருளால் சஞ்சயன் அரண்மனை உபரிகையிலிருந்தபடியே போர்க்கள காட்சிகளை திருதராஷ்டிரனுக்கு விவரித்தான்.
நமது கம்யூட்டர் அல்லது அலைபேசி memory space இல்லை என்று சொல்லி பதிவுகளை சேமிக்க மறுக்கும்.
ஆனால் மனித மனம் பல நூறு ஆயிரம் கோடி நினைவுகளை ஏற்க்கும் தன்மையுடையது.
சாதாரண மனிதன் தன் மனதின் மெமரி செல்களில் அதிகபட்சம் 8% மட்டுமே உபயோகிக்கிறான். நல்ல எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் 10% விஞ்ஞானிகள் செஸ் விளையாட்டு வீரர்கள் 15% வரையும் மோனம் தியானம் தவம் ப்ராணாயாமத்தில் ஈடுபடும் ஞானிகள் ரிஷிகள் 25% வரையும் தங்கள் மனதின் சக்தியை உபயோகிக்கின்றனர்.
வியாசர் போன்ற காவிய கர்த்தர்கள் இன்னும் சற்று அதிகமாக உபயோகப் படுத்தி இருப்பார்கள்.
மனதின் சக்தியை (நினைவாற்றல் தகுதியை) 50% மேல் உபயோகிப்பவர்களே கடவுளாக கருதப்படுவதாக நாம் நிச்சயம் நம்பலாம்.
சாதாரண மனிதர்களாகிய நாம் 5% மட்டுமே மனதை பயன்படுத்துகிறோம் காரணம் நாம் நம் மனதில் இருந்த தேவையற்ற நினைவுகளை பதிவுகளை (குப்பைகளை) அவவ்போது அகற்றுவதில்லை. அதாவது clearing or deleting of junk files - நாம் செய்வதில்லை. ஆக நமக்கு mobile phone ல் insufficient memory என வருவது போல நிரம்பி வழியும் எண்ணங்கள் கனவுகளாக... சில வயோதிக காலத்தில் மெமரி லாஸ் அல்லது சம்பந்தமில்லாது பழைய சம்பவங்களை உளறுதல் அல்லது ஒரே தொடர்புடைய விஷயஙுகளை மீண்டும் மீண்டும் பேசுவது என...
புரியும் படியாக சொல்ல வேண்டுமானால் file corrupted - cannot be displayed - file not formatted. என்பன போல.
மனம் என்பது மனிதனின் தரத்துக்கு ஏற்றார் போல கடவுளால் அருளப்பட்ட நினைவேநதல் பாத்திரம் - அந்த பாத்திரத்தின் கொள்ளளவை அதிகரிக்க நாம் செய்ய வேண்டிய சில முக்கிய செயல்கள்
தேவையற்ற / கோபம் / கெட்ட மற்றும் உடல் - உணவு கேளிக்கை எண்ணங்களை junk file களை அவ்வப்போது நீக்குங்கள்.
ப்ராணாயாமம் பழகுங்கள்.
மெளனம் / தியானம் தினமும் செய்வது நம்மை படிப்படியாக தவ/ சமாதி நிலைக்கு உயர்த்திவிடுவது தெய்வ சத்தியம்!. 

