ஸ்ரீ கிருஷ்ணன், வேளுக்குடி உரை யில் கேட்டது....
பீஷ்மர் மகா பண்டிதர்.... அரசர் கள்/ரிஷி கள் என எல்லோருமே அவரிடம் சந்தேகம் தெளிவார்கள்...
பீஷ்மர் தன் தந்தை சந்தணுவுக்கு ஸ்ரார்தம் செய்தாராம்....
மகன் பீஷ்மர் செய்யும் ஸ்ரார்தத்தில் மகிழ்ந்த தந்தை சந்தனு பூமிக்குள் இருந்து கையை நீட்டி நேரில் தன் கையில் பிண்டத்தை கொடு என்று கேட்க.... பீஷ்மர் சாஸ்திரத்தில் பிண்டம் பூமியில் தரப்பட /இடப்பட வேண்டும் என்றே சொல்லி இருக்கு... இந்த திவசம் கூட சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்வதால் செய்கிறேன்... என்று சொல்லி பிண்டத்தை சந்தனு கையில் தராமல் தரையில் வைத்தாராம் பீஷ்மர்....
பிரமாணம் என்பது சாஸ்திரம் மட்டுமே... மகாபாரதம் சாந்தி பர்வத்தில் அநேகமாக அனைத்து சாஸ்திர சம்பிரதாய ராஜ நீதி விளக்கங்களும் உள்ளன.
No comments:
Post a Comment