பரஞ்சோதியார் மற்றும் அவரது மனைவி திருவெண்காட்டு மங்கை தங்கள் தலைமகன் சீராளனை உத்திராபதியார் கேட்டபடி கறி சமைத்து பரிமார -
சிவனடியார் உத்திராபதி தலைக்கறி எங்கே எனக் கேட்க பணிப்பெண் சந்தன நங்கை அதையும் படைக்க -
உத்திராபதியார் இல்லத்தின் உறுப்பினர் ஒருவரும் தன்னோடு உணவருந்த அமர வேண்டும் எனக் கேட்க -
பரஞ்சோதியார் தானே உடன் அமர்ந்து உண்ணுவதாகச் சொல்ல -
உத்திராபதியார் நீ கர்த்தா - மாகேஸ்வர பூஜை முடித்த பின்னரே உணவு அருந்துவது முறை - அதனால் உன் மகனை என்னோடு அமரச் சொல் எனக் கேட்க...
பரஞ்சோதியார் சொல்கிறார் - அவன் இங்கே உதவான் என... ஆனால் உத்திராபதியார், வாய்விட்டு அழை என வற்புறுத்த - பரஞ்சோதியார் வாசல் நோக்கி கணீரென்ற குரலில், மகனே சீராளா, மகாதேவன் அடியாரோடு உணவுகொள்ள வா எனச் சொல்ல -
பாடசாலையிலிருந்து ஓடிவரும் பிள்ளையாய் சீராளன், வந்தேன் என உள்ளே வர...
உத்திராபதியார் மறைய வீட்டின் உள்ளே ஜோதிப்பிழம்பில் பார்வதி பரமேஸ்வரனாய் தன் மடியில் கந்தனை அமர்த்திக் கொண்ட நிலையில் சோமஸ்கந்தராக காட்சி தந்து - பரஞ்சோதியார் - வெண்காட்டு மங்கை - சீராளன் - பணிப்பென் சந்தன நங்கைக்கு திருவடி ஐக்கியமளித்தார்.
முக்கிய குறிப்பு - சிவாலயஙகளில் 63 நாயன்மார்கள் சந்நிதி கடைசியில் பார்வதி பரமேஸ்வரன் ரிஷபத்தின் மீது ஆரோகணித்து - காக்ஷி நாதர் என்ற பெயரில் அமைந்திருப்பார். எல்லா நாயன்மாருக்கும் காக்ஷிநாதராகவே வந்த ஈசன் சிறுத்தொண்டர் பரஞ்சோதியாருக்கு மட்டும் மடியில் மகனை இருத்தி சோமஸ்கந்தராக காக்ஷி கொடுத்தார்.
இது, ஆதி நாயகனான தன்னாலேயே பிள்ளைப் பாசத்தை விட முடியவில்லை - ஆனால் பரஞ்சோதியார் செய்த செயல் தன்னையும் மிஞ்சிய தியாகம் என்ற பொருள் படுவதாக.
(இது ஒரு கனவு நிலை அவஸ்தை - அதன் பயனாய் செய்த சிவப்பணிக்கான பரிசாய் மோக்ஷம் என்றும் சொல்பவர்கள் உண்டு)
-நமசிவாய-
No comments:
Post a Comment