கூத்தனூர் சரஸ்வதி கோவில், செட்டிப்புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் திருவெஹிந்திபுரம் கோவில் என எங்கு போனாலும் திரும்பும் திசை எல்லாம் பேனா கடைகள்...
இந்தியாவில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த பேனாக்கள் படிக்குப் பாதி இந்த 3 இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்ற அளவில் கொட்டிக்கிடக்கும்....
நம்மோடு தரிசனம் செய்யும் முன்னும் பின்னும் நிற்கும் மாணவ மாணவிகள் பெற்றோர் கைகளில் 100 க்கு 95% use and throw ball point pen கள்...
அர்ச்சகரிடம் கொடுத்து மூலவரின் ஸ்பரிசத்தோடு எடுத்துச் செல்லப்படும் இந்த பேனாக்கள் எத்தனை நாட்கள் மாணவ செல்வத்தோடு இருக்கும்....
ஒரு அறிவு ஜீவி சொல்லியது.... யார் சார் இந்த காலத்தில் இங்க pen உபயோகிக்கிறார்கள்?! நான் என் மகனுக்கு 1300 ரூபாய் கொடுத்து parkar ball point வாங்கி கூத்தனூரில் வைத்து பூஜித்து கொடுத்தேன்... ஒரிஜினல் refil மட்டும் மாற்றி உபயோகிக்கிறான்...
அடேய், அறிவு off ஆனவனே... பேனாவில் முக்கியம் எழுதும் nib/ tip/முனை... அதை அவ்வப்போது மாற்றி கொள்ளாமல் இருக்க இங்க pen தானே சௌகரியம்...
Ball point pen களில் பேனாக்கள் அழுத்திப் பிடிக்க வேண்டும்... வேகமாக எழுதலாம் என்பதை விட கிருக்கலாம்... ஆனால், ink pen களை நிதானமாக பிடித்து நிதானமாகவே எழுத வேண்டும்... எண்ணத்தின் வேகம் எழுத்தில் வராது... அப்படி என்றால் யோசித்துதான் எழுதியாக வேண்டும்....
கையில் இல்லாத அழுத்தம் pressure/stress மனதிலும் இருக்காது...
Ink pen உபயோகிக்க வேண்டும் என்று மேற்படி கோவில் களில் அர்ச்சகராவது எடுத்துச் சொல்லி /சொல்லுவார்கள்....
ஆண்டவன் ஸ்பரிசம் pen னுடன் தொடரும் என்று நம்புவோம்.
No comments:
Post a Comment