ஹனுமான் மகன் மகரத்வஜன்
வியர்வை வழி குழந்தை...
வியர்வை வழி குழந்தை...
ச்சென்ட், perfume இதை நாம் பூசிகொண்டால் உடல் துர்நாற்றம் தவிர்க்கப்படுகிறது... சில மணி நேரங்களுக்கு... உடல் துர்நாற்றம் காரணம், சுற்றுச்சூழல் மற்றும் குறிப்பாக நமக்கு உள்ளே இருந்து சுரக்கும் வியர்வை...
இப்போதும் சர்க்கரை வியாதி உள்ள பலர், தங்களுக்கு நோய் இருப்பதை, தான் மிகவும் இனிப்பானவன் என்று நாசுக்காக அறிமுகபடுத்தி கொள்வது உண்டு... ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை / உப்பு வியர்வையில் வெளிப்படுவது இயற்கை... அதனால்தான் வியர்வை உப்பு கரிக்கிறது..
(ரத்தமும் தண்ணீர், வியர்வையும் தண்ணீர்... பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரின் அம்சம்)
(ரத்தமும் தண்ணீர், வியர்வையும் தண்ணீர்... பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரின் அம்சம்)
வியர்வையில் சர்க்கரை வெளிப்படுமா? கொஞ்சம் வித்யாசமாக பார்ப்போம்...
மது குடிப்பவர்கள் ரத்தம் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் சேகரிக்கபடாது... என்று ஒரு விதி இருந்தது... பேரிச்சை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் ஹீமோகிளோபின் அதிகம் ஆகிறது...
ரத்தமே மனித விந்துவின் மூலம்...
ரத்தத்தில் உள்ளது உயிர் உற்பத்தியில் பிரதிபலிக்கும்... இதை தான் ரத்த பாசம், ஜீன், சாதி வழக்கம்...(ரத்தத்துக்கும் சாதி வந்துள்ளதே) என்றெல்லாம் சொல்கிறோம்...
எல்லாம் சரி சார்.. ரத்தத்துக்கும் வியர்வைக்கும் என்ன சம்பந்தம்...?
நாம் சாப்பிடுவது எல்லாம் ஜீரணிக்கப்பட்டு அந்த உணவில் இருக்கும் உயிர் சத்துக்கள் எல்லாம் ரத்தத்தின் மூலமே உடலின் தேவையான பகுதிகளுக்கு இயக்க சக்தியாக கொடுக்கபடுகிறது என்பது இயற்கை... நாம் கண்டுகொண்ட விஞ்ஞான உண்மை...
வீட்டில் உடல் உபாதை, வாயு தொந்திரவு காரணமாக மருத்துவர் அறிவுரைப்படி - பூண்டு அதிகமாக சேர்த்து கொள்கிறோம்... A apple a day ... keeps doctor away... a garlic a day keep everyone away...
இங்கே, ஒரு சுவையான செய்தி பாப்போம்... பூனைக்கு பால் தவிர வேறு எதை பிடிக்கும்.... எனக்குத் தெரிந்து எலி... எலியில் பல வகை உண்டு... அதில் நாம் ஸ்ரீ விநாயகர் வாகனமாக மூஞ்சூறு என்ற எலியை சொல்கிறோம்.. இதுவும் சாதாரண எலி போலவே இருக்கும்.. ஆனால், இந்த மூஞ்சூறு என்ற எலியை பூனை தொடவே தொடாது... காரணம்... பூனை தன்னை துரத்தும் போது இந்த மூஞ்சூறு வாயு பரிசனம் செய்யுமாம்... அந்த வாடை பூனைக்கு பிடிக்காதாம்... பூனை விலகி ஓடிவிடுமாம்....
மேலே, நான் சொன்ன பூண்டு, அனைவரையும் நம்மை விட்டு விலகி இருப்பதும் இது போன்ற ஒரு காரணமே...
அதுமட்டும் அல்ல... பூண்டு உட்கொண்டால், அது நம் உடலில் இருந்து வெளிப்படும் சிறுநீர் மற்றும் வியர்வையில் அந்த வாடையை வெளிப்படுத்தும்...
ஆக, ஒரு சிலமணி நேரம் நம் உடலில் இருந்த பூண்டு நம் ரத்தத்தில் கலந்து வியர்வை, சிறுநீரில் துர்நாற்றம் ஏற்படுத்தி வெளியேறுகிறது...
ரத்தத்தில் உள்ளது - வெளிப்பாட்டில் (வியர்வையில்) பிரதிபலிக்கும் ... இப்போது மகரத்வஜன் பிறப்பை இன்னம் கொஞ்சம் நெருங்கி விட்டோம்...
No comments:
Post a Comment