4 இல் துவங்கி 1 இல் முடியும்.
இது 3 வது....
யுத்த காலத்தில் ராணுவ தேவைகளுக்கு முன்னுரிமை தரப்படும். அப்போது மக்களுக்கு உணவு பொருட்களை ரேஷனில் வழங்குவார்கள்.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் உணவு உற்பத்தி குறைவாக இருந்தது. எனவே மக்களுக்கு உணவுப் பொருள்களை ரேஷனில் வழங்கினார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ரேஷன் என்பதே தேவை இல்லாத ஒன்று. ஆனால் ஆட்சியாளர்கள் ரேஷன் அட்டைகளை தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கு உபயோகப்படுத்தி - இலவசங்களை அள்ளிவிட்டு நம் மக்களை பிச்சைக்காரர்களாகவே வைத்து உள்ளனர்.
20 கிலோ அரிசி... இதை காக்கை கள் கூட சீண்டுவது இல்லை. அன்பு இல்லங்கள், முதியோர் இல்லங்களில் கூட ரேஷன் அரிசி வேண்டாம் என்று சொல்லி/ அறிவிப்பு பலகையில் கூட எழுதி வைத்து உள்ளனர்.
அரைத்து மாடுகளுக்கு வைத்தால் அவை அதை தின்றுவிட்டு கழியத் தொடங்கி விடுகிறது...
ரேஷன் கடைக்கு உள்ளே சென்று பாருங்கள், சர்க்கரை அரிசி கோதுமை என்று எல்லா பொருள்களிலும் எலிப் புழுக்கை, கரப்பு சக்கை கூடவே மக்கிய நாற்றம்.... எல்லாவற்றுக்கும் மேலாக அளவு குறைவு...
கொடுக்கும் எல்லா பொருள்களையும் ஒரே நாளில் கொடுத்தாலாவது தேவலாம்.
அரிசி ஒருநாள், சர்க்ரை ஒருநாள், கோதுமை ஒருநாள், மண்ணெண்ணெய் ஒருநாள், பாம் ஆயில் ஒருநாள், துவரம் பருப்பு ஒருநாள், உளுந்து ஒரு நாள்... ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு நாள் கால் கடுக்க que வில் நின்று லட்சக்கணக்கான மக்களின் கோடிக்கணக்கான உழைப்பு மணிகள் வீணாகின்றன.
2இல் கொஞ்சம் தர்மம் பேசுவோம்
No comments:
Post a Comment