Thursday, January 2, 2020

ஹிந்து நாள் காட்டி 4



ஹிந்து நாள் காட்டி 4
ஹிந்து பஞ்சாங்கப்படி ஒருநாள் என்பது 23 மணி 56 நிமிடங்களே...
இது ராசி ரீதியான சூரிய லக்கின சஞ்சார நாழிகை வினாடி கூடுதல் மற்றும் அதற்கான மணி நிமிடம் நொடி கூடுதல் கூட்டினால் தெரியும்...
Pls refer இணைப்பு படம்.
இதில் நாழிகை கூடுதல் 59.50 நாழிகை மேஷம் முதல் மீனம் முதல் லக்கின சஞ்சார நேரம்
மற்றும்
இவற்றின் ஆங்கில மணி / நிமிஷம்/ நொடி கூடுதல் கூட்டிப் பார்த்தால்... 23 மணி 56 நிமிஷம்...
இந்த 4 நிமிட முரண்பாடு 365 நாட்களால் பெருக்கி பார்த்து கணக்கு போட்டால் leap year முரண்பாடு இந்து நாள் காட்டியில் இல்லை.
இது போலவே 27 நக்ஷத்திரங்கள் 12 ராசிகளில் சஞ்சாரிக்கும் நேரமும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு...
வாகனத்தின் gear box உள்ளே இருக்கும் வெவ்வேறு அளவு உடைய சிறிதும் பெரியதுமான பல் சக்கரங்கள் ஒரு ஒரு வேகத்தில் ஒத்த இயல்போடு சுற்றி சீராக செல்வது நமக்கு எளிதாக புரிகிறது... அது போலவே ஹிந்து நாள்காட்டி.
நேரம் கிடைத்தால் 27 நக்ஷத்திர / 12 ராசி மாத நாட்கள் / நாழிகை / வினாடி அதன் சஞ்சாரம் குறித்து தொடர்ந்து எழுதுகிறேன்....

ஹிந்து நாள்காட்டி... 3

ஹிந்து நாள்காட்டி... 3 
ஒரு நாளைக்கு 60 நாழிகை × 60 வினாடி (வினாடி வேறு நொடி வேறு)
60 நொடி ஒரு வினாடி
24 விநாடி ஒரு நாழிகை
இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம்
இந்த பகிர்மானங்கள் எதற்க்காக?! ஐரோப்பிய பகிர்மானம் 60 நொடி 60 நிமிஷம் 24 மணி சுலபமாக இருக்கே...
ஆனால், லீப் year ... ஒரே தேதியில் ஆண்டு (அதாவது குறிப்பிட்ட ஒரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி மாறாமல் சீராக இருந்ததா?!)
திருக்கண்ணமங்கை ...
உலகிலேயே விஷ்ணு ஸ்ரீ தேவி பூதேவி உலகிலேயே மிகப்பெரிய திருமேனி...
பெருமாளுக்கு, வருடத்துக்கு ஒரே ஒரு அபிஷேகம்... ஜேஷ்டா (பெரிய) அபிஷேகம்... ஜேஷ்ட என்றால் கேட்டை நக்ஷத்திரம் கூட...
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை யின் பின்னால் வரும் ஏகாதசி _ இந்த திதியை ஒட்டி கேட்டை நக்ஷத்திரம் மாறாமல் வருகிறது...
ஹிந்து பஞ்சாங்கம் துல்லியமானது என்பதற்க்கு இதை விட ஆதாரம் வேண்டுமா...
இந்த நாழிகை வினாடி நொடி சூரியனின் ராசி சஞ்சார காலம் 27 நக்ஷத்திரங்களில் 12 மட்டும் ஒரு குறிப்பிட்ட ராசியில் சஞ்சரிக்கும் காலம் மாதத்தின் பெயராக... இதன் மூலம் பூமியின் தன்னைத் தானே சுற்றும் காலம் / சூரியனை வேறு வேறு அயணங்களில் மாறுபட்ட கால அவகாசத்தில் சுற்றி வரும் கால மாறுபாடுகள் ஹிந்து பஞ்சாங்கத்தில் correlate செய்யப்பட்டு இருக்கிறது...
ஏற்கனவே முந்தய பதிவுகளில் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சேர்க்கை _ சப்த அஷ்ட நவ தச செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதம் குறித்து விரிவாகப் பேசிவிட்டோம்...
இப்போது ஒரு அதிர்ச்சி தகவல்...
ஒரு நாளைக்கு 24×60 = 1440 நிமிஷங்கள்... சரியா?! இப்படித்தானே ஐரோப்பிய கிறித்தவ நாள்காட்டி உங்களுக்கு சொல்லி கொடுத்தது....
அதுதான் இல்லை.... இந்து பஞ்சங்கப்படி ஒரு நாளைக்கு 23 மணி நேரம் 56 நிமிடங்களே...
இப்போது 365 × 4 ÷ 60 = 24.333 அதாவது ஒரு நாள்..
இப்போது புரியுதா ஹிந்து பஞ்சாங்கத்தில் லீப் year இல்லாத மாத நாட்கள் எண்ணிக்கை மாறாத காரணம்!
பதிவு 4 இல்.... 

