Saturday, January 19, 2019

பீஷ்ம ஏகாதசி....

பீஷ்ம ஏகாதசி....

தகப்பனார் சந்தனுவுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன் என சபதம் செய்தார் பீஷ்மர்.
இதனால் மகிழ்ந்த சந்தனு பீஷ்மருக்கு இஷ்டா ம்ருத்யு - பீஷ்மர் விருப்பப்படி மரணம் புகலாம் என வரமளித்தார்.
குருஷேத்திர போர் தக்ஷிணாயணத்தில் முடிந்தது.... அதாவது வழக்கமாக கார்த்திகையில் வரும் கைசிக ஏகாதசி எனும் கீதா ஜெயந்தி துவங்கி 18 நாள் போர்.
கைசிக ஏகாதசிக்குப் பிறகு வரும் பெளர்ணமி கழிந்த கிருஷ்ணபட்ச பஞ்சமி போரின் 10ஆம் நாள் பீஷ்மர் அடிக்கப்பட்டு வீழ்ந்தாலும் -
ராஜ்யத்தில் தர்மநெறியோடு கூடிய ஆட்சி அமைந்து அதன் பின்னரே உயிர் நீப்பேன் என்ற சபதம்
- உத்திராயண புண்யகாலத்தில் உயிர் துறக்க சங்கல்பம். (தேவர்களுக்கான பகல் பொழுது - கர்ம காரியங்களை / அந்திம சடங்குகளை மனிதர்களே கூட இரவு நேரத்தில் அதாவது சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு / சூரிய உதயத்துக்கு முன் மேற்கொள்வது வழக்கமில்லை)
உத்ராயண புண்யகாலம் மகர ஸங்கராந்தியில் பிறக்க ஏகாதசியில் சரகல்பம் எனும் அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மர் முக்கி அடைந்த நாள் பீஷ்ம ஏகாதசி
ஏகாதசி மரணம் / துவாதசி தகனம் விசேஷம் என்ன?
ஏகாதசி உபவாசம் இருந்து துவாதசி உணவு எடுத்துக் கொள்கிறோமே... அது போல அக்னி தேவனும் ஏகாதசி அன்று உபவாசம் - துவாதசி அன்று அக்னி ஏற்க்கும் முதல் ஆகுதி ஏகாதசி மரணமடைந்து துவாதசி தினத்தில் தகனம் செய்யப்படும் பூத உடல்களே.
ப்ரம்மேசாய
ஓம் நமோ நாராயண நம சிவாய!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...