Friday, April 5, 2019

மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதி
வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மனு ஸ்மிருதி.
மனு ஸ்மிருதி யின் விதிமுறைகள் சில அவை எழுதப்பட்ட காலகட்டத்திற்கு ஏற்ப சரி என்று கருதப்பட்டாலும் பெரும்பாண்மை விதிகள் எல்லா காலத்துக்கும் ஏற்புடையது...
இன்று பல சர்ச்சைகளில் / விமர்சனங்களில் சிக்கி இருக்கும் ஒருதலைபட்சமாக எழுதப்பட்டுள்ளது என்ற குற்றம் சாட்டப்படுகிறது.
ஹிந்து தர்மத்தை தூற்ற எல்லோரும் கையிலெடுத்து தங்கள் தரப்பை வாதிட மனு ஸ்மிருதி யை பற்றி கூக்குரலிடுவர்.
ஆனால் இவர்கள் செவி வழியாக கேட்டவற்றையே பற்றி பேசுவார்களே தவிர யாரும் மனு ஸ்மிருதியை பூரணமாக படித்தது கிடையாது.

ஸ்ருதி என்பது வேதங்கள் - காதால் கேட்டு / ஓதி பயில்விக்கப்பட்டது.
சில சப்தங்களை எழுத்துக்களில் வடிக்க முடியாது - சிவாஜிகனேசன் நடித்த தெனாலிராமன் திரைப்படத்தில் பன்டிதர் ஒருவரை சிவாஜி ஒரு பாடல் பாடி அதை எழுதச் சொல்லி தோல்வியடையச் செய்வார்....
ப்ரு ப்ரு என மாடுகள் ஓட்டி...
ஜூ ஜூவும் என .... வரும் அந்தப்பாடல்... அந்தப் பாடலில் அவர் குரலுக்கு என்ன என்ன எழுத்துக்களை போட்டு நீட்டி குறுக்கி எழுத முடியும்...
அது போலவே காதால் கேட்கப்படும் சப்தங்களுக்கு எப்படி எழுத்து வடிவம் கொடுக்க முடியும்?!
குறிப்பாக சாம வேதத்துக்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியுமா?!
ஸ்மருதி என்பது வேதங்களுக்கு மனு உள்ளிட்ட வ்யாக்யான கர்த்தர்கள் அவர்களின் உயரத்தில் அவர்களின் உயர்ந்த புரிதல்களில் எழுதப்பட்டதே ஸ்மிருதி...
ஸ்மிருதி யை புரிந்து கொள்ள நாம் அந்தக் காலச் சக்கரத்தில் - அந்தக் உயரத்தில் நாம் பயணிக்க வேண்டும் - அதை விட்டு விட்டு....
படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என பிற்காலத்தில் சிந்தனா உயரம் குறைந்த அறைகுறை மனிதர்களின் புரிதலுக்கேற்ப எழுதப்பட்ட உளறல்களை அப்படி மனு ஸ்மிருதி வசனமாக / வாக்கியமாக படித்து நமது புரிதலுக்கு ஏற்றார் போல விமர்சிப்பது சரியா???
Top of Form

உங்களுக்குத் தெரியுமா?!
1330 திருக்குறள் - இவை எல்லாமே திருவள்ளுவர் எழுதியது அல்ல...
திருமூலர் 3000 ஆண்டுகள் தியானத்தில் இருந்து பாட்டெழுதினார்... 3000 பாடல்களுமே அவர் எழுதியது இல்லை...
தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் சொல்வது - குறிப்பாக கடவுள் வாழ்த்து ஐந்து கரத்தனை யானை முகத்தனை திருமூலர் பாடல் இல்லையாம்.... எழுத்து நடை வித்யாசமாம்...
கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் படித்தவர்கள் புரிவார்கள்.... அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் - பகவன் ஜைன பெயராம்... அப்படியென்றால் திருவள்ளுவர் ஜைனரா?
அவரே எழுதியது அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை - அவ்வுலகு - சொர்க்கம் - இந்து நம்பிக்கை....
தமிழ் பகுத்தறிவு கம்முநாட்டிகள் ஒரு முடிவுக்கு வரட்டும்....
சரி.... தேவார திருவாசகம் உள்ளிட்ட 12 திருமுறைகளே முழுமையாக நம்மிடம் வந்து சேரலை.... செல்லரிக்கவிட்டது நமது தாத்தனுக்கு தாத்தனுக்கு........ தாத்தன்....
அப்புறம் எப்படி நமக்கு யோக்கியதை இருக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்கு முன் எழுதிய ஸ்ருதியை விமர்சிக்க!
பல நூறு ஆண்டுகள் முன் வாழ்ந்த ஸ்ருதியை அடிப்படையாக வைத்து நம் முன்னே பழுவில்லாத அறிவிலர் எழுதிய ஸ்மிருதியை விமர்சிக்க?....
சரிடா, நாய்களே.... சொரியான் ஏன் சுதந்திரம் வேண்டாம் என்றான்? அப்படியே ப்ரிட்டிஷ் ஏகாதிபத்யம் சுதந்திரம் கொடுத்தாலும் அதை ஒன்றுபட்ட மதராஸ் குறிப்பாக தமிழகத்துக்கு சுதந்திரம் தர வேண்டாம்.... ( 1961 ல் பொருக்கி நேரு பிரிக்குமும், மொழிவாரி மாகாணத்துக்கு முன் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா)...
மேற்படி பிரிவினைகளும் நடந்தது - சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன அம்மண சங்க நிர்வாணன் சொரியான் ரோம (தாடி) செமி (அரை கிருக்குப் பயல்) ஈரோட்டு மந்தை கிழட்டுப்பய வியாக்யானத்துக்கு உங்களிடம் இன்று விளக்கம் இருக்கா?
50/60/70 ஆண்டுகள் முன் சொன்னதற்கு விளக்கமில்லாத பயலுக இன்று 1000 ஆண்டுகள் முன் எழுதினதை விமர்சிக்க என்னடா தகுதி இருக்கு?
மனு ஸ்மிருதி குறித்த அறிவார்ந்த தத்துவ ஆராய்ச்சி பதிவு 4ல் தொடரும்
Top of Form