ஹிந்து நாட்காட்டி 2

ஹிந்து நாட்காட்டி 2
12 ராசிகளும் 27 நட்சத்திரங்கள் மீது சஞ்சரிக்கும் வினாடி கணக்கு...
மேஷம் 257
ரிஷபம் 281
மிதுனம் 315
கடகம் 329
சிம்மம் 317
கன்னி 301
துலாம் 301
விருச்சிகம் 317
தனுசு 329
மகரம் 315
கும்பம் 281
மீனம் 257
இவற்றின் கூடுதல் 3600 ...
சித்திரை துவங்கி பங்குனி வரை 30, 32,31,32,31,30,30,30,29,3029,31 என 365 நாட்கள்...
இந்த 356.25 நாட்கள் (லீப் year நாள் சேர்த்து) ஹிந்து நாள் காட்டியில் 3600 /360 டிகிரி யால் வகுக்கப்பட்டு உள்ளது...
இனி ராசிகள் சூரியனின் ஒவ்வொரு நாளும் எப்படி சஞ்சாரிக்கின்றன என்று பார்ப்போம்...
இது அயனாம்ச சலனம் / தூரம் போன்றவற்றால் கொஞ்சம் மாறலாம்...
3 இல் தொடரும்...

ஹிந்து நாட்காட்டி 1

ஹிந்து நாட்காட்டி 1 
தமிழ் (ஹிந்து) மாதங்கள் 12 அவை
சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி முறையே மேஷ ரிஷப மிதுன கடக சிம்ம கன்னி துலா விருச்சிகம் தனுசு மகர கும்ப மீன என்று 12 ராசிகள் பெயரால் வகுக்கப்பட்டு உள்ளது.
பூமி சூரியனை ஒரு நீள் வட்ட (வட்டப்) பாதையில் சுற்றி வருகிறது...
வட்டம் 360 டிகிரிகள் உள்ளது... நீள் வட்டப்பாதை என்பதால் 360 டிகிரிகள் ஆக இந்த 12 ராசிகள் 365.25 நாட்களாக பகுக்கப்பட்டு உள்ளது.
பூமி சூரியனை சுற்றி வரும் நீள் வட்டப்ப பாதையின் அயன தூரம் /திருப்புக் கோணத்துக்கு ஏற்ப சுற்றப் பாதையின் நீளம் நேரம் மாறுபடுவதால் மேலை நாட்டில் லீப் year என்று பகுத்து வைத்து உள்ளனர்...
ஆனால் இந்த பஞ்சங்கப்படி 60 நாழிகை 24 வினாடி என்றும் 12 ராசி என்பது துல்லியமாக correlate செய்யப்பட்டு உள்ளது...
ஹிந்து பஞ்சாங்கம் அல்லது நாட்காட்டி துல்லியமானது என்பது ஒவ்வொரு தமிழ் மாசம் பௌர்ணமி தினம் ஒரு குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில் வருவதை கொண்டு நாம் உணரலாம்.
குறிப்புகள் 2இல் தொடரும்....

Y2K (6)

