Saturday, January 19, 2019

வாதாபி கணபதி-2

வாதாபி கணபதி -1
உத்ராபதி - 2
பரஞ்சோதி - திருவெண்காட்டு மங்கை இனிதே வாழ அவர்களை ஆட்க்கொள்ள முடிவு செய்த சிவபெருமான் துவங்கினார் தன் திருவிளையாடலை.
சீராளன் 5 வயது மகனாய் பாடசாலைக்கு சென்ற இருக்க - ஒரு குறிப்பிட்ட நாளில் மாகேஸ்வர பூஜை எங்கு தேடியும் அடியார் ஒருவரும் கிடைக்கவில்லை. (சிவனடியாருக்கு அமுது படைப்பதை மாகேஸ்வர பூஜை என்பார்கள் - சிவபெருமானே அடியார் ரூபத்தில் உணவு உண்ணுவதாக கருதி அடியாருக்கு பாதம் கழுவி தூப தீபம் காட்டி அவர் அமுது உண்ணுகையில் விசிறி கொண்டு வீசூதல் போன்ற மரியாதைகளை செய்வது)
பரஞ்சோதியார் அடியாரை தேடி ஊர் முழுவதும் அலைந்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பரஞ்சோதியார் இல்லம் தேடி பைரவ கோலமாக சிவபெருமான் பரஞ்சோதியார் இல்லம் தேடி வந்தார்.
வீட்டில் திருவெண்காட்டு மங்கை மற்றும் சந்தனநங்கை என்ற பணிப்பெண் ஆகியோர் இருக்க -
வீட்டில் யார் என குரல் - அடியாரோடு வருவார் என பதி பரஞ்சோதியாருக்காக வாசல் நோக்கிக் காத்திருந்த திருவெண்காட்டு மங்கை, வாருங்கள் சுவாமி - நாங்கள் புண்ணியர்களானோம் - வாருங்கள்... என் கணவர் அமுது பூஜை செய்ய அடியார் தேடிச் சென்றுள்ளார் - வந்து அமருங்கள் - அவருக்கு தகவல் சொல்லி விடுகிறேன் - இப்போது வந்து விடுவார் - நீங்கள் வந்து அமருங்கள் - என்று சொல்ல - ஈசன், யாம் உத்திராபதி - பெண்கள் தனித்திருக்கும் இல்லங்களில் நுழைவதில்லை - கணபதீச்சரத்து ஆத்தி மரத்தடியே காத்திருப்போம் - உன் கணவர் வந்த பின் சந்திக்கச் சொல் என புறப்பட்டார்.
உத்திர - என்பது வடதிசை - உத்திர என்பது மேல் பகுதி - விண்ணுலகுக்குப் பதி - அந்த விண்ணுலகை அடைய ஆள் சேர்ப்பு ஊருக்கு வடக்கே இருக்கும் - அந்த சுடலைப் பதி என்பதை தெளியலாம்.
நரப்பசுங்கன்று - 3 ஆம் பகுதியாக!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...