ஒரு விஷயம் - நபர் குறித்து நாம் பேசும் போது, பேசப்படும் விஷயத்துக்கு நிஜமாகவே அங்கு வாய்ப்புகள் உண்டா என நாம் யோசிப்பது கிடையாது.... அது போலத்தான் மனுஸ்மிருதி குறித்தும் நாம் யோசிக்காமல் பேசுகிறோம்.
துளசி தாசர் ஹிந்தியில் ஒரு பாடல் எழுதியதாக ஒரு புரட்டு... அந்தப் பாடலில்
டோல் கம்வார் சூத்திர பஹூநாரி சப்ஜாடன் தாடன்கே அதிகாரி
மேளம் பண்பில்லாதவர் சூத்திரன் பெண்கள் அடிபடவே இருக்கிறார்கள் ...
துளசிதாசர் போன்ற பரம பாகவதர் இப்படி எழுதியிருக்க வாய்ப்பு உண்டா என நாம் யோசிப்பதில்லை...
இன்று எழுத்துக்களுக்கு காப்பி ரைட் உண்டு.... அந்தக்காலத்தில்? ஓலைச் சுவடிகளை - எளிதில் அழியக் கூடியவை... ஆக விட்டுப் போன பக்கங்களுக்கு இடைச் சொருகள் ஏற்படுத்தப் பட வாய்ப்புகள் அதிகம்....
முதலில் எழுதியவருக்கும் இடைச் செருகள் எழுதியவருக்கும் காலம் சிந்தனை வித்யாசம் இருக்குமா இல்லையா?
காப்புரிமைகள் இல்லாத காலத்தில் இடைச்செருகள் தவிந்க்கப்பட என்ன பாதுகாப்பு இருந்தது
.....
வள்ளலார் சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றில் உள்ள சம்பவம் ஒன்று...
ஒருவர் தானே எழுதிய பாடல் ஒன்றை சித்தர் பாடல் ஓலைச்சுவடி என கொண்டு வந்து இராமலிங்க ஸ்வாமிகளிடம் தருவார்... அதை படித்துவிட்டு வள்ளலார் இது குப்பை - யாரோ இலக்கணம் தெரியாது கத்துக்குட்டியின் பிதற்றல் என்று சொல்லி தூர எறிய .... வந்தவர் தனது கபடத்தை ஒப்புக் கொண்டு மன்னிக்கக் கோருவார்...
கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று எண்ணிரெண்டு பதினாறு வயது என்ற பாடல் ஒன்று...
இதை மேலோட்டமாக பார்த்தால் 8 (எண்) இரண்டு அதாவது 16 வயது பெண் என பொருள்படும்....
ஆனால் அவர் இந்தப் பாடல் எழுதிய காலகட்டத்தில் சாவித்திரி பத்மினி தேவிகா என்ற எல்லா முன்னணி நடிகைகளுக்கும் வயது 30க்கு மேல்... இதை மனதில் கொண்டே அவர் எண் இரண்டு பதினாறு வயது அதாவது 2×16=32 வயது என்று பாடல் எழுதினாராம்...
கட்டுப்பாடில்லாத வாழ்வு/ பல மனைவியர் / குடிப் பழக்கம் உடைய நம் காலத்தில் வாழ்ந்த கண்ணதாசனுக்கே இப்படிப்பட்ட வார்த்தை /அர்த்த ஜாலம் இருந்ததே. பல ஆயிரம் வருடத்துக்கு முன்பு ஆன்மீக அருளாளர்களின் மன நுட்பம் எத்தனை உயர்ந்ததாக இருந்திருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டாமா?

