Monday, March 12, 2018

குலதெய்வம்-பகுதி-3

வடநாட்டில் / கர்நாடகாவில் கூட ஜாதி வம்ச பெயர்களோடு கூடி இருப்பதால்  .... குல தெய்வ வழிபாடு, தர்மத்தின் மீது நம்பிக்கை இன்றும் நிலைத்து இருக்கிறது....

லிங்காயத்/ கவுடா/ பட்/ஹெக்டே என்று... கர்நாடகாவில்... வடக்கே, குப்தா, யாதவ், சர்மா, திரிபாதி... இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு குலதெய்வத்தின் பின்னால் ஒருங்கிணைந்து நின்றவரை பிரச்சனைகள் இல்லை....

யாதவர்கள், முலாயம்/ லாலு என்று பிரிந்த போது?!

பிரகாஷ் சிங் பாதல் / சுர்ஜீத் சிங் பாதல் சீக்கியர்களாக இருந்தவரை பிரச்சனை இல்லை... தலைவர்கள் ஆன பின்?!

திக் விஜய் சிங், ராஜ்நாத் சிங் சரண் சிங், சிவராஜ் சிங் சர்தார்ஜி க்கள் அல்ல... ஆனால் ஏதோ ஒரு வம்சம்/ குல தெய்வத்தை நம்பியவரை மனிதர்கள்... தலைவர்கள் ஆன பின்?! அரசியல் வாதிகளாக...

பகுதி 2 இல் பூசாரிகளை/ வழிகாட்டிகளை வழிபட்டு இலக்கை மறந்தோம் என்று சொல்லி இருந்தேன்...

இது ஏதோ இந்து சந்நியாசிகள் மடாதிபதிகளை எதிர்த்து பேசும் ஒரு திரித்து விடும் செயல் என்று யோசிக்க வைக்கிறதா?!

ஆம், நான் சிருங்கேரி/ காஞ்சி மடங்களிடையே உள்ள துவேஷம் குறித்தே பேசுகிறேன்...

ஆதி சங்கரர் சொன்ன அத்வைத சித்தாந்தப் படி சாரதா/ காமாக்ஷி எல்லோரும் ஒன்றுதானே.... பரம் பொருள் ஒன்றே பலவல்ல... சத்தியம் ஒன்றே இரண்டல்ல....

ஹரி சிவன் என்ற வஸ்து இரண்டு என்பதில் என்ன பெருமை இருக்கிறது... இரண்டில் ஒன்று.... 99% 1% என்றால் கூட,  முழுமை என்பது கேள்விக்குறி ஆகிவிடும்...

ஹரி சிவன் என்பது பாட பேதம்! அதே போல சாரதா/காமாக்ஷி என்பது காட்சி பேதம்...

மூலத்தை விட்டு விட்டு மடங்களை பின் பற்றி இங்கே யார் பெரியவர் என்று சண்டை இட்டுக்கொண்டு!!!

திருவண்ணாமலை....

இங்கே கிரி வல பாதையில் சேஷாத்திரி ஸ்வாமிகள்/ ரமணர்/ யோகிராம் சூரத் குமார் (கொஞ்சம் உள்ளே) என்ற 3 சாதுக்கள்/ யோகிகள் சமாதிகள் உள்ளது...

இந்த சமாதி கோவில்கள் உள்ளே வந்து போகும் மக்கள் எண்ணிக்கையில் உள்ள மாறுபாடு நமக்குள் இருக்கும் பேதத்தை நமக்கு நன்றாக புரிய வைக்கும்...

கிரித்தவன் அல்லது முஸ்லீம்.... ஏற்றுக்கொண்ட கொள்கை /தலைமை ரீதியாக மோதிக்கொண்டாலும் கடவுள் என்று வரும்போது ஜீஸஸ்/ அல்லா மட்டுமே!

ஹிந்து தர்மத்தில் பிரம்மம் ஒன்றே...அதுவே புரித்தலுக்காக பேதங்களோடு ஆணாகி பெண்ணாகி அலியாகி நின்றது... ஆனால் அப்படி பரம் பொருள் அல்லது பிரிந்து நின்ற பிரம்மத்தை குலதெய்வம் என்று பின் பற்றி வாழ்வதை மறந்து தனி மனிதன் பின்னால் / பூசாரிகள் பின்/ வழிகாட்டிகள் பின்னர் போக தொடங்கி விட்டோமே!

அஷ்டவக்கிர மகரிஷி கதையை 4 இல் தொடருவோம்.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...