மஹாபாரத போரில் வெற்றி பாண்டவருக்கே என துரியோதனன் போர் துவங்கிய அன்றே அறிவித்தது
முதல் நாள் போரில் பாண்டவர்களின் சேனை எண்ணிக்கை குறைவானதாக இருந்தபோதிலும் த்ருஷ்டத்யும்னனால் வஜ்ர வ்யூகம் வகுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமானதாக அமைக்கப்பட்டதை துரியோதனன் துரோணருக்கு சுட்டிக் காட்டுகிறான்.
போர்க்கலைகளை சொல்லிக் கொடுக்கும் துரோணருக்கு இதை பார்த்தவுடன் புரியாதா? துரியோதனன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
சரி, த்ருஷ்டத்யும்னன் குறித்து சொல்லுகையில் துரியோதனன் துரோணர் மனதில் கோபத்தை ஏற்படுத்த - பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன் என்று விளித்து - துரோணருக்கும் - துருபதனுக்கும் உள்ள பழைய பகையை நினைவூட்டுவதாக எண்ணி அதிகப் பிரசங்கியாக -
துருபதன் துரோணர் மீது உள்ள தீராத பகையை தீர்க்க யாஜர் மற்றும் உபயாஜர் என்ற ரிஷிகளை கொண்டு துரோணரை கொல்ல வேண்டி த்ருஷ்டத்யும்னன் (அவன் தங்கையாக திரெளபதி என்கிற க்ருஷ்ணை என்கிற பாஞ்சால தேசத்து பாஞ்சாலியையும்) தோன்றப் பெற்றார் துருபதர்.
துருபதனுக்கு போரில் துரோணர் கையாலேயே மரணம் சம்பவித்தது வேறுகதை. ஆனால் போரில் துரோணருக்கு மரணம் உறுதி, காரணம் துரோணரை கொல்லவவே (பழைய பகையில் பழிதீர்க்க) துருபதன் யாகம் மூலம் த்ருஷ்டத்யும்னனை பெற்றதைச் சொல்லிக்காட்டி துரோணரின் மரணத்தை முதல் நாள் போர்களத்திலேயே உலகறியச் சொல்லிவிட்டான் துரியோதனன்.
இதே போலவே சிகண்டியை பற்றி குறிப்பாலுணர்த்தி, பீஷ்மரை காப்பது நம் முதல் கடமை என்று சொல்லி, பீஷ்மரின் வீழ்ச்சியையும் போர் துவங்கும் முன்னரே துரியோதனன் வெளியே கொட்டி பாண்டவ வெற்றியை உறுதியாகச் சொல்லி விட்டான்.
No comments:
Post a Comment