எங்கு தேடியும் சிவன் அடியாரை காணாத பரஞ்சோதியார் வீடு வந்து உத்திராபதியார் குறித்த தகவல் கேட்டு பெருமகிழ்வோடு கோவிலுக்குச் சென்று - சிவனடியார் காலில் விழுந்து நமஸ்கரித்து வீட்டுக்கு வந்து அமுது உண்ண வேண்டினார்.
உத்திராபதியார் சொன்ன மறுமொழி...
யாம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையே உணவு எடுப்போம். அதனால் எனக்கு குறையில்லா தலை நரப்பசுங்கன்று கறியுடன் உணவு வேண்டும் - அதை முகமலர்ச்சியோடு கண்ணீரின்றி தாய் மடியிலிருத்தி தந்தை வெட்டி கறி சமைக்க வேண்டும் - எனக்கு இப்போது பசி மிகுதியாய் இருக்கிறது - ஆக சீக்கிரமாக உணவு தேவை - உன்னால் அப்படி ஒரு உணவு தர முடியுமா?
ஒரு நாட்டின் போர் தளபதியாக பர்சோதியார் உயிர் கொலைக்கு பழக்கமானவரே - ஆயினும் இங்கே அடியார்க்கு அமுது படையல் பணி - அதில் உள்ள நிபந்தனைகளின் ஆழத்தை பின்னே தள்ளியது - பரஞ்சோதியார் விரைவில் உணவு தயாரித்து கொண்டு தங்களை அழைக்கிறேன் சிறிது அவகாசத்தில் - எனக் கூறி வீடு வந்தார்.
பரஞ்சோதியாருக்கு கால அவகாசமும் குறைவு - பொன் பொருள் வேண்டி யாரும் பிள்ளையை விற்க துணிந்தாலும் மடியில் வைத்து முகமலர்வோடு தந்தை அரிய வேண்டும் -
வீட்டுக்கு வந்து திருவெண்காட்டு மங்கை யிடத்தே நிலையைச் சொல்லி சீராளனே வழி என்ற முடிவுக்கு வந்தனர்.
பாடசாலைக்கு சென்றிருந்த சீராளனை அழைத்து வந்தனர். குழந்தை என்ன விசேஷம் அம்மா - பெரிய அடியார் யாரோ வந்திருக்கிறார்களா? நிறைய பதார்த்தங்களோடு சாப்பிடப் போகிறேன் - என்று தானே விருந்தாகப் போவது தெரியாமல்!
சீராளனை குளிப்பாட்டி நறுமணம் சூட்டி - வீட்டில் இருந்த சந்தன நங்கை என்ற பணிப்பெண்னை புழக்கடைக்கு அனுப்பி விட்டு மகிழ்வோடு சீராளன் தாய் மடியில் தகப்பனால் கறிக்காக வெட்டப்பட்டான்.
#சந்தன_நங்கை என 4 ஆம் பகுதி தொடரும்.
No comments:
Post a Comment