Monday, March 12, 2018

குலதெய்வம்-பகுதி-9

குலதெய்வம் என்று துவங்கி, கோத்திரம் - ஜானவாசம் - சமூக நல்லிணக்கம் - சுவீகாரம் என்று பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.....

என்று புகார் வருகிறது...

நல்ல விஷயங்கள் தானே.... பேசுகிறோம்... இருந்தாலும், இனி அந்த நபருக்கு whats இல் அனுப்புவதை தவிர்கிறேன். நல்லது.

இனி,

கோத்திரம் விட்டு கோத்திரம் ஸ்வீகரிப்பதால் குலதெய்வம் மாறியது கூட பிரச்சனை அல்ல.... ஆனால் அக்னி மந்திர பூர்வ சடங்கு அழிந்து போனதே பிரச்சனை...

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது கிடையாது...

ஆத்ரேய கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் பாரத்வாஜ கோத்திரத்தில் இருந்து சுவீகாரம் பெறுகிறார்....

இப்போது, சுவீகாரம் வந்தவர் ஆத்ரேய கோத்திரமாக கருதப்படுவார்....

அடுத்த தலைமுறையில் இவர் வீட்டில் திருமணங்கள் பாரத்வாஜ கோத்திரத்தில் நடக்க வாய்ப்புகள் உண்டு....  இது சாஸ்திரப்படி தவறுதானே....

திருமண சடங்குகள் நடக்கும் போது பெண்ணின் பிரவரம் சொல்லி கோத்திரம் மாற்றுவார்களே அது போல, அக்னி குலதெய்வம் சாட்சியாக மந்திர பூர்வமாக சிறு குழந்தையாக இருக்கும்போதே சுவீகாரம் எடுக்கப்பட வேண்டும்... அது மட்டுமே உத்தமம்.... வளர்ந்து பின் குடும்ப அழுத்தம்/ சொத்துக்காக தத்து எடுப்பது கேடுதான்...

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.... வளர்ந்த பின் ஸ்வீகரிப்பது குல ஆச்சாரங்களை காப்பாற்றாது....

சரி, எது எப்படியோ! என் குலதெய்வம் எது என்று தெரியவில்லை... நான் என்ன செய்வது?!

10இல் பேசலாம்!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...