Saturday, February 2, 2019

துருவன்

துருவன் பத்தினி பிரமி யின் இளைய குமரன் வத்சரன்.
வத்சரன் மனைவி ஸ்வர்வீதி
இவர்களுக்கு 6 (ருத்துக்களோ?) பிள்ளைகள். அதில் மூத்தவன் புஷ்பார்ணனுக்கு பிரபை தோஷை என்ற இரு மனைவிகள்...
பிரபை க்கு பிராதன் மத்யந்தினன் ஸாயன் (நாளின் 3 காலங்கள்?!) என்ற மூன்று பிள்ளைகள்...
தோஷை க்கு பிரதோஷன் நிசிதன் வியுஷ்டன் (3 இரவு ஜாமங்களோ?!!) என்ற 3 பிள்ளைகள்...
வியுஷ்டன் மனைவி புஷ்கரணி ... இவர்கள் மகன் ஸர்வதேஜஸ்
சர்வதேஜஸ் மனைவி ஆகூதி இவர்கள் மகன் சக்ஷூஸ் என்கிற மனு
மனு மனைவி நட்வலா இவர்களுக்கு 12 (மாதங்களோ) பிள்ளைகள்... அதில் கடைசி உல்முகன்
உல்முகன் புஷ்கரணி என்பவளை மணந்து அங்கன் முதலான 6 பிள்ளைகள் பெற்றனர் ...
அங்கன் மனைவி ஸுநீதை இவர்கள் மகன் வேனன் மகா கொடூரன்... அதனால் அங்கன் நாடு துறக்க வேனன் மன்னனாக...
வேனன் நல்லோர் சாபத்தால் உயிர் துறக்க ... வேனன் இறந்த பின் ராஜா வேண்டுமே என்று இறந்த வேனன் தொடையை கடைந்து (க்ரோமோசோம்) அதில் இருந்து பாகுகன் (நிஷாதன்) என்ற அவலக்ஷணமான ஒருவனை தோற்றுவிக்க... அவனுக்கு ஆளுமை தகுதி இல்லாததால் மீண்டும் வேனன் சடலத்தின் கை பகுதியில் கடைந்து (க்ரோமோசோம்) விஷ்ணு திருமகள் அம்சமாக ப்ருது என்ற ஆண் மற்றும் அர்சிஸ் என்ற பெண்ணையும் உருவாக்கினார்... இவர்களே முதல் வம்ச கர்தாக்கள்....
ஆண் பெண் கூடல் இன்றி அந்த காலத்திலேயே ஹிந்து தர்மத்தில் குளோனிங் மூலம் பிரஜைகள் உருவாக்கப் பட்டது என்பதற்கான பீடிகை இது....
இனி, மீண்டும் அனுமன் மகன் குறித்த கதைக்குள் செல்வோம்...
தொடரும்... 
#எவர்கிங்_ஏகாம்பரம்

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...