Monday, April 29, 2019

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்-2

ஹ்ருஷ்ய ச்ருங்கர் ரோம பாதர் ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரர் உபய பாரதி வித்யாரண்யர் (வித்யா சங்கர தீர்த்தர்) ஹரிஹரர், புக்கர், விஜயநகர சாம்ராஜ்யம், ஹொய்சாளர்...துங்கபத்ரா நதி...
நிறைய பெயர்களை முதலிலேயே சொல்லி விட்டேன்... காரணம், எழுதும் போது ஆர்வக்கோளாறு காரணமாக யாரையாவது நினைவு கூர மறந்து விட்டால்?!
துங்கன்/ பத்ரன் என்ற இரண்டு புண்யாத்மாக்கள் பெயரில் புனித நதி... இதன் கரையில் அமைந்து இருப்பதே மந்த்ராலயமும் கூட... அங்கே நதியின் ஒரு பக்கம் கர்நாடகா ஒரு பக்கம் ஆந்திரா...
நதியில் நடந்து பயணித்தால் நதியின் ஆழம், அகலம், பழமை புரியும்... பாறை படிவுகள் எல்லாம் மணல் திட்டுக்களாக இருந்து கால போக்கில் நீரின் தொடர் அழுத்தத்தால் கடினம் பெற்று இருப்பதாக நான் உணர்ந்தேன்.
ரோம பாத மன்னன் ஆட்சிக்காலத்தில் மழை இல்லாமல் போக, அப்போது அறிஞர்கள் ஆலோசனைப் படி பெண் வாடை/ ஸ்பரிசம் இல்லாமல் வாழ்ந்து வந்த ஹ்ருஷ்ய ச்ருங்கர் - ரோம பாத மன்னன் உத்திரவுப்படி சில ஆண் வேடமிட்டு பெண்களால் நைச்சியமாக கவர்ந்து அழைத்து வந்து - ஹ்ருஷ்ய சிருங்கர் பாதம் பட்டு மழை பெற்ற பூமி...
அந்த ஹ்ருஷ்ய ச்ருங்கர் தவத்தால் இந்த புண்ய பூமி சிருங்கேரி என்று அறியப்பட்டு... இங்கே பாம்பின் நிழலில் தவளை இளைப்பாற கண்டு, ஆதி சங்கரர் இங்கே ஒரு ஸ்ரீ மடம் ஸ்தாபிக்க நினைத்து 12 ஆண்டுகள் இங்கே தங்கி சீடர்களுக்கு உபதேசித்த ஸ்ரீங்கேரிக்கு சாரதா மாதாவாக வந்து அருள் பாலித்தது அன்னை சரஸ்வதி தேவியே.
ஒவ்வொரு அவதாரத்திலும் மும்மூர்த்திகள் பங்களிப்பு கட்டாயம் உண்டு... ஸ்ரீ பரமேஸ்வரன் அம்சமான சங்கரருக்கு எப்படி கோவிந்த பாதர் (விஷ்ணு) குருவாக வந்து ஆட்கொண்டாரோ, அதுபோல நான்முகக் கடவுள் ப்ரம்மா மண்டன மிஸ்ரர் என்று வந்து சீடனாக ஆட்பட்டார்.
மண்டன மிஸ்ரர் - ஆதி சங்கரர் வாதம் நடந்த சமயத்தில் மண்டன மிஸ்ரர் (ப்ரம்மா அம்சம்) அவருடைய மனைவியாகிய உபய பாரதி யை (சரஸ்வதி தேவி அம்சம்) ஒரு கடத்தில் ஆவாகனம் செய்து அதை திரைக்கு பின் நிறுத்தி கேள்வி/ வாதம் தொடர.... இதை தனது ஞான திருஷ்டியில் உணர்ந்த சங்கரர் - வாதில் வென்று... பின் உபய பாரதியை தன்னோடு அழைத்து வந்து கர்ம பூமியில் ஞான தீபம் ஏற்றி வைக்க நினைக்க... சரஸ்வதி அன்னையிடம் அவ்வண்ணமே கோரிக்கை வைக்கிறார்!
(சங்கரர்- மண்டன மிஸ்ரர் _ உபய பாரதி வாதம் மிகவும் சுவையானது... அது குறித்து வித்யாரண்ய ஸ்வாமிகள் - ஹரிஹரர் புக்கர் - , பொருள் வேண்டி - மறு ஜென்மம் - துறவு மேற்கொள்ளல்- விஜயநகர சாம்ராஜ்யம் - 14 நூற்றாண்டு இவை குறித்து வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் - இங்கே சிருங்கேரி மடம், சாரதா மாதா, நகர்வு குறித்து மட்டுமே பேசலாம்)
உபய பாரதி - கேரளம் நோக்கிய மலை பயணம் - சலங்கை அடுத்த பதிவில் தொடரும்.... 
Image may contain: outdoorImage may contain: 1 personNo photo description available.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...