Y2K (6)
ஆடி மாதத்துக்கு 32 நாட்களும் உண்டு... நீங்கள் குறிப்பிட்ட பதிவில் 31 நாட்கள் ...
பிழை
பிழை
பிழை
ஆம்....
நமக்கு வெள்ளைக்காரன் எப்போதுமே உசத்தி.
ஜூலை ஆகஸ்ட் என்ற மாதங்களை இணைத்த பின்னர்...
லீப் இயர் என்று சொல்லி பெப்ரவரி மாதத்தில் அவன் 1 நாளை இணைத்து 28 ஐ 29 ஆக்கினால் அதை ஏற்போம்....
ஆனால் காலம் காலமாக இந்து தர்மத்தில் மேலை நாட்டு தாக்கத்துக்கு முன்பே லீப் இயர் போன்று நாம் ஒரு வழக்கத்தை கடை பிடித்திருக்கிறோம்...
நாள் கணக்கில் மேலை நாட்டவர் ஜூலியர் ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் என்ற மன்னர்களுக்குப் பிறகே புத்தி தெளிந்தனர்... ஆனால் இந்த... தமிழன்?!
சரி, வெள்ளக்காரன் நாளை கூட்டியது அறுவடையை அனுபவிக்கும் கொண்டாட்ட காலத்தில்...
ஆனால் ஹிந்து, நாளை கூட்டியது ஆடிப்பட்டம் தேடி விதைத்து உழைக்கும் காலத்தில்!
உழைப்பே உயர்வு!

Y2K (5)

Y2K (5)
நகைச்சுவை காட்சியில் ஒரு வசனம்....கணவன் மனைவி சண்டை காட்சியை கணவன் நண்பனிடம் சொல்வது.....
அவ என்னை அடிக்க
நான் அவ கிட்டே அடிவாங்க என்று....
ஊதிக்கினும் படுத்துக்கலாம் - படுத்துகினும் ஊத்திகளாம்...
போர்த்திக்கிட்டும் படுக்கலாம் படுத்துகிட்டும் போர்த்திகலாம்....
5 ஐ மூன்றால் பெருக்கினால் என்ன?
3 ஐ ஐந்தால் பெருக்கினால்...
இந்து தர்மத்தில் ஒரு நாள் 60 நாழிகை ஒரு நாழிகை 24 வினாடி என்றும் பகுக்கப்பட்டு உள்ளது.
இந்துக்களை பார்த்து காபி அடித்தே எழுதப் பட்ட கிறித்தவ நாட்கள் 24 மணி 60 நிமிடங்கள் என்று பகுக்கப்பட்டு உள்ளது.

Y2K (4)

Y2K (4)
ஆகஸ்ட் ஜூலை மாதங்களுக்கு 31 நாட்களுக்கும் காரணம் ஹிந்து தர்மமே என்று முந்தைய பதிவை முடித்தேன்.
தற்போது, தமிழ் மாதங்கள் மற்றும் நாட்கள் எண்ணிக்கையை கீழே இணைத்து உள்ளேன்.
சித்திரை துவங்கி கடும் கோடை. அதாவது நீள் வட்டப்பாதையில் சூரியனை சுற்றும் உலகம் சித்திரை வைகாசி ஆணி ஆடி ஆகிய 4 மாதங்கள் சூரியனுக்கு வெகு அருகில்.
அப்படியென்றால் ஆங்கில ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள்...
சித்திரை தவிர, வைகாசி துவங்கி ஆவணி வரை மாதங்கள் 31 நாட்களை கொண்டது.
ஆகா ஆடி ஆவணி சற்றேறக்குறைய ஜூலை ஆகஸ்ட் மாதங்களுக்கு ஹிந்து காலண்டர் ஐ பார்த்து தாங்கள் புகுத்திய மாதங்களுக்கும் 31 நாட்களை புகுத்தி....
No photo description available.

Y2K (3)

Y2K (3)
2017 காலண்டருக்காக அலையும் இப்போது இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் வேறு எப்போது தெரிந்து கொள்வது?!
வட மொழியில் சப்த /சாத் அஷ்ட/ஆட் நவ/நவ் தச/தஸ் 7 8 9 10 ஐ குறிக்கும்.
இப்போது எண்ணிப்பாருங்கள் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் எப்படி வந்தது...
சரி,
7 8 9 10 எப்படி 9 10 11 12 ஆக மாறியது?
ஊடால சொருக்கப்பட்ட அகஸ்டஸ் என்ற மன்னன் பெயரால் உருவாக்கப்பட்ட ஆகஸ்ட் மற்றும் ஜூலியர் சீசர் என்ற மன்னன் பெயரால் உருவாக்கப்பட்ட ஜூலை மாதத்தினாலும்...
இதில் இவர்களுக்குள் ஏக ஈகோ வேறு... இருவரும் தங்கள் பெயரால் இணைக்கப்பட்ட மாதத்தில் தலா 31 நாட்கள் வேண்டும் என்று....
என்ன இழவுப்பெருமையோ?
அகஸ்டஸ் ஜூலியர் பீற்றிக் கொண்ட இழவுப் பெருமைக்கும் இந்து விஞ்ஞானம் காரணம். அது என்ன என்பது அடுத்த செய்தியாக...

