Saturday, January 19, 2019

வாதாபி கணபதி-1

#வாதாபி_கணபதி தமிழகம் வந்த கதை -1
ஆதி தஞ்சை மாகாணத்தின் திருச் செங்காட்டாங்குடியில் மாமாத்திரர் குலத்தில் பரஞ்சோதி என்பவர் அவதரித்தார்.
இந்தப் பரசோதியர் சிறந்த சிவபக்தர். ஆயினும் வாழும் வழியாய் நரசிம்ம வர்ம பல்லவனிடத்து தளபதியாய் பணியாற்றி வடதிசை வாதாபி நகரை வென்று பொன் பொருள் மண் மற்றும் அருளும் கணபதியையும் கொண்டு வந்து அரசரிடம் சமர்ப்பித்தார்.
பரஞ்சோதியாரின் இத்துனை பராக்ரமத்திற்கும் காரணம் அவரின் சிவபக்தியே காரணம் என்பதை உணர்ந்த மன்னர் அவரை சேனைப் பொறுப்பிலிருந்து விடுவித்து சொந்த ஊர் சென்று சிவதொண்டில் இருக்க வேண்டும் என விண்ணப்பித்து பொன்னோடும் பொருளும் தந்து அருளும் வாதாபி கணபதியையும் நினைவாய் தந்து அனுப்பி வைத்தான்.
சொந்த ஊர் திருச் செங்காட்டங்குடி திரும்பிய பரஞ்சோதியார் அவ்வூர் சிவாலயத்தில் வாதாபி கணபதியை ஆத்திமரத்திடை நிறுவி வழிபட்டு அடியார் தொண்டில் இருந்தார்.
இல்லாளாக திருவெண்காட்டு மங்கையை சேர்ந்து சீராளன் என்ற மகனையும் வரமாய் பெற்று நாள்தோறும் அடியார்க்கு அமுது படைத்து அதன் பின் உண்டு வாழ்ந்தனர்.
#உத்திராபதியார் 2 ல் தொடரும்.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...