Monday, January 21, 2019

சுடுகாட்டு பணியாரம் 4ல் துவங்கி 1ல் முடியும் -4

4 இல் துவங்கி 1 இல் முடியும்.
4.
சுடுகாட்டுப் பணியாரம்....
80 களில் மயிலாடுதுறையில் மகாதானத் தெருவில் வசித்தோம். நாங்கள் அப்போது அண்ணன் தம்பிகள் 3 பேர்...
தெருவில் நல்லது கெட்டது குறிப்பாக கெட்டது நடந்தால் முதல் தகவல் எங்களுக்கே வரும்....
ஓலை பாய், வாகனம், தயாரிப்பில் துவங்கி வெட்டியானிடம் கூலி பேசுவது உட்பட என் அண்ணன்கள் துரை, இல்லாத நேரத்தில் கணேசன்.
நான் அருகே இருந்து உதவுவேன்.... தோள் போடுவேன்....
யாத்திரை தானம் வாங்க மாட்டோம்.... காரணம் புண்ணியம் எங்களுக்கு வேண்டி.. வீட்டுக்கு வந்து பூணூல் மாற்றி மாலை சிவன் கோவில் தரிசனம்....
மறுநாள், சஞ்சயணம்.... எங்களில் ஒருவர் அங்கே இருப்போம்... காரணம், வேலை குறைவுதான்!!!
முதல் நாள் வாய்க்கு அரிசி... காசோடு போடுங்க என்று வெட்டியான் கூவிக்கொண்டே இருப்பான்.... மூங்கில் களை கண்டிப்பாக வெட்டி.... போர்த்திய துணிகளை நாங்கள் கிழிப்போம்.... எங்களிடம் மட்டும் அஞ்ஞான் என்ற அந்த வெட்டியானுக்கு பயம் கலந்த மரியாதை.... அடக்கி வாசிப்பான்...
மற்றவர்களிடம் கூலியில் துவங்கி, மூங்கில் வெட்ட துணி கிழிக்க என்று எல்லாம் சண்டை....
சடலத்தின் மீது போர்த்தப் பட்ட துணி, வாயிலிட்ட அரிசி, காசு மூங்கில் எல்லாவற்றையும் திரும்பி பார்க்காமல் நாம் செல்லும் போது அஞ்ஞான் தன் வசமாக்கிக் கொள்வான்....
மறுநாள், சுடுகாட்டு பணியாரம், அரிசி வடை, இளநீர் எல்லாம் வெட்டியானுக்கே....
இன்று.... நிலைமை தலை கீழ்.... பெருகிய மக்கள் தொகை, நித்திய அதிக மரணம், எரிவாயு தகனம், pollution control fees.... மாமூல் பேரம், வெட்டியான் (அரசு ஊழியன் ஆகிப்போன சுடு/இடு காட்டு ஊழியன்) இறந்தவனை விட பெரிய பெரிய பணக்காரன்.... அரிசி/ சில்லறை/துணி/மூங்கிலுக்கு ஆசை படுவதே இல்லை....
ஆனால், நாம் இந்த தேசத்தின் பொது மக்கள்.... இன்றும் கூட எலி புழுக்கை போட்ட எடை குறைந்த பழுப்பு நிற ₹25 சர்க்கரை/ மக்கிய வாசம் வீசும் மோட்டா ரக அரிசி, 1 முழ கரும்பு, cancer வர காரணமான பருப்பு பாமாயில் போன்றவற்றுக்கு ரேஷன் que வில் பல மணி நேரம் கால் கடுக்க....
4 இல் துவங்கி 1இல் முடியும் தொடரில் 3வது அடுத்து வரும். 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...