Y2K (2)

Y2K (2)
உலகுக்கே நாள் காட்டி யை வடிவமைத்து தந்தது ஹிந்து தர்ம விஞ்ஞானம்.
க்ரிகோரியன் நாள்காட்டி வரும் வரை அவர்கள் நாள் ஆண்டு வருடம் என்றெல்லாம் பகுத்து வைத்தது மனித குலத்தின் பிரசவ காலத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே.
அதாவது, அவர்கள் காலண்டர் கலவி காமம் கர்ப்பம் என்பதை ஒட்டியே.
அவர்களுக்கு தெரியாத புரியாத உண்மையை ஹிந்து தர்மம் பல ட்ரில்லியன் ஆண்டுகளாக கடைப்பிடித்து காப்பாற்றி வந்தது.
ஹிந்து தர்மத்தில் பித்ரு தர்ப்பணம் - தாத்தா வின் தகப்பனார் முதல் மூத்த மரியாதைக்கு உரியவர். ஆதித்யன்.
ஆக சூரியன் constant - மற்ற கிரங்கள் அவரை சுற்றி.
ஆனால் பின்னால் தோன்றிய கிறித்தவ இஸ்லாத்தில் உலகம் உருண்டை என்ற கலிலியோ அடித்துக் கொல்லப்பட்டதும் - lunatic ஆக நாம் வாழும் இந்த உலகத்தை சுற்றும் சந்திரனை வைத்து காலம் கணக்கீடு செய்வதும் மடமைதானே?!

Y2K (1)

Y2K (1)
இந்த தலைப்பிலேயே கொஞ்சம் தொடர்ந்து பேசுவோம்.
பூமி சூரியனை சுற்றி வர சராசரி யாக 365.25 நாட்கள் ஆகிறது.
இதில் வரும் புள்ளி 25 நாள் ஐ சரி கட்டடவே கிறித்தவ நாள் காட்டியில் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை பெப்ரவரி மாதம் 29 நாட்கள் (28 க்கு பதிலாக) வருகிறது.
இணைப்புக் குறிப்பில் புள்ளி 25 ஐ தொடர்ந்து வரும் தசம எண்கள் அதாவது விட்டுப்போன நிமிடங்கள் தான் 2000 ஆண்டு முடிந்து 2001 ஆம் ஆண்டில் கணினி உலகமே பயந்த Y2K நமது தலைப்பு.
Image may contain: text

Wednesday, January 1, 2020

சூரிய ரதம்

சூரிய ரதம் 1 சக்கரம் கொண்டது
காலை
நடுப்பகல்
பிற்பகல் என மூன்று மேகலைகள்
ஸம்வத்ஸரம்
பரிவத்ஸரம்
இத்வத்ஸரம்
அனுவத்ஸரம்
உத்வத்ஸரம்
என 5 ஆரங்கள் கொண்டது அந்த சக்கரம்.
சக்கரத்தின் வெளிவட்டம் ஆறு சுற்றுக்கட்டைகளால் இணைக்கப்பட்டது - ருதுக்கள்
வசந்த
க்ரீஷ்ம
வர்ஷ
சரத்
ஹேமந்த
சிசிர என்பன அவை.
ஏழு குதிரைகளாக
காயத்ரி
ப்ருஹதி
உஷ்ணிக்
ஜகதி
திருஷ்டிப்
அனுஷ்டம்
பங்கதி
என எழு தினங்கள்
சூரியனே 12 மூர்த்திகளாக - மாதங்களாக
இந்திரன்
தாதா
பர்ஜன்யன்
பூஷா
த்வஷ்டா வனஸ்பதி
அர்யமா
பகன்
விவஸ்வான்
சந்த்ரமா
விஷ்ணு
விருஷ்டி
மித்ரன்
என....
சந்தியாவந்தன அனுஷ்டானங்களில் இந்த சூரிய தேவன் பற்றி விவரங்கள் ஆராதிக்கும் தேவதைகள் சூரிய தேர் வர்ணனைகளே...
சூரியன் உதிக்கும் போது நாம் இந்திரனாக
மத்யானத்தில் யமனாக அஸ்தமனத்தில் வருணனாக இருந்து நாம் அவரை வழிபடுவதே சந்தியாவந்தன உட்பொருள்.

