70 களில் மயூரத்தில் எங்கள் வீட்டில் மாடுகள் இருந்தது.
தரங்கம்பாடி சாலையில் மாட்டாஸ்பத்திரி... எங்கள் வீட்டு மாடுகளை அங்கே ஒட்டிச் சென்று கர்ப்பம் தரிக்க ஊசி போடுவோம்...
ஆண் பெண் கூடுதல் இல்லாமல் கர்ப்பம்...
எல் ஆர் ஈஸ்வரி பாடல் ஒன்று.... இதுவரை ஆண்களை தொட்டதில்லை, இரண்டுக்கும் மேல் நான் பெற்றதில்லை... என்று ஒலிக்கிறது...
முடியுமா?!
முடியும்.... என்பதை மாட்டாஸ்பத்திரியில் தெரிந்து கொண்டேன்...
காலை 7 மணிக்கு மாடுகளை ஓட்டிச்சென்று வரிசையில் நிறுத்துவோம்... இருப்பதில் பெரிய மாடு ஒன்றை சினை கூண்டில் நிறுத்தி வெளிநாட்டு காளை யை பாய விடுவார்கள்....
அப்போது வெளிப்படும் வீரியத்தை flask போல இருக்கும் ஒரு குடுவையில் சேகரித்து...
அந்த சிறு அளவு வீரியத்துடன், நல்ல கோழி முட்டைகளின் வெள்ளை கருவை கலந்து அதை சிறு சிறு அலகுகள் ஆக்கி, அன்று வரிசையில் வரும் மாடுகளின் கர்ப்ப வாசலில் நீண்ட கண்ணாடி குழாய் மூலம் சேர்ப்பார்கள்...
மாடுகள், சினை பிடிக்கும்...
இங்கே நாம் கவனிக்க வேண்டியது, ஆண் பெண் நேரடி தொடர்பு இல்லை... முட்டையின் வெள்ளை கரு...
சினை கரு முட்டைகளை ஒரு சோதனை குழாயில் process செய்து...
இதை போலவே நம் விஞ்ஞானம் வாடகை தாய் என்ற அறிவியலை... அதையும் செயற்கை முறையில், உயிர் தொடர்பு இல்லாமல் செய்து காட்டினார்கள்....
முட்டையின் வெள்ளை கருவுக்கு பதிலாக, மூலிகைகள் கலந்த பசு நெய், உயிர் கலப்பு உடைய பெண்மையின் கருப்பைக்கு பதிலாக, மட்பாண்டங்கள்... வாடகை தாயாக...
வீரியத்துக்கு மாற்று, பாதி வளர்ந்த பிண்டம், காந்தாரியின் வயிற்றில் இருந்து வெளிப்பட்டது...
ஆம், மஹாபாரதத்தில் துரியோதனாதிகள் பிறப்பு பற்றிய சம்பவம்...
100 பேர் கொண்ட துரியோதனாதிகள், 5 பேர் கொண்ட பாண்டவர்களால் வெல்லப்பட்ட ஜனன காரண ஸூக்ஷமம் ஒன்றும் இங்கே...
இந்த சம்பவ்த்தை விரிவாக பார்க்கும் முன்பு, திருக்கருக்காவூர் வரை போய்விட்டு வரலாமே!!!
No comments:
Post a Comment