யாரடா தமிழன் இங்கே?!
ஸ்ரீரங்கத்து ஐயங்கார் ஒருத்தருக்கு 60. முதல் நாள் மதியம், 63 பெண்கள் வரிசைகட்டி வந்தார்கள், பச்சை நிற சீருடை நூல் சேலை... மடிசார்... பெரும்பாலோனோர் வசதிக்கு கழுத்திலும் காதிலும் கையிலும் மின்னியது சொல்லும்...
வாசலில் குங்குமம், ஒரு துண்டு மல்லிகை பூ கொடுத்து வரவேற்றனர், குறித்த நேரம், முதலில் மொத்தமாக ₹300 நன்கொடையாக தலைவியிடம் வழங்கப்பட்டது.
சீரான குரலில் எல்லோரும் ஒருமித்த குரலில் - வீட்டு ஹாலில் இடமில்லை... நாங்கள் ரேழி தாண்டி வாசலில் இருந்தோம்... எங்களுக்கு வார்த்தைகள் புரியும் தெளிவில்.... 90 நிமிடங்கள்... ஸ்லோகங்கள்... நிறைவாக பாசுரங்கள்... தமிழில்.... தமிழில்... தமிழில்....
எல்லோருக்கும், 2 வெற்றிலை, ஒரு துண்டு பட்டினம் பாக்கு, ஒரு பூவன் பழம், a token of ₹10... இடையில் ஒரு முறை தாக சாந்திக்கு ஏதோ ஒரு பானம்...
திராவிடன் வீட்டு திருமணத்தில் மெஹந்தி _ லைட் மியூசிக் _ get together...
மாலையில், தலா 5 ப்ரம்மணர்கள் கொண்ட ரெண்டு டீம்... பஞ்சகச்சம், நெற்றித் திருமண், சாஸ்த்ரோக்தமாக...
ஒரு பக்கம் வேத கோஷம், இன்னொரு பக்கம் திவ்விய பிரபந்தம்... 90 நிமிடம் ... simultaneously...
மாலையில் சாலிக்ராமத்துக்கு பூஜை, தீப ஆராதனை... பிரசாத நைவேத்தியம்...
சோறுதான் தமிழனுக்கு முக்கியம்... அதில் ஸூக்ஷமம்... வடமொழி வழி பாட்டுக்கு dry fruits... costly...
திவ்யபிரபந்த வழி பாட்டுக்கு, வெல்லச் சர்க்கரை, பொட்டுக்கடலை, நிலக்கடலை, வாழைப்பழம்... எல்லாமே தென்னிந்திய பாரம்பரிய எளிய... உணவு...
திராவிடன் வீட்டு கல்யாணமோ, கருமாதியோ, திரண்டு குளியலோ சாப்பிடப் போனால், பீஸா, பர்கர், ஸ்பிரிங் ரோல், டக்கிலோ, கபாப், கொக்கா மக்கா என்று சைனீஸ் food...
ஸ்ரீ ரெங்கநாதர் நகர்வலம் பற்றி கொஞ்சம் தெளிய வச்சி சொல்கிறேன்....
சரி, கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியன் காலம் என்ன என்பதை குறித்து 4இல்... பேசலாம்....
No comments:
Post a Comment