சிவ பாத ஹ்ருதயர்...

சிவ பாத ஹ்ருதயர்...
சிவனுடய பாதத்தை ஹ்ருதயத்தில் உடையவர்... பெயர் சூட்டப்பட்டது ... இவர் பிறந்தபோது... ஆனால்... இவர் சிவ பாதத்தை ஹ்ருதயத்தில் சுமந்தது... இவருக்கு மகன் பிறந்தபோது!!!
ஆம்... சீர்காழியை சேர்ந்த சிவ பாத ஹ்ருதயர் மகன்... திரு ஞான சம்பந்தர்...
அம்பிகை கொடுத்த ஞானப்பால் பருகி... சிவஞானம் பெற்றது 4அல்லது 5 வயதில்...
அன்று ... தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி என்று அம்மையப்பர் குறித்து தேவாரம் பாடத் துவங்கி...
ஆச்சாள்புரம் திரு வெண்னீற்று உமையம்மை உடனுறை சிவலோக தியாகேசர் கோவிலில் சம்பந்தர் தன் வாழ்க்கை துணை ஸ்தோத்திர பூர்ணாம்பிகை சமேதாராக, கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம் என்று முடித்தார்...
சிறு குழந்தையாக இருந்த சம்பந்தரை அவருடைய தந்தை ஊர் ஊராக தன் தோல்களில் சுமந்து செல்வது வாடிக்கை.
அப்போது சம்பந்தருடைய மலர்த் திருவடி அவருடைய தகப்பனார் மார்பிலே புரளும்... இது பின்னால் நடக்கும் என்று கணித்தே சிவ பாத ஹ்ருதயர் என்று பெயரிட்டனர் போல தெரிகிறது!!
சிவாம்சம் பொருந்திய சம்பந்தரையே, தன் மகனாக பெற்றவரே... ஆனாலும் தன் குலத்துக்கே உரிய வேள்வியை செய்து முடிக்க ஆர்வம் கொண்ட சிவ பாத ஹ்ருதயர், திரு ஞான சம்பந்தரிடம், அதற்க்காக பொருள் (நிதி) கேட்டு போனார்....
பரம குணாநிதி/கருணாநிதி/ தயாநிதி/ அருள்நிதி ஈசன் மட்டுமே சம்பந்தரின் உடைமை...
தந்தை கேட்கிறார்... மகன் கொடுக்க வேண்டியது கடமை...
திரு ஆவடு துறையில், பொருள் வேண்டி,
இடரினும் தளறினும் எனதுறு நோய் தொடரினும் என்ற பதிகம் பாட... சிவ பாத ஹ்ருதயர் வேள்விக்கு தேவையான நிதி பொற்கிழியாக ஈசனால் அருளப்பட்டது.
இந்த பதிகத்தை பக்தியோடு பாராயணம் செய்து வந்தால், நமது ஞாயமான தேவைக்கு தடங்கல் இல்லாமல் நமக்கு போதுமான பொருள்/பணம் எப்போதும் கிடைக்கும்.
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 1
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 2
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 3
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 4
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 5
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 6
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 7
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 8
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 9
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 10
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே 11 

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...