மனு ஸ்மிருதி அத் 3 ஸ்லோகம் 56
பத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாஹா...
யத்ரை தாஹா து பூஜ்யந்தே சர்வாஹா தத்ரபலாஹா க்ரியாஹா
எந்தக் குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளனவோ அந்தக் குடும்பத்தில் புனிதத்துவம், நற்செயல்கள், நல்ல மக்கட்பேறு, நலன்கள் ஆகியன யாவும் ஒரு சேர அமையப் பெற்று அங்கு இறையருள் பரிபூரணமாக நிலவும். பெண்டிருக்கு மரியாதை இல்லாத குடும்பத்திலோ எந்தச் செயலும் விளங்காது போகும் என்பது மேலே சொன்ன ஸ்லோகத்தின் (வாக்கியத்தின்) பொருள்.
அத் 9 வாக்கு 130 - புத்ரேண துஹிதா ஸமா! இதன் பொருள் மகன் மகள் இருவரும் சமம்...
அத் 9 -192 ல் தந்தையின் சொத்தில் மகன் மகளுக்கு சம உரிமை உண்டு என்கிறது மனு ஸ்மிருதி.

குணவியல்பு, ஈடுபாடு, தொழில் நாட்டம் அல்லது தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் (பண்பிலும் செய்தொழில் நாட்டம் அல்லது தகுதி ஆகியவற்றில் பிராமணராக இருக்கும் ஒருவருக்குப் பிறந்திருந்தாலுங் கூட) ஒரு பிராமணர் சூத்திரர் ஆகி விடுகிறார்.
அதேபோல், (குணவியல்பு, செய்தொழில் நாட்டம் அல்லது தகுதியின் அடிப்படையில் சூத்திரராக உள்ள ஒருவருக்குப் பிறந்த) சூத்திரரும் (குணவியல்பு, செய்தொழில் நாட்டம், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில்) பிராமணர் ஆகிவிடுகிறார்.
இது போலவே க்ஷத்ரியர் வைசியர் வர்ண மாற்றத்துக்கும் வாய்ப்புள்ளது என்பதே அத் 1 வாக்கு 65
சூத்ரோ ப்ராஹ்மணதாம் ஏதி
ப்ராணமஷ்சை தி சூத்ரதாம்
க்ஷத்ரியாத் ஜாதமேவம் து
வித்யாத் வைஷ்யாந்ததைவ
குணவியல்பு, ஈடுபாடு, செய்தொழில் ஆகியவற்றின் விளைவாக வர்ண மாற்றம் ஏற்படுகிறது என்பதை விவரிப்பதற்கென்ற மனு ஸ்மிருதியில் 12 வாக்குகள் உள்ளன. அவற்றுள் ஒரு வாக்கு கூட பிறப்பின் அடிப்படையில் வர்ணம் அமைவதாகக் கூறவில்லை.
மானார்ஹஹ சூத்ரோ அபி தஷமீங் கதஹ என்கிறது மனு ஸ்மிருதி அத்யாயம் 2ல் உள்ள 137 வது வாக்கு...
சூத்திரர்களில் முதியோராக இருப்பவர்களுக்கு பிற மூன்று வர்ணத்தாரும் முதல் மரியாதை தரக் கடமைப்பட்டவர்கள்...
சூத்திரர் நீங்கலாக உள்ள மற்ற பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணத்தாரில் - சிறந்த பண்புக்கும் குணவியல்பு உடையவர்களே இது போன்ற மரியாதைக்குரியவர்கள் என்பது இதன் பொருள்.
மனு ஸ்மிருதியில் எத்தனை வாக்குகள் உள்ளது - அதில் ரியல் எத்தனை ரீல் எத்தனை என்பது குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு தெரியாத உன்மைகளை

மனு ஸ்மிருதியை ஆழமாக ஆராய்ந்து சுரேந்திர குமார் ஆச்சார்ய என்பவர் ஹிந்தியில் ஒரு உரை எழுதியிருக்கிறார்...
2685
வாக்குகள் உள்ள மனு ஸ்மிருதி யில் 1471 வாக்குகள் இடைச் செருகல்கள் அல்லது பிற்ச்சேர்க்கை
வெறும் 1214 அதாவது 45% வாக்குகள் மட்டும்தான் அசல்.
பாதிக்கு மேல் தண்ணி...கலந்த பாலே மனு ஸ்மிருதி...
போலிகள் 1471 ம் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு காலத்தில் உள் நுழைத்தவை...
சுரேந்தர குமார் ஆச்சார்ய உறுதியாகச் சொல்வது ... மனு ஸ்மிருதியில் வர்ண பேதம் ஆண் பெண் உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் வாக்குகள் இடைச்செருகள் தானாம்.
நம்மூர்காரர்கள் நாம சொன்னா கேட்கவே மாட்டான்... வெளிநாட்டுக் காரன் சொல்லனும்...
பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் வூலர், ஜெ.ஜென்ரல் கீத், மக் டொணால்ட் ஆகிய மூவருமே ஒப்புக்குக் கொள்வது மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்களே அதிகம் என்